Wednesday, March 31, 2010

தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம்

தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம்

Front page news and headlines today
கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதியன்று தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை பெறுவதற்கு, முதல்வர் கருணாநிதி டில்லி வரவுள்ளார்.
 
அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.
 
பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது.
 
கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த நிதியாண்டில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களுக்கும் 3 ஆயிரத்து 980 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 50.22 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசுகள் 35 சதவீதமும் பங்களிப்பதாக தற்போது உள்ளது. இதை மாற்றி இரு தரப்பும் 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
 
கருணாநிதி 6ம் தேதி டில்லி வருகை : அடுத்த 2010-11ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, வரும் 6ம் தேதி டில்லி வருகிறார். முதல்வரின் வருகை அதிகாரப்பூர்மாக இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு துணை முதல்வரும் அதற்கு முந்தைய ஆண்டு நிதி அமைச்சர் அன்பழகனும் டில்லி வந்திருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நிதி ஒதுக்கீட்டை பெற முதல்வர் வரவுள்ளார். 7ம் தேதியன்று திட்டக்கமிஷன் அலுவலகம் சென்று முறைப்படி நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்துவிட்டு, 8ம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. மேலும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரையும் முதல்வர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 29, 2010

Tamil Version - Dr.APJ's letter to students Writing/Awaiting exams



Dr.APJ's letter to students Writing/Awaiting exams






My letter to students writing exams
18/Mar/2010 : India
My dear young friends,
You are writing exams and expecting the results. My best wishes for your success.
I have one advice for all of you based on my own experience of writing various examinations. I wrote five important exams in my educational period - ESLC (VIIIth Class), SSLC (Xth Class), Intermediate (XIIth Class), BSc, DMIT (aeronautical engineering). Most of the time, the outcome was not as per my expectations. I had to even loose one year due to a general paper leakage. Dear young friends, I am saying all this to you to bring in your mind that exams and exam results are not ultimate in life. If I don’t perform properly for the first time, I re-write and succeed. Hence, friends, I suggest you: success always brings happiness, but sometime we have to be prepared to go through some setback in examination due to many reasons. Dear young friends, I would like you to remember my teacher’s advice; “in life, we have to be prepared to go through certain unexpected problems. The problem should not become our captain. Students like you, should become the captain of the problem, defeat the problem and succeed”.
So, my dear young friends, the courage to succeed and courage to face unexpected problems are the unique qualities of the youth. If God is with us, who can be against? You will definitely succeed, go on trying. Do not get disheartened by temporary setbacks. Let me remind you, my dear young friends, a famous poem;
“When you wish upon a star,
Makes no difference who you are.
Anything your heart desires,
Will ultimately come to you.”
-

Friday, March 26, 2010

சரளமாக ஆங்கிலம்



சரளமாக ஆங்கிலம் பேசுவதுக்கான தடை கற்கள் என்ன?-வீடியோ



ஐந்தே நாளில் அறிவு ஜீவி ஆவது எப்படி ?


1 ... யாரவது ஒருவரை ( அபாயம் இல்லாதவரை ) கண்டபடி , திட்டி கொண்டே இருங்கள் .

2. தமிழர்கள் , புத்தகம் படிப்பது இல்லை... பளு பிலிம் போன்ற , தொலை காட்சியை பார்கிறார்கள் , என கண்ணீர் விடுங்கள்.... ஆனால், அவர்களுக்கு புரியும்படியோ,அவர்களுக்கு பயன்படும் படியோ, அவர்கள் பிரச்சினை பற்றியோ எதுவும் எழுதாமல், எதாவது லத்தீன் புத்தகத்தை படித்து விட்டு எழுதுங்கள்

3 நாட்டில் பல பிரச்சினை இருக்கும்போது, முதல்வர் கவலை இல்லாமல், விழ நடத்துகிறார் என்று கூறி, சமூக அக்கறையை காட்டுங்கள்... அனால் நீங்களும் மக்களுக்காக கவலை பட வேண்டியது இல்லை..யாரையாவது ஸ்பான்சர் செய்ய சொல்லி , போதையை ஏற்றி கொள்ளுங்கள்...

