Sunday, July 31, 2011

இன்றைய உலக பொருளாதார நிலை

இன்றைய உலக பொருளாதார நிலை         

           கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன.
ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது.
ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா, தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு, அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்?



இந்தியாவில் தற்போது இருக்கும் அளவுகடந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு இந்தச் சுழலும் ஒரு காரணம். ஏதோ தேவை அதிகரித்து, அதனால் பொருட்கள் விலை உயர்ந்தது என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் தற்போது, விலை உயர்வு விண்ணை முட்டவில்லை. இது அபாய அறிகுறி.நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம். அந்த நாடு தலைகீழாக நின்றாலும், எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா, எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம், அது வலுவான நாடு.

டாலர் - யூரோ போர்:அமெரிக்க டாலர், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த "யூரோ' என்ற ஐரோப்பிய கரன்சி ஆகிய இரண்டுக்கும் இடையே, தற்போது பெரிய போர் நடக்கிறது. அடுத்த சில நாட்களில், யூரோ மேலும் பலமிழக்கும். டாலருக்கு பதிலாக, சுவிஸ் பிராங்க் கரன்சி, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது. தற்போது காணப்படும் அபாயத்தில் தங்கம், கச்சா எண்ணெய், கோதுமை, சர்க்கரை, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் விலை, விநியோகம்- தேவை என்ற
கோட்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை.



அபாயத்தில் கிரீஸ், இத்தாலி:ஐரோப்பிய நாடுகளில், கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது; இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது. ஜெர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில், பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள், முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில், மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.

நிபுணர் கருத்து:இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது, ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ:உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (ஐ.எம். எப்.,) தந்த நிதியுதவிகள் எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை.தனியார்மயம் ஊழலை வளர்த்து, புதிய பணக்காரர்களை உருவாக்கி, முடிவில், அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக, உலகமயமாக்கல் தத்துவம், ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.




உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால், அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது.அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம், அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர், வேலை வாய் ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, நிபுணர் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார்.
இது ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலை அபாயமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது.-

Source: எம்.ஆர். இராமலிங்கம் Dinamalar

Thursday, July 28, 2011

இலங்கை ராணுவ வீரர் வாக்குமூலம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்: சேனல் 4-க்கு இலங்கை ராணுவ வீரர் அளித்த வாக்குமூலம்!

போரின் இறுதி நாட்களில், தமிழர்களைக் 'கண்டவுடன் சுட' ராணுவத்துக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலரும், ராஜபகஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே உத்தரவிட்டதையும், சரணடைந்த புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கு அவர் ஆணையிட்டதையும் அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர், சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், அப்பாவித் தமிழர்களை சித்ரவதை செய்து கொன்றது, சிறுவர்களைச் சுட்டு வீழ்த்தியது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியது என இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை நேரில் கண்ட படைவீரர் ஒருவர் விவரித்திருக்கிறார்.

'பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவதற்கு அவர் அனுமதி வழங்கியிருக்கிறார்,' என்று தனது படையினரிடையே கோத்தபய வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிரிகேடியர் ஷவேந்திர சில்வா (இப்போது மேஜர் ஜெனரல்) கூறியதை சேனல் 4 தொலைக்காட்சியிடம் சில்வாவுக்கு கீழே பணிபுரிய்ந்த இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சுட்டுத்தள்ள கோத்தபய உத்தரவிட்டதாக சில்வா கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ராஜபக்ஷே அளித்த உத்தரவாதத்தின் படி, ராணுவத்திடம் சரணடைய அணிவகுத்து வந்த புலிகளின் மூத்த தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முந்தைய தினம் தான் கோத்தபய ராஜபக்ஷே மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என சேனல் 4 செய்தி கூறுகிறது.

தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள்...

போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவப் படைவீரர்கள் செய்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படைவீரர்களுள் ஒருவராக இருந்தவருமான 'ஃபெர்னாண்டோ' என்ற ராணுவ வீரர் ஒருவரும் சேனல் 4-க்கு சில முக்கிய வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்.

