Posts

Showing posts with the label கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர்

கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர்

Image
கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் பொன்னேரி: ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இச்சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்கவும், சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நிதியை கொண்டு, இக்கல்வி நிலையத்தை நடத்தி வருகிறார். இவரது சேவையை கண்டு பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவியை அளித்து வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து இலவசமாக பணம் வாங்குவதை தவிர்க்க தன்னுடைய உடல் உழைப்பால் அவர்களது காலணிகளை சுத்தம் செய்து, அவர்களிடமிருந்து நிதி பெறுகிறார். கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலில் ஆதரவற்றோர்களுக்கும், உடல் இயலாதவர்களுக்கும் தேவ...