Guinness Book of Records business
உலக சாதனைகளை வெளியிடும் கின்னஸ் (Guinness ) நிறுவனம், வியாபார சாதனைகள் பற்றியும் ஒரு புத்தகம், "கின்னஸ் புக் ஆப் பிசினஸ் ரிக்கார்ட்' என்று வெளியிட்டிருக்கிறது. சாம்பிளுக்கு சில வியாபார சாதனைகள்:
* உலகில் மிகவும் அதிகமானவர்களை வேலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், "இந்திய ரயில்வே!'
* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்(General motors). ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.
* உலகில் மிகவும் பழைய நிறுவனம்:
"ஸ்டோரா கோப்பார்–பெர்க் பெர்க்ஸ்லாக்'(Stora Kopparbergs Bergslags)
என்ற நிறுவனம். மரம், உலோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் இது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ளது இந்த நிறுவனம்.
* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர்(Patent Register) செய்து இருப்பவர்; தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.
* அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம்: ஜப்பானின், "ப்யூஜி பாங்க்!'Fuji Bank.
* உலகில் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான்.டி.ராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள்.
* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் 38 மணி 2 நிமிடங்கள் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரின் அளவு.
* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்ட மாற்றுதல் என்ன தெரியுமா?
1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து, பத்து போயிங் 747 (Boeing 747) விமானங்களை பெற்றது தான்.
No comments:
Post a Comment