Friday, March 25, 2011

SMSல் மருந்துகளின் நம்பகத்தன்மை

இனி எஸ்.எம்.எஸ்.சில் (SMS)  மருந்துகளின் நம்பகத்தன்மை




 
          உயிர்காக்கும் மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் மூலம் அறிந்துகொள்வதற்கான வசதியை பார்மாசெக்யூர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.சமீபத்தில், தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான போலி மருந்துகள் கைப்பற்றதோடு மட்டுமல்லாது, சென்னையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த குடவுனிற்கும் ‌போலீசார் சீல்வைத்தனர். இதுவரை, மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்த மருந்துகள் போலியானவை என்ற தகவல் தெரிந்தபின், மக்கள் பேரதிர்ச்சிககு உள்ளாயினர். 

            இதன்பிறகும், மக்களால் எது உண்மை? எது போலி என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியாதவண்ணமே உள்ளது. இந்நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணித்து, அவர்கள் போலி மருந்துகளை விற்பனை செய்கி்ன்றனரா? காலாவதியான மருந்துகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் வண்ணம் பார்மாசெக்யூர் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம், இதுவரை 50க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரத்யேக கோடு வழங்கியுள்ளது. பார்மாசெக்யூர் நிறுவனம் வழங்கும் இந்த பிரத்யேக கோடை பெறும் நிறுவனங்கள், நம்பிக்கைக்கு உரியது என்று கருத்தில் கொள்ளலாம். 

                   அத்தகைய சிறப்புடைய இந்த பார்மாசெக்யூர் நிறுவனம், விரைவில் மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்து எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்களின் மூலம் நம்பகத்‌தன்மை குறித்த விபரங்களை மக்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பார்மாசெக்யூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நாதன் சிக்வொர்த் கூறியதாவது, இதன்மூலம், போலி மருந்துகள் விற்பனை தடுக்கப்படும் என்றும், மக்கள் நிம்மதியாக மருந்துகளை பயன்படுத்தி தங்களின் உடல்நலக் குறைபாடுகளை போக்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். 

                 இதுகுறித்து, பார்மாசெக்யூர் நிறுவனத்தின் இயக்குனர் கிஷோர் ஃகார் கூறியதாவது, மக்கள், தாங்கள் பயன்படுத்தும் மருந்தின் நம்பகத்தன்மை குறித்து அறிய, அந்த குறிப்பிட்ட மருந்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள பிரத்யேக கோடை 9901099010 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால், அந்த மருந்து குறித்த விபரங்கள் தங்களை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார். 


Source:Dinamalar

Infolinks

ShareThis