இலங்கை ராணுவ வீரர் வாக்குமூலம்!
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்: சேனல் 4-க்கு இலங்கை ராணுவ வீரர் அளித்த வாக்குமூலம்! போரின் இறுதி நாட்களில், தமிழர்களைக் 'கண்டவுடன் சுட' ராணுவத்துக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலரும், ராஜபகஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே உத்தரவிட்டதையும், சரணடைந்த புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கு அவர் ஆணையிட்டதையும் அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர், சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், அப்பாவித் தமிழர்களை சித்ரவதை செய்து கொன்றது, சிறுவர்களைச் சுட்டு வீழ்த்தியது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியது என இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை நேரில் கண்ட படைவீரர் ஒருவர் விவரித்திருக்கிறார். 'பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவதற்கு அவர் அனுமதி வழங்கியிருக்கிறார்,' என்று தனது படையினரிடையே கோத்தபய வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிரிகேடியர் ஷவேந்திர சில்வா (இப்போது மேஜர் ஜெனரல்) கூறியதை சேனல் 4 தொலைக்காட்சியிடம் சில்வாவுக்கு கீழே பணிபுரிய்ந்த...