Wednesday, September 7, 2016

பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!




பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!: பெரிய, பணக்கார மாநிலங்கள் எனும் பட்டியலில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் மேல்நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றன.




1960-ல் மேற்கு வங்கத்தில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.390 ஆக இருந்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.330. 2014-ல் ஒரு சாமானிய மேற்கு வங்கக் குடிமகனின் ஆண்டு வருவாய் ரூ.80,000. தமிழ்நாட்டிலோ அது ரூ.1,36,000. 1960-ல் ஏழை மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. தென் மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை ஏழ்மை நிலையிலிருந்து பணக்கார நிலைக்கு வெகுவேகமாக முன்னேறின. அதே வேளையில், மேற்கு வங்கமும் ராஜஸ்தானும் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்து வெகு வேகமாகக் கீழே சரிந்தன. இந்த 12 மாநிலங்களில் பெருவாரியான மாநிலங்கள் 1960-ல் கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் இருந்தன. அதற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் இம்மாநிலங்களில் சில தீவிரமான முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டதால், தர வரிசைப் பட்டியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.


பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!
:

No comments:

Post a Comment

Infolinks

ShareThis