4 மறக்காமல், அந்த அனுபவம் பற்றி எழுதி, இலக்கியத்தை காப்பற்றுங்கள்

5. கடவுள் இல்லை என்று உரக்க சொல்லுங்கள்... முற்போக்கு அடையாளம் கிடைக்கும்... ஆனால், கடவுள் குற்றத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க, யாரவது சாமியார் காலில் விழுங்கள்

6. அந்த சாமியார், எதாவது சிக்கலில் மாட்டி கொண்டால், கொஞ்சம், கூட தயங்காமல், அவரை பற்றி ஆபாசமாக எழுதி, இலக்கியத்தை காப்ற்றுங்க,,பிறகு வேறு சாமியாரை பிடித்து கொள்ளலாம்..

7. உங்கள் இலக்கியம், பத்திரிகைகளுக்கு புரியாது என்பதால், யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்... எனவே, பெரிய பத்திரிகளை, திட்டுங்கள்... அந்த பத்திரிகைகளில் எழுதுவது பாவம்... அந்த பழம் புளிக்கும் என சொல்லுங்கள்...ஆனால், அவர்கள், கூப்பிட்டால், அதை மறுத்து, உங்கள் சுய மரியாதையை , நிலை நாட்டாதிர்கள்.. பெருமை பொங்க பேட்டி அளியுங்கள்..
. சினிமாவுக்கும் இது பொருந்தும்.வாய்ப்பு கிடைக்கும் வரை குறை கூறி கொண்டு இருங்கள்

8. உங்களிடம் வயதுக்ற்ற முதிச்சி இல்லை,என யாரும் கூறலாம்... கவலை வேண்டாம்... நான் இளைய தலை முறை எழுத்தாளர் என சமாளியுங்கள்...

9. இதை நிரூபிக்க, பள்ளி மாணவன் போல பேசுங்கள்... (அந்த பெண் என்னையே பாக்குறாட மச்சி.. எல்லா பொண்ணுங்களும் என் dress பாத்து அசந்துட்டாங்க என்பது போல் )

10 நூறு புத்தகம் கூட விற்காத நிலையிலும், உலகம் முழுதும் , என் புத்தகம் படிக்க படுகிறது என தைரியமாக சொல்லுங்கள்.. லத்தின் மொழியில் மொழி பெயர்க்க பட்டாள், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என ஒரு போடு போடுங்கள்..யாருக்கும் லத்தின் தெரியாது அல்லவா ?

மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான பின்னணி என்ன ??

மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான  பின்னணி என்ன ??


மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான செய்ததின் பின்னணி என்ன ??

ஒரு நேரடி ரிப்போர்ட்









இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்துள்ளது என மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இத்தகைய இன படுகொலைக்கு யார் காரணம் என்று தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது

விசாரணையின் முடிவு அதிரிச்சி அளித்துள்ளது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..

..
.
.

.

விஜயின் சுறா படம் வெளிவரும் தகவல் அறிந்ததும் மீன்கள் இத்தகைய தற்கொலை முடிவை எடுத்ததாக காப்பாற்றப்பட்ட ஒரு மீன் தகவல் அளித்துள்ளது

விவேகானந்தர்-25 [ஆனந்தவிகடன் தொகுப்பு]

விவேகானந்தர்-25 [ஆனந்தவிகடன் தொகுப்பு]

மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி!

  • நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது!
  • கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு இருந்துவிடேன்' என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது!
  • 'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்!
  • விவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. 'எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன்' என்று சொல்லியிருக் கிறார்!
  • சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொண் டவர். 'உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும்' என்பது அவரது போதனை!
  • 'கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?' -யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். 'பார்த்திருக்கிறேன்... உனக்கும் காட்டுகிறேன்' என்றுசொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே!
  • புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்!
  • விவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது!
  • விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர் தான் 'விவேகானந்தர்' என்ற பெய ரைச் சூட்டினார்!
  • ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல் கத்தாவுக்கும் இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி செய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது' என்ற திட்டம்வைத்து இருந்தார்!
  • கொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின் அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்!
  • ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர் மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது 'திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்' என்று மறுத்துவிட்டார்!
  • தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்!
  • 'எழுமின்... விழுமின்... குறிக் கோளை அடையக் குன்றாமல் உழைமின்' என்ற வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்!
  • வெற்றிலை, புகையிலை போடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என் னால் விட முடியவில்லை. பெரும் லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்!
  • புத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வரிவரியாக நான் படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன்' என்பார்!
  • அமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை. அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம்!
  • தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல் கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம் என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை!
  • 'நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள்' என்று மைசூர் மகாராஜா சொன்னபோது, 'நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?' என்று திருப்பிக் கேட்டார்!
  • 'பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான்!
  • அடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். 'ஆங்கில அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும்' என்று வெளிப்படையாகக் கோரிக்கைவைத்தார்!
  • விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 'சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும்' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்!
  • கலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி... ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். 'துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப் பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு வந்தார்!
  • 'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது' என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப் பார்க்கவைத்தது!
  • விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!
31-03-2010 ஆனந்தவிகடன் இதழில் வெளியான விவேகானந்தர் தொடர்பாக ஆக்கம்.

நன்றி: ஆனந்தவிகடன்
இறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு!




Thursday, March 18, 2010

ஆணியே புடுங்க வேண்டாம்.


ஆணியே புடுங்க வேண்டாம்...




நமது கிராமப்புறங்களில் வெட்டிவேலை செய்பவர்களை குறித்து கிண்டலடிக்கும் பிரபலமான பழமொழி ஒன்று உண்டு ""கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்..கிழவிய தூக்கி மனைல வைக்கறேன்னு"...அனேகமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புடுங்கறது எல்லாமே (மக்களுக்கு) தேவையில்லாத ஆணியாகத்தான் இருக்கும். பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் மக்கள் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக பல்வேறு பிரச்சனைகள் "குட்டிச்சுவர் " போல மறைதுக் கொண்டிருக்கும்போது அதை தகர்த்து முன்னேற்றத்திற்கான பாதையை சரிசெய்யாமல், அந்த குட்டிச்சுவரில் அடிக்கபட்டிருக்கும் பழைய ஆணிகளை (பு)பிடுங்குவதில் தங்களது வீரத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.அதிலும் தற்போதைய முதல்வரும், அவருடைய அடிப்பொடிகளும் (புதுசு,புதுசா கிளம்பறாங்கப்பா) தேவையில்லாத ஆணிய பிடுங்குவதில் வடிவேலையே மிஞ்சிவிடுவார்கள் (வடிவேலை வைத்தே "ஒரு" ஆணிய புடுங்கினது தனிக்கதை)

முதலமைச்சர் பதவியில் நீண்டகால அனுபவமுள்ள தமிழின தலைவருக்கு உலக தமிழர்களின் இன்னல்களை தீர்ப்பது என்பது பெரிய காரியாமாகவே இருப்பதில்லை.பல்வேறு வகையான விருதுகளை அடிக்கடி பெறுவதின் மூலமும், தனது உயிருனும் மேலான உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் எழுதுவதின் வாயிலாகவும், தனக்கு பிடிக்காதவர்களை சங்கத்தமிழில் வசைபாடுவதன் மூலமும் தமிழரின் துன்பங்கள் யாவற்றையும் ஓய்வில்லாமல் தீர்த்துவருகிறார். செயற்கரும் செயல்கள் பல செய்து களைத்து போய் ஓய்வெடுக்கும் நிகழ்வுகளையும் தமிழர் உயிரை காப்பதற்கே பயன்படுத்துகிறார். மேற்கண்ட உத்திகள் யாவையும் பின்பற்றப்பட்டு அவைகளும் பயனற்று ஏதாகிலும் பிரச்சனைகளை எதிர்கட்சிகளும், ஊடகங்களும் பெரிது படுத்தும்போது அவற்றை தீர்ப்பதற்கு அவர் பயன்படுத்தும் உத்திகள் அரசியல் சாணக்கியதனத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களாகும்.

