பரிணாமம்-எதிர்வினை உரையாடல்!
R@ng@: வளர்ச்சி என்கிற இடத்தில்
9:37 PM நான் ஒரு புது வகையான கண்ணோட்டத்தில் அதை பார்க்கிறேன்
9:41 PM me: எப்படி?
R@ng@: பெரிசா இருக்கும் பரவாயில்லையா?
9:42 PM சரி..சொல்றேன்..
9:45 PM சொல்லவா?
9:46 PM me: தாரளமா
R@ng@: இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அப்போ பிலிப்பைன்ஸ் தீவுகளில் போர் விமானங்கள் அவசரகதியில் தரையிறக்கப்பட்டன..
அங்கே குடியிருந்த ஆதிவாசி மக்கள் அவர்களை கடவுள் என்று நினைத்துகொண்டனர்..அந்த வீரர்களின் வெள்ளை தோல், அவர்கள் இதற்கு முன் பார்த்திறாத பறக்கும் விமானங்கள்...அவர்கள் கொடுத்த அறுசுவை உணவுகள் என்று..போர் முடியும் வரை அந்த மக்கள் அந்த விமானிகளையும் போர்வீரர்களையும் கடவுளாகவே பார்த்தனர்..
போர் முடிந்து..அவர்கள் கிளம்பி சென்ற பிறகும், அவர்கள் நினைவாய் சின்னங்கள், விமான பொம்மைகளை உருவாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டனர்..இப்போதும் அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!!
அங்கே குடியிருந்த ஆதிவாசி மக்கள் அவர்களை கடவுள் என்று நினைத்துகொண்டனர்..அந்த வீரர்களின் வெள்ளை தோல், அவர்கள் இதற்கு முன் பார்த்திறாத பறக்கும் விமானங்கள்...அவர்கள் கொடுத்த அறுசுவை உணவுகள் என்று..போர் முடியும் வரை அந்த மக்கள் அந்த விமானிகளையும் போர்வீரர்களையும் கடவுளாகவே பார்த்தனர்..
போர் முடிந்து..அவர்கள் கிளம்பி சென்ற பிறகும், அவர்கள் நினைவாய் சின்னங்கள், விமான பொம்மைகளை உருவாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டனர்..இப்போதும் அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!!
சாப்டு வரேன்
9:47 PM me: இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?
38 minutes |
10:26 PM R@ng@: அந்த பிலிப்பைன்ஸ் என்கிற வார்த்தைக்கு பதிலா..பூமி கிரகம் என்கிற வார்த்தைய போட்டு பாருங்க
10:27 PM me: போட்டு
10:28 PM R@ng@: ஆமாங்க..அப்போ புதுசா ஒரு விளக்கம் கிடைக்கும்
me: :)
நாமளா சொல்லிக்க வேண்டியது தான்
புதிய பொருள்களை அதுவும் பறக்கும் ஒன்றை பார்த்ததனால் அவர்கள் பயந்தார்கள்
ஆதி மனிதன் நெருப்புக்கும், மின்னலுக்கும் பயந்தா மாதிரி
10:29 PM R@ng@: :)
அப்படி பயந்து கிடந்த மனிதர்களை எது உசுப்பிவிட்டது?
10:30 PM me: அவைகளை கட்டுபடுத்த முடிந்த போது
உதாரணமாக நெருப்பு
10:31 PM R@ng@: உண்மை..ஒத்துக்கறேன்..அப்படியே இருந்தாலும்..அவர்கள் வளர்ச்சி..இப்போதைய ஆப்பிரிக்க பழங்குடிகளாகவே இருந்திருக்கணும்..எப்படி நாகரிங்களா பிரிந்தது?
me: சும்மா இல்லப்பா
40000 வருடங்கள் ஆச்சு அதற்கு
10:33 PM R@ng@: சரி..20000 வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் எகிப்தியத்தை எடுத்துக்குவோம்..அவர்களுக்கு எப்படி பிரிமிடை கட்டும் அளவுக்கு அறிவு வந்தது..(இந்த காலத்து கட்டிட வல்லுனர்களே கட்ட தயங்கும் ஒரு விஷயத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்)
10:34 PM me: பிரமீடுக்கு வயசு 20000 ம்னு யார் சொன்னது?
R@ng@: நான் எகிப்தியத்தின் வயதை தான் 20000ம்முன்னு சொன்னேன்..பிரமிடை அல்ல..அல்ல..
10:35 PM me: அரசனுக்கு மரியாதை தர தேவைபட்ட பிரமாண்டமோ பிரமீடு
இப்போது கட்டதயங்கும் என்ற வார்த்தை மிகை,
இப்போதும் முடியும்
10:37 PM R@ng@: முடியும்..அனால் அதற்கு ