Monday, August 26, 2019

விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (Permanent (adult) teeth) விழுந்து விட்டால்..


         விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (
Permanent (adult) teeth)  விழுந்து விட்டால்..       


                விபத்தினாலோ அல்லது குழந்தைகள் விளையாடும் போது கிழே விழுவதாலோ விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (Permanent (adult) teeth)  விழுந்து விட்டால்..
             விழுந்த (பிடுங்கி கொண்டு வந்த) பல்லை உலர விட கூடாது... உடனடியாக அதை அதன் இடத்தில் சரியாக பொறுத்திவிட வேண்டும். அப்படி பொருத்தும்போது அந்த பல் மீண்டும் ஒட்டி உயிர் பெற்றுவிடும். அப்படி பொறுத்த முடியவில்லை அல்லது சரியாக பொருந்தவில்லை எனில் பல்லை உமிழ்நீரில்(எச்சில்) அல்லது பால்/இளநீரில் வைத்து உடனடியாக பல் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும். (இதற்க்கான தனி திரவம் கூட கிடைக்கிறது). 

உடனடியாக  (எவ்வளவு விரைவாக  முடியுமோ அவ்வளவு விரைவாக) பல் மருத்துவரை அணுகி அந்த பல்லை அதன்  இடத்தில் பொருத்த வேண்டும். இதனால் அந்த பல் மீண்டும் உயிர் பெற ~95% வாய்ப்பு உள்ளது...
கால தாமதம் அந்த பல் நிரதராமாக இறக்க... இழக்க நேரிடும். 


பல் பிடுங்கிக்கொண்டு பிடுங்கி(உருவி)க்கொண்டு வந்து விடுவது,பல் சூழ் எலும்பிலிருந்து பல் கழன்று கொள்வது,பல் இருந்த இடத்திலிருந்து முழுவதுமாய் வேருடன் வந்திருக்கும்

பல் வேர் பகுதி மட்டும்  உடைவது


சிகிச்சை 

இந்த வகை அடிபடுவதில் எல்லோரும் முதலில் பயந்து விடுவோம்
அடுத்து பிடுங்கிக்கொண்டு வந்த பல்லை என்ன செய்வது என்றும் தெரியாது

பிடுங்கி கொண்டு வந்த பல்லை உலர  விட கூடாது 

பல்லை பால், இளநீர்    போன்றவற்றில் மட்டும் வைத்து எடுத்து செல்ல வேண்டும் 
இதற்க்கான தனி திரவம்  கூட  கிடைக்கிறது 

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பல் மருத்துவரை அணுகி அந்த பல்லை அதை இடத்தில்  நிலை நிறுத்த வேண்டும் 
 கால தாமதம் அந்த பல் நிரதராமாக இறக்க ....இழக்க நேரிடும்  


Ref :- http://drumapathy.blogspot.com/2012/07/blog-post_17.html

No comments:

Post a Comment

Infolinks

ShareThis