Monday, July 27, 2020

How India managing the Covid-19 irrespective of the high population?

How India managing the Covid-19 irrespective of the high population?



These are few measures govt India is practicing

1. Containment zones ( Area Isolation)(https://images.app.goo.gl/oPDCnw5d7uaBqmX68) .




2. Districts(~Counties) are classified as zones and restricted movement between zones(https://images.app.goo.gl/svhsewwVG8BMKtpRA),


3. Travelers tracing and supervised mandatory quarantine (https://www.bbc.com/news/world-asia-india-53218018)


4. Contact tracing(https://www.voanews.com/covid-19-pandemic/contact-tracing-limits-covid-19-cases-northern-indian-state)


5. E-pass - you need to get an e-pass to travel between Districts/counties and mandatory quarantine even if you travel between districts.(https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/may/31/tamil-nadu-government-makes-e-pass-mandatory-for-inter-zone-and-inter-state-travel-2150450.html)


6. Lockdowns


7. Home/Special facility/Hospital quarantine for COVID +vs and close contacts and.


0. Wearing a mask is mandatory!!! (https://www.thehindu.com/news/cities/chennai/masks-are-mandatory-for-all-now/article31400601.ece). -


These are the few measures I am heard of, could be more as these measures vary from state to state.

more read :- (https://theprint.in/india/more-testing-new-containment-quarantine-strategies-how-tamil-nadu-is-tackling-covid-spurt/431496/ )

Wednesday, April 8, 2020

நெடுநல்வாடை


            தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். 



போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் குறித்து நெடுநல்வாடையில் கூறப்பட்ட வருணனையை எளிய தமிழில் அழகாக விவரிக்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.






நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !!



முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல் நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள் பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று. ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.
இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும் நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று அறியப்படுகின்றது.
பதித்துப்பாட்டில் முதலாவதாக வைத்துக் கூறப்படும் திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. மேலும் அகநானூறு, முதலிய தொகை நூல்களுள்ளும் இவர் இயற்றிய செய்யுள்கள் பல உள்ளன. கைலைபாதி காளத்திபாத்தியந்தாதி, இறையனார் அகப் பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், நாலடி நாற்பது என்னும் நூல்களும் இவர் இயற்றிய நூல்களே.
இந்த நெடுநல்வாடை என்னும் நூலை இவர் காலத்து சிறப்புற்று விளங்கிய புரவலனாகிய தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வெற்றியை புகழ்ந்து எழுதியுள்ளார். இந்த மன்னன் இளமைப் பருவத்திலேயே அரசுகட்டில் ஏறினான். அந்த பருவத்தில் இவனை வீழ்த்தி விடக்கருதிய மூவேந்தரும், குறுநில மன்னரும் ஒருங்குகூடி இவனை எதிர்த்துப் போரிடக் கிளப்பினர். சிறு வயதாக இருந்த போதும் அஞ்சாது தலையாலங்கானம் என்னுமிடத்தே அப்பகைவர்கள் அனைவரையும் எதிர்த்து போர் செய்து வாகை சூடினான்.
இந்த மன்னன் நல்லிசைப் புலவராகவும் விளங்கினார் என்பதனை, நகுதக்கனரே (புறம் 72) எனது தொடங்கும் இவன் செய்யுளால் அறியலாம். நெடுநல்வாடை என்னும் இப்பாட்டிற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு முன்னுரை எழுதுகின்றார்.
“இப்பாட்டிற்கு நெடுநல்வாடை என்று பெயர் கூறினார். இப்பெயர் நெடிதாகிய நல்ல வாடை என விரித்தலின் பண்புத்தொகையாயிற்று. வாடையென வாடைக் காறிற் றோன்றினா கூதிர்ப் பாசறையை உணர்த்தலிற் பிறந்த வழிக் கூறலென்னும் ஆகுபெயராய் நின்றது. இப்பாட்டினுள் “கூதிர் நின்றற்றார்போதே” எனவும், “கூதிர்ப் பானாள்” எனவும் கூறுகின்றாராதலின், இது “வாகைதானே பாலையது புறனே” எனப் பாலைக்கு புறனாக கூறிய வாகையாய் அதனுள், “கூதிர்வெனில்” என்றிரு பாசறைக்காதலின் ” ஒன்றிக் கண்ணிய மரபினும்” எனக் கூறிய தலைவிக்கு, ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருள் உணர்த்திற்று. அகத்தொடுங்கிப் போகம் பொதுச் சொற் பொறானாய் அப் போகத்தில் மனமற்றுப் வேற்றுப் புலத்துப் போந்திருந்த இருப்பாகலின் அவற்று நல்லதாகிய வாடையாயிற்று. எனவே காமாத்திடத்து வெற்றி எய்தலின் வாகைத் திணையாயிற்று. இப்பாட்டு சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும், “வேம்பு தலையாத்த நோன்காழ் எகம் என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று” என்பதாம் என்கின்றார்.

Thanks http://siragu.com/

Infolinks

ShareThis