அவர் சேனல் 4-க்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்:

"சக ராணுவ வீரர்கள் குத்துமதிப்பாக குடிமக்களை சுட்டுக் கொன்றனர். மக்களைக் கட்டி வைத்து வதைத்தனர். அவர்களின் நாக்குகளை அறுத்தனர். சிக்கிய பெண்களின் மார்பகங்களை அறுத்தனர். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமானதாக இருந்தது. சிறு குழந்தைகள் சடலமாக சிதறிக் கிடந்ததையும் இதே கண்களால் தான் பார்த்தேன்."

"எண்ணிலடங்கா குழந்தைகள் மட்டுமின்றி, வயது முதியோர்களும் கொல்லப்பட்டதை நேரில் கண்டேன்.

"தங்களைக் கடந்து சென்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி கொன்று குவித்தனர். அவர்கள் யாரும் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள் தான்."

"மருத்துவமனையில் தமிழ் இளம் பெண் ஒருவரை என் சகாக்கள் 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையையும் இந்தக் கண்களாலேயே பார்த்தேன்."

"பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்களை அடித்து துன்புறுத்திய பிறகே அவ்வாறு செய்வார்கள். அதைத் தடுக்க முற்படும் பெற்றோர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவர்."

மேலும் அவர் விவரித்துள்ள கொடூரங்கள், எழுத்துகளால் கூட பதிவு செய்வதற்கு உகந்தவை கிடையாது.
இதுதொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அண்மைச் செய்தியின் வீடியோ (சிறுவர்கள், பலகீன மனம் படைத்தோர் தவிர்த்துவிடுவீர்)





நன்றி : சேனல் 4 நியூஸ்

தமிழக எம்.பி.,க்களின் சமூக அக்கறை

     கேரள எம்.பி.,க்கள் "கிரேட்'; நம்ம எம்.பி.,க்கள் "வேஸ்ட்!' - எஸ்.ஆர்.எம்.யு., தலைவர்   --  ராஜா ஸ்ரீதர் 


     எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 88 ஆயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய மாபெரும் தொழிற்சங்கம். தொழிலாளர்களுக்காக மட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வேயின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. இதன் தலைவராக பத்தாண்டுக்கும் மேலாக பணியாற்றும் ராஜாஸ்ரீதர், அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் அகில உலக போக்குவரத்து சம்மேளனத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ரயில்வே துறையின் போக்கு, தமிழக எம்.பி.,க்களின் சமூக அக்கறை என பல விஷயங்கள் குறித்தும் அவர் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

எஸ்.ஆர்.எம்.யு., அமைப்பின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

அகில இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் இணைப்புச் சங்கமாக எஸ்.ஆர்.எம்.யு., செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற்று, தொடர்ந்து அங்கீகாரத்தைப் பெற்று வருகிற தொழிற்சங்கம் இதுவே. தேர்தலுக்குப் பின், மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொரு தேர்தல் வந்தால், நாங்கள் மட்டுமே ஒரே தொழிற்சங்கமாக அங்கீகாரம் பெறுவோம் என்று நம்புகிறோம்.

அமைப்பின் கோரிக்கைகள், எந்த அளவுக்கு வென்றெடுக்கப்பட்டுள்ளன?

எதுவும் இதுவரை தோற்கவில்லை. பேச்சுவார்த்தையிலேயே இதுவரை 50 சதவீத கோரிக்கைகளை வென்றுள்ளோம். புதிய சம்பள கமிஷனுக்குப் பின், ரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் ஏ.சி., மூன்றாவது வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். 57 வயதான ரயில்வே தொழிலாளர், விருப்ப ஓய்வு பெற நினைத்தால், அவரது மகனுக்கோ, மகளுக்கோ வேலை தரவேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு வேலை என்ற கோரிக்கையை மம்தா ஏற்றுக் கொண்டார்; போர்டு ஏற்கவில்லை. காலத்துக்கேற்ப எங்கள் கோரிக்கைகள் மாறும்; தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடுவதே இந்த அமைப்பின் அடையாளம்.

பணியிடங்கள் நிரப்பப்படாததால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ரயில்வே துறையில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன; அவற்றில், ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணியிடங்கள், பயணிகள் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையவை. சி.ஏ.ஜி., அறிக்கையும் இதைத் தெளிவு படுத்தியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எங்கள் அமைப்பு, தொடர்ந்து போராடுகிறது. பழைய பணியிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகின்றனர். புதிய ரயில்களுக்கான பணியிடங்களைப் பற்றி, ரயில்வே நிர்வாகம் யோசிப்பதே இல்லை. புதிய ரயிலை இயக்கும்போது, அதற்குரிய டிக்கெட் பரிசோதகர், கார்டு பணியிடங்களை உருவாக்க வேண்டுமென்கிறது ரயில்வே விதி; ஆனால், அது கடை பிடிக்கப்படுவதேயில்லை.

பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்கள் உள்ளன?

அத்தியாவசியமான பராமரிப்புப் பொருட்களுக்குக் கூட நிதி ஒதுக்குவதில்லை; பராமரிப்புப் பணியாளர்கள் இல்லை. உதாரணமாக, கோவை - சென்னை இடையே இயக்கப்படும் "துரந்தோ எக்ஸ்பிரஸ்' புது ரயில் என பலரும் நினைக்கின்றனர். அது, 1994லிருந்து வேறு பகுதியில் இயக்கப்பட்ட "ரேக்' ஆகும். அதில், வயர்கள் தொங்குகின்றன. இப்படிப்பட்ட சின்னச்சின்ன குறைகளும் பயணிகளுக்கு அச்சுறுத்தல்தான். பராமரிப்புப் பணியாளர் இல்லாததால் ஏற்படும் குறைபாடுக்கு, சில நேரங்களில் பெரிய விலை தர வேண்டியிருக்கும்.

தெற்கில் வரும் வருவாயைக் கொண்டு, வட மாநிலங்களில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று நமது எம்.பி.,க்கள் குற்றம் சாட்டுகின்றனரே...

தவறான குற்றச்சாட்டு. இயக்க விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால், வடக்கில் 92 ரூபாய் செலவு செய்தால், 100 ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. தெற்கு ரயில்வேயில், 120 ரூபாய் செலவு செய்து, 100 ரூபாய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. ரயில்வே வருவாயில் 70 சதவீதம், சரக்குப் போக்குவரத்திலும், மீதி பயணிகள் போக்குவரத்திலும் கிடைக்கிறது. வட மாநிலங்களில் தோல், இரும்பு, பெட்ரோலியம் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் சரக்கு வருவாய் அதிகம். தமிழகத்தில் அத்தகைய பெரிய தொழிற்சாலைகள் வரவில்லை. அதனால், சரக்கு வருவாய் ரொம்பவும் குறைவு. பயணிகள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், இந்திய ரயில்வேக்கு நஷ்டம் 20 ஆயிரம் கோடி ரூபாய். சரக்கு போக்குவரத்தில் கிடைக்கிற வருவாயை, பயணிகள் போக்குவரத்துக்குத் திருப்புவதால்தான் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை நடத்த முடிகிறது. லாபம் ஈட்டாத தென்னக ரயில்வேக்கு எதற்கு புதிய ரயில்களைத் தர வேண்டும் என்ற எண்ணம், டில்லியில் இருப்பவர்களிடம் இருக்கிறது என்பது உண்மைதான்.

மறைமுகக் கட்டணத்தால்தான், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை என்ற புகார் பற்றி...

லல்லு இருந்தபோது, ஒரு ரூபாயை டிக்கெட் கட்டணத்தில் குறைத்து, "சூப்பர் பாஸ்ட்' என்ற பெயரில், அதே ரயில்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தை உயர்த்தினார். ரிசர்வேஷன் சார்ஜஸ் என்ற பெயரிலும் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனால், பெரிய வருமானம் கிடைக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

தெற்கு ரயில்வேயில் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழகம் குறிப்பாக புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி...

கேரளாவைப் பொறுத்தவரை, அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதான அக்கறையும், பயமும் அதிகம். என்னவொரு தேவை, பிரச்னை என்றாலும், அங்குள்ள எம்.பி.,க்கள் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் இருக்கிற எம்.பி.,க்கள் இதுவரையிலும் எந்தவொரு விஷயத்துக்காகவும் ஒன்று பட்டு குரல் எழுப்பியதில்லை; மாறாக, ஏட்டிக்குப் போட்டியாகத்தான் பேசுகின்றனர். தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் இதுவே.

நமது எம்.பி.க்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்...?

இப்போது டி.ஆர்.பாலுதான், நிலைக்குழுத் தலைவராக இருக்கிறார். தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அவரது தலைமையில் அ.தி.மு.க., கம்யூ., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளின் எம்.பி.,க்களும் சேர்ந்து போய், பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் பேசினால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும்.

ரயில்வே கேபினட் அமைச்சர், தமிழகத்துக்குக் கிடைத்தால் மாற்றம் வருமா?

வாய்ப்புண்டு. இணை அமைச்சராக இருந்தபோது, ஏதோ சில திட்டங்கள் கிடைத்தன. கேபினட் அமைச்சர் பதவி கிடைத்தால், நிச்சயமாக தமிழகத்துக்குக் கூடுதல் திட்டங்களைக் கொண்டு வர முடியும். யார் வருவார்?

-----------------

   நமது எம் பி க்களுக்கு "தலைமை" இட்ட கட்டளைப்படி "சுருட்டவே" நேரம் பத்தல.. இதுல எங்க மக்களுக்காக குரல் கொடுக்கிறது..??   என்னைக்கு கட்சி பாத்து, ஜாதி பாத்து மதம் பாத்து ஒட்டு போடுறது நின்று நல்ல மனுசன பாத்து ஒட்டு போடுறது வருதோ, அது வர, நமக்கு வர்ற எம்பிக்கள் எம் எல் ஏக்கள் இப்படித்தான் இருப்பார்கள்....

Wednesday, July 27, 2011

கானல்நீரா கல்வி

வருங்கால டாக்டருக்கு உதவி தேவை!


எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.






ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

இச்செய்தியை ச‌க‌வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் வெளியிட்டு அர‌சின் க‌வ‌ன‌த்திற்க்கு கொண்டு செல்லலாமே..

நன்றி: இந்நேரம்.காம்

Tuesday, July 12, 2011

இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி

இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி பலரும் கண்டுகொள்ளாதது ஏன்?

               இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது.


                         பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்பின்னரே, பிரச்னையின் சூடு குறைந்தது. அதேநேரத்தில், அன்றைய பேட்டியில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் கூறியதை, பத்திரிகைகள் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. அதுபற்றி பெரிய அளவில் செய்தி வெளியிடவும் இல்லை. அத்துடன், பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசு தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போர், 2009ல் முடிவுக்கு வந்தது. அதன்பின் இப்போது தான், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் வெளிப்படையாக அழுத்தமான கருத்தைக் கூறியுள்ளார்.

இந்திய - இலங்கை உறவு என்பது வெளிப்படையாக குறைகூறி விமர்சிப்பது என்பது கயிறுமீது நடப்பது போல தந்திரம் அதிகம் தேவைப்படும் விஷயம்.

       பிரதமர் அளித்த பேட்டி விவரம்:
                              இலங்கையைப் பொறுத்தவரை, சிங்களர்களின் இனவெறி ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு, தமிழர்கள் சமமான மதிப்பு, மரியாதையுடன் வாழ முடியவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னையில், தமிழகத்தை இந்திய அரசின் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.
இந்தியாவின் இலங்கை கொள்கை, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் விதமாக அமையவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்பது உண்மையே. தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், ராஜபக்ஷேயை கண்டித்தும் போடப்பட்ட தீர்மானம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய - இலங்கை உறவில் உள்ள நெருடல்களைப் புரிந்து கொண்டு இப்பிரச்னை குறித்து தீர்மானம் இயற்றியுள்ளனர். விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மை தான். ஆனாலும், அதனால் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏராளமான மனக்குறைகள் உள்ளன. தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

                  இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பல நேரங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள், பிரதமர் தன் பேட்டியின் போது, இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ராஜபக்ஷே அரசை அவர் விமர்சித்தது மட்டும் அல்ல, தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையையும் ஏற்றதுடன், இந்த விஷயத்தில் அதிபர் ராஜபக்ஷே அத்துமீறலைக் கண்டித்த அமெரிக்க அரசின் தூதரகத் தகவலையும் பிரதமர் ஆதரித்திருப்பது முற்றிலும் வித்தியாசமானது. இந்த விமர்சனத்திற்கு ராஜபக்ஷே அரசும் பதில் அளிக்கவில்லை. இதிலிருந்தே, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையே என்பது தெளிவாகிறது.

Source: dinamalar.

Friday, July 8, 2011

Exercise

Which Exercise for Which Muscle Group. 








































Which Exercise for Which Muscle Group













Which Exercise for Which Muscle Group












Infolinks

ShareThis