பல வருடங்களாக 'வறண்டு' போய் கிடக்கும் பிரச்சனைகளான காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளாகட்டும், வாழ்வாதாரத்தை தேடி கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையினரையும், போர் விதிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்கும் பிரச்சனைகளாகட்டும்,.இதுதவிர எவையெல்லாம் மக்கள் மன்றத்தில் பெரும் விவாதங்களாக துவங்குகிறதோ அப்போதெலாம் அதனை 'ஏறக்கட்டும்' விதமாக உப்பு,சப்பில்லாத பிரச்சனைகளில் நேரடியாக அல்லது தமிழர் நலனுக்கு தங்களது உயிரையும் தர முன்வரும் அடிப்பொடிகளின் வாயிலாக தலையிட்டு ஒன்றுக்கும் உதவாத பிரச்சனைகளை பெரிதுபடுத்தி முக்கியமான பிரச்சனைகளை மறக்கடிக்க செய்வது கைவந்தகலை.

பெரிய அளவிலான எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ஏதுமின்றி தனது பதவியில் நீடித்திருக்க ஊடகங்கள் வாயிலாக நடத்தப்படும் இதுபோன்ற அட்டைக்கத்தி யுத்தங்களில் களப்பலியாக ஏதோவொரு சுமாரான பிரபலங்கள் மாட்டுவதுண்டு. தலைவரிடம் தங்கள் விசுவாசத்தை காட்டவும் அதன் மூலம் தங்களின் கடந்த கால அயோக்கியத்தனங்களை மக்களிடமிருந்து மறைக்கவும் ஆசைப்பட்டு இந்த அடிப்பொடிகள் செய்யும் அராஜக காமெடிகளுக்கு திரைமறைவிலிருந்து தலைவர் எழுதும் திரைக்கதைகள் சிறிது காலம் மிக பிரபலமாக இருந்து ஊடகங்களுக்கு தீனி போடும்.(திரைக்கதையின் இறுதியில் அடிப்பொடிகளின் ஆணியையே பிடுங்குவதுதான் ஆண்டி கிளைமேக்ஸ்)

நீண்....ட கால அரசியல் அனுபவமுள்ள ஒரு தலைவர் தனது குடும்பத்திற்க்காகவும், பதவிக்காகவும் 'ஜாக்குவார் தங்கம்' போன்ற அட்டைக்கத்திகளை கொண்டு "காய்ந்து போன குதிரைக்கு கொள்ளுக்கு பதில் வைக்கபுல்" என்ற ரீதியில் கடமைகளை செய்வதையும், குறிப்பாக தமிழையும், தமிழ் உணர்வுகளை குறிப்பிட்டு உசுப்பேற்றுவதை இனியாவது நிறுத்தலாம். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கன்னு இதுவரைக்கும் தமிழ் மக்களின் மீது அடிக்கப்பட்ட துருப்பிடித்த ஆணிகள் ஒன்றிரண்டையாவது 
புடுங்கி எறியலாம்..இல்லைனா....ஆணியே புடுங்க வேண்டாம்...

திருமண அழைப்பிதழ்


சோறும் சரக்கும் இலவசம்…


ஹலோ கார்க்கிதானே இது?
அது இது என்ற ஏகவசனம் வேண்டாம் தோழரே..நீங்கள் யார்?
உனக்கு ஏகன் வசனம் தாண்டா பிடிக்காது. ஏகவசனம் பழகின ஒன்னுதானே?
நீங்க பிளாகரா?
என்னடா உளர்ற? நான் சுதாகர்டா. CPT சுதாகர்.
டேய் மாம்ஸ்…
அதுக்கு மேல நாங்க பேசியதை எழுதினால் என் பிளாகை சன் டிவி ரேஞ்சுக்கும், என்னை நித்யானாந்தா ரேஞ்சுக்கும் நீங்கள் நினைத்து விடக் கூடுமென்பதால் இதோடு அதை விட்டுவிடுவோம். அவன் அழைத்த விஷயம் என்னவென்றால், அவனுக்கு கல்யாணமாம். அதுக்கு திருமண அழைப்பிதழ் போட வேண்டுமாம். நண்பர்களுக்கு மட்டும் அச்சடிக்கப் போகும் பத்திரிக்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய உத்தேசமாம். உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போலாமாம். பசிக்குதுன்னா ஹோட்டலுக்கு போலாமாம். வித்தியாசமன்னா கார்க்கியிடம்தான் போகனுமாம். எத்தன “மாம்”? ஸப்பா..இதனால்தான் அவனை நாங்க மாம்ஸ்ன்னு கூப்பிடுவோம்.ப்ளூரல்ன்னா(Plural) ”ஸ்” தானே சேர்க்கனும்?
சரி. நம்பி வந்துட்டான். என்ன மாம்ஸ் செய்யனும் என்றேன்.
மச்சி. நம்ம பசங்க, அப்புறம் ஏரியா பசங்களுக்கு மட்டும்  தான் இந்த இன்விடேஷன கொடுக்கப் போறேன். அதனால் அடிச்சு ஆடு. ஆனா பசங்க அப்படியே ஷாக் ஆகனும்.
அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா. அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடு
டொக்.
கபாலத்தில் கடம் வாசிக்க, அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.

சோறு போடறோம். வந்துடு மச்சி

எங்க :    சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM  ராஜேஷ்வரி மண்டபத்தில்

எப்ப : 25, ஏப்ரல் 2010, காலை 7.30 –9

என்ன : பூரி, இட்லி, வடை, பொங்கல், etc

ஏன் :           நானும், ரேவதி என்ற பொண்ணும் கண்ணாலம் கட்டிக்க போறோம். அதுக்காகத்தான். 
மெயில் பார்த்துட்டு அழைத்தான். வாய்ப்பே இல்லையென்று 4 முறையும், சான்ஸே இல்லையென்று 5 முறையும், அருமையென்று 6 முறையும் சொன்னான். அந்த சரக்கு மேட்டர் மாம்ஸ் என்றதற்கு அது உண்டு மச்சி என்றான். லூசுப்பையன். கார்டின் பின்புறம் அடிக்க வேண்டிய மேட்டரை படிக்கவில்லை போலும். நீங்களும் பார்த்திடுங்க.
கார்டுக்கு பின்னாடி போட்டிருக்கிற மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு, மண்டபத்துக்கு பின்னாடி இருக்கிற ரூமில் பேச்சுலர் பார்ட்டி உண்டு. வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அழைப்பிதழ் அவன் மாமனார் கண்ணிலோ, அவனுக்கு வாழ்வுத் தரப்போகும் பெண்ணின் கண்ணிலோ படாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.


Thanks to கார்க்கி

சென்னை ட்ரெக்கெர்ஸ் கிளப்


ட்ரெக் போலாமா !!!! சென்னை ட்ரெக்கெர்ஸ் கிளப் அமைப்பின் முதல் பிரம்மாண்டமான நிகழ்ச்சி


ட்ரெக் போலாமா !!!! சென்னை ட்ரெக்கெர்ஸ் கிளப் அமைப்பின் முதல் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.


சென்னை ட்ரெக்கெர்ஸ் கிளப்  இரண்டு ஆண்டுகளுக்கு மலையேற்றத்தில் ஆர்வமுள்ள சிலரால் சென்னையில் துவங்கப்பட்டது. இன்று இது தென்னிந்தியா முழுவதும் செயல்படுகிறது.  இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். வர இருக்கும் வார இறுதி நாட்களை பலர் திரை அரங்குகளிலும் மீதி சிலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திட்டமிடும்போது சென்னை ட்ரெக்கெர்ஸ் கிளப்- பின் அமைப்பாளர்கள் தென்னிந்தியாவில் எந்த ஊரில் அல்லது மலையில் ஏறுவது என்ற திட்டமிடுதலில் ஈடுபடுகிறார்கள். உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முயற்சியின் மூலம் மட்டுமே நாங்கள் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கிறோம்.  

