Posts

Showing posts with the label enthiran review

எந்திரன் திரைவிமர்சனம்

Image
எந்திரன் -The Robot  திரைவிமர்சனம் ரோபோவை(robo) மனிதன் போல (humanoid robots) தயாரிக்கும் விஞ்ஞானி அதன் பிறகு நடக்கும் விளைவுகளை கூறும் படமே இது. ரஜினியிடம் இருந்து இப்படி ஒரு படம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிவாஜியில் விட்டதை ஷங்கர் இதில் பிடித்து விட்டார். அதாவது அவரது படங்கள் அனைத்தும் ஷங்கர் படம் என்று கூறப்படும் சிவாஜி மட்டும் அதில் விதி விலக்கு. இதில் என்ன செய்வார் என்று ஆவலாக இருந்தேன். இதில் அவர் இது ஷங்கர் படம் என்று நிரூபித்து விட்டார் கடைசி அரை மணி நேரம் தவிர ஆனால் கடைசி அரைமணி நேரம் அதன் முன்பு உள்ள மொத்த ஷங்கர் படத்தையும் ரஜினி தூக்கி சாப்பிட்டு விட்டார் கிராபிக்ஸ்( graphics ) தவிர்த்து. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ரஜினிக்கு இதில் அறிமுகப்பாடல் இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயிச வசனங்கள் இல்லை அனாவசியமான எந்த காட்சியும் இல்லை. ரஜினியின் அறிமுகமே எந்த வித பில்டப்பும் இல்லாமல் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா! வேறு வழி இல்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ரோபோவாக வரும் சிட்டி வந்ததில் இருந்து படம் கலகலப்பாக போகிறது. அவர...