Friday, March 2, 2018

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது? - மதம்..அதிகார போட்டி..




           சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், Jordan, கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 10% ஷியாமுஸ்லிம்,  16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுகிறார்.



         சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். சிரியா நாட்டில் கடந்த 40 வருடமாக ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. 30 வருடம் ஹபீஸ் ஆட்சி செய்தார். கடந்த 10 வருடமாக அவரது மகன் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடக்கிறது. இவர்களை தாண்டி அந்த நாட்டில் எதிர்க்கட்சி, இயக்கங்கள் என எதுவுமே இல்லை.  ஆனால் கடந்த 10 வருடங்களில் அந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. யாருக்கும் வேலை இல்லை , அரசியல் சுதந்திரம் இல்லை, பொருளாதாரம் சரிவானது, பலருக்கு கல்வி இல்லை. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


   என்ன என்ன முஸ்லிம் பிரிவு மக்கள் சிரியாவில் இருக்கிறார்கள்

சன்னி (Sunnis) - ஏறத்தாழ 70% இக்கும் மேல்
ஷியா (Shia) - ஏறத்தாழ10%

மீதம்
Salafis(சலாஃபி)
Yazidis (யாசிடி)
Alawis (அலாவிஸ் ) 10-30 லட்சம்
Druze - ~6 லட்சம்
Isma'ilism(இஸ்மாயில் இசம்) - ஷியா  வில் ஒரு பிரிவு (is a branch of Shia Islam)
Salafis

Religious groups include Sunnis, Christians, Alawites, Druze, Isma'ilis, Mandeans, Shiites, Salafis, Yazidis, and Jews. Sunni make up the largest religious group in Syria.


இவர்களை தவிர Kurds(குர்துஸ்) என்னும் ஒரு மதத்தை சார்ந்த மக்கள் 7% முதல் 10% வசிக்கிறார்கள்,(குர்துஸ் இஸ்லாம் மதமா என்பது இன்னும் நிரூபிக்க படவில்லை) - https://en.wikipedia.org/wiki/Kurds_in_Syria

 Kurds(குர்துஸ்) -  இவர்கள் பல ஆண்டுகளாகவே தனி நாடு(Kurdistan-குர்திஸ்தான் ) கேட்டு போராடி வருகின்றனர்.. குர்திஸ்தான் என்பது சிரியா மட்டுமல்ல - துருக்கி , ஈரான், ஈராக் ஆகிய நாடுகளின் சிறு பகுதிகள் சேர்த்து.- https://en.wikipedia.org/wiki/Kurdistan





சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார்.

    அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 98 சதவிகித வாக்குகளைப்பெற்று, நான்காம் முறையாக அதிபரானார் ஹஃபெஸ் அல் ஆசாத். பின்னர், இவருடைய இரண்டு மகன்களில் மூத்தவரான பசல் அல் ஆசாத்-தான் அடுத்த அதிபர் என மக்கள் நினைத்திருந்த நேரத்தில், கார் விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்தார்.

     ஷியா இயக்கத்தைச் சார்ந்த ஹஃபெஸ் அல் ஆசாத்தின் இளைய மகனான பஷர் அல் ஆசாத், தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். இவர் மீது கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தனிக்கவனம் செலுத்த முக்கியக் காரணம்...

  70 சதவிகிதத்துக்கு மேல் சன்னி பிரிவு மக்கள் வாழும் ஒரு நாட்டை, ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் ஆளுவது என நினைத்ததன் விளைவுதான் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கான ஆரம்பம்.




பஷர் அல் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

-----
ஐ.எஸ்.ஐ.எஸ்(SIS). அமைப்பு!

சிரியாவில் உள்நாட்டுப் போரானது, ஒரு மதத்தின் இரு பெரும் பிரிவுகளுக்குள்ளேயே (சன்னி(Sunni) - ஷியா(Shia) ) நடைபெறத் தொடங்கியது. இதிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் சிரியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பானது, தற்போது உலகம் முழுவதிலும் இயங்கிவருகிறது.

The Islamic State of Iraq and the Levant (ISIL) also known as the Islamic State of Iraq and Syria or Islamic State of Iraq and al-Sham (ISIS)

Arab Spring(அரபு வசந்தம் )

அப்போதுதான் (2011) அரபு வசந்தம் தொடங்கியது. அரபு நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தி வந்த பல நாடுகளில் புரட்சி நடந்தது. வரிசையாக பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது. அதை பார்த்த சிரியா மக்கள் தங்கள் நாட்டிலும் இப்படி மாற்றம் நடக்க வேண்டும் என்று புரட்சியில் இறங்கினார்கள்..

https://en.wikipedia.org/wiki/Arab_Spring#Syria



----

கடந்த 2015-ம் ஆண்டுவரை இந்த அமைப்பால் தனிப்பட்ட(சண்டையின் போது அல்லாமல் ) முறையில் 33,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பை அழிக்கும் நோக்கத்தில் சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த அமைப்புக்கு உலகில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றன.


போட்டித் தீவிரவாத அமைப்புகள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம்... இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

 இப்போது  சிரியாவில் எத்தனை  தீவிரவாத அமைப்புகள் இருக்கும்னு  நினைக்கிறீங்க ?
https://en.wikipedia.org/wiki/Portal:Syrian_Civil_War

100கும் மேற்பட்ட அமைப்புகள்

ஆனால் அமைப்புகள் கூட்டாக சேர்ந்து சண்டை இடுகின்றன...

முக்கியமா (தீவிரவாத)அமைப்புகள்..

1. Syrian Arab Republic and allies - (அரசு/ஷியா)
2. Syrian opposition and allies - (எதிர் கட்சிங்கள் அமைப்பு/சன்னி )
3. Democratic Federation of Northern Syria and allies- (குர்திஸ் மற்றும் வடக்கு பகுதி(தனி நாடு ) தீவிரவாத அமைப்புகள் )
4. Islamic State of Iraq and the Levant and allies - (ISIS /ISIL )
5. Salafi Jihadist groups/Tahrir al-Sham (Salafis-சலாஃபி தீவிரவாத அமைப்பு)
6. Hezbollah (ஷியா தீவிரவாத அமைப்பு)
7.CJTF-OIR (against ISIL - இவர்கள் ISIS ஐ மட்டும் எதிர்க்கிறார்கள் )

மற்ற தீவிரவாத அமைப்புகள் இவர்களில் யாராவது ஒரு அமைப்புடன் இணைந்து போரிடுகின்றன...


அடுத்து எந்த நாடு யாரை ஆதரிக்கிறது யாரை எதிர்க்கிறது..!

https://www.theguardian.com/world/ng-interactive/2015/oct/09/who-backs-whom-in-the-syrian-conflict
https://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Saudi_Arabia_proxy_conflict

சாத்துக்கு(அரசுக்கு ) ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான், முழு ஒத்துழைப்பையும் தந்துகொண்டிருக்கிறது. மேலும், தனது நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது.

அமெரிக்கா ஆசாத்துக்கு எதிராக எதிர் கட்சிங்கள் அமைப்புக்கு ஆதரவளிக்கிறது.

அதேபோல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு(தீவிரவாத அமைப்புகள் உட்பட )உதவி செய்துகொண்டிருக்கின்றன.

http://www.bbc.com/news/world-middle-east-39528673


யார் எந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் ...


https://www.aljazeera.com/news/2017/10/syria-opposition-alliances-171010075809951.html
https://en.wikipedia.org/wiki/Yemen



Infolinks

ShareThis