எங்கள் அமைப்பினால் நடத்தப்பட்ட சில பயணங்கள் மற்றும் மலை ஏற்றங்கள் .

*       சமூக விழிப்புணர்வு ஏற்றம் - நலிவடைந்தோருக்கான பயணம்  - இது வரையிலும் 15 முறை நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

*       சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வேற்றுவது தொடர்பான ஏற்றம் - நோக்கம் TADA பாதுகாப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

*       சென்னையின் சுத்தமும் பசுமையாக்கலும் - சுமார் 20 கி.மீ தொலைவிலான கிழக்கு கடற்கரையோரத்தை சுத்தமாக பராமரிப்பது இதன் நோக்கம்.

எங்களது மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 6ம் தேதி 2010 அன்று சென்னை அண்ணா நகரில்  "ட்ரெக் போலாமா" என்ற நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளோம்.  இதன் நோக்கம்  சென்னை வாழ்  மக்களுக்கு ஒரு மாற்று பொழுதுபோக்காக ட்ரெக்/பயணம் என்ற ஒரு இனிய அனுபவத்தினை அறிமுகப்படுத்துவதும், இன்னும் பலரை எங்களுடன் சேர்த்துக்கொள்வதும் மட்டுமே.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் மாதிரி மலையேற்றம் போன்றவை காண்பிக்கப்பட உள்ளன.  புகைப்பட கண்காட்சி - இது வரையிலும் சென்னை மலையேற்றக் குழுவின் மூலமாக எது போன்ற வெற்றிகரமான நிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டும் விதமாகவும், எங்கள் அமைப்பில் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்கட்டும் விதமாகவும் அமையும். 

நிகழ்ச்சி நிரல் -

கருத்தரங்கமும் நேரடி விவரிப்பும் மலையேற்றத்தின் போது எது போன்ற கருவிகளையும் செயல்களையும் உள்ளடக்கியவாரு அமையும் என்று விளக்கிக் கூறுவது.

வழித்தடமறிதல் மற்றும் GPS பற்றிய பொது அறிவு பெறலும், தாவர மற்றும் விலங்கினங்கள் பற்றிய அடிப்படை அறிவு பெறுதல், மலையேற்றம்/திறந்த வெளித் தங்கல்/கூடாரம் அடித்தல், வழி தவறும் பொழுது தன்னை தக்க வைத்தலும் அதற்குரிய முதலுதவி சாதனங்களைப் பற்றி அறிதலும், ஹாம் ரேடியோ மற்றும் உடனடி செய்தி பரிமாற்றம் பற்றி அறிந்து கொள்ளுதல்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கும், சுற்றுபுறத்தில் வாழும் மக்களுக்குமான நேரடி விவரனை மலையேற்றத்திற்கென அமைந்த கருவிகளை காட்சியப் படுத்தி விளக்குதல்.

மேலும் சென்னை சுத்தமும் பசுமைபடுத்தலும் என்ற குடையின் கீழ் சென்னை முழுதுமாக மரக் கன்றுகளை நடுவதற்கான முன்னெடுப்பும் நடத்தப் பெற உள்ளது.

இது சென்னை வாழ் மக்களுக்கு மேலே குறிப்பிட்ட மலையேற்றமும் அதன் விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை பரவலாக கொண்டு சேர்க்க மேலும் உதவவலாம். ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

Date
6th March 2010 (Saturday)
Time
Workshops & Demos – 2pm to 6pm
Presentation & Address by Chief Guest – 6:30pm to 8:20pm
Photography Exhibition – 2pm to 10pm

Venue
Periyar Hall, Anna Nagar, Chennai
Registration

மேலும் விவரங்களுக்கு - Anu - 98410 08566

Infolinks

ShareThis