Posts

Showing posts with the label tamil good blog

மனித நேயத்துக்கு ஒரு ‘பாலம்’!

Image
மனித நேயத்துக்கு ஒரு ‘பாலம்’! ‘பா லம்’ கல்யாணசுந்தரம் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர். அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர். பின்னர் ஒரு ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இவர் விகடன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல்வேறு அலுவல்கள் காரணமாக இவர் விகடன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே பலமுறை வந்து போயிருக்கிறார். என்றாலும், எனக்கு இவரோடு பேசிப் பழகும...