Posts

Showing posts with the label elam

இலங்கை ராணுவ வீரர் வாக்குமூலம்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்: சேனல் 4-க்கு இலங்கை ராணுவ வீரர் அளித்த வாக்குமூலம்! போரின் இறுதி நாட்களில், தமிழர்களைக் 'கண்டவுடன் சுட' ராணுவத்துக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலரும், ராஜபகஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே உத்தரவிட்டதையும், சரணடைந்த புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கு அவர் ஆணையிட்டதையும் அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர், சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், அப்பாவித் தமிழர்களை சித்ரவதை செய்து கொன்றது, சிறுவர்களைச் சுட்டு வீழ்த்தியது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியது என இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை நேரில் கண்ட படைவீரர் ஒருவர் விவரித்திருக்கிறார். 'பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவதற்கு அவர் அனுமதி வழங்கியிருக்கிறார்,' என்று தனது படையினரிடையே கோத்தபய வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிரிகேடியர் ஷவேந்திர சில்வா (இப்போது மேஜர் ஜெனரல்) கூறியதை சேனல் 4 தொலைக்காட்சியிடம் சில்வாவுக்கு கீழே பணிபுரிய்ந்த...

இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி

Image
இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி  பலரும் கண்டுகொள்ளாதது ஏன்?                இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது.                          பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்பின்னரே, பிரச்னையின் சூடு குறைந்தது. அதேநேரத்தில், அன்றைய பேட்டியில், இலங்கைத் தமிழர் விவகாரம் க...

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்

Image
புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்த ரகசிய "சிடி' ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் - வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்.                 கடந்த 10 ம் தேதி ம.தி.மு.க. , தலைமை அலுவலகமான தாயகத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் தலைவர்கள் சிலர் ரகசியமாக வந்தனர். அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்ற தகவலை வைகோ கடைசி நிமிடம் வரை தெரிவிக்கவில்லை. அனைவரையும் கட்சி அலுவலகத்தில் உள்ள மாடி அறைக்கு வைகோ அழைத்துச் சென்றார். அந்த அறைக்குள் இருந்த அனைத்து விளக்குகளும் திடீரென அணைக்கப்பட்டன. பெரிய "டிவி ' யில் "சிடி ' ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த "சிடி ' யை அனைவரும் அமைதியாக பார்த்தனர். அரை மணி நேரம் அந்த "சிடி ' காட்சி ஒளிபரப்பான பின் , விளக்குகள் எரிய வைக்கப்பட்டன. "சிடி ' யை பார்த்த வைகோ உள்ளிட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. வீட்டிற்கு புறப்பட்ட அவர்களிடம் , தனித்தனியாக "சிடி ' க்களை வைகோ வழங்கினார். ஒவ்வொரு தமிழரும்,மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம். இதைத் தமிழர்...

கோவையில் விரட்டியடிக்கப்பட்ட இலங்கை அமைச்சர், எம்பி!!

Image
கோவையில் விரட்டியடிக்கப்பட்ட இலங்கை அமைச்சர், எம்பி!!      கோவை: இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர். கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் இருந்தனர். இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் கடும் கோபம் அடைந்தனர். ‘ஈழத்தில் நம் தமிழ்ச் சொந்தங்களை ஆயிரக்கணக்கில் கொன்று, மிச்சமிருப்பவர்கள் வாழ வழியில்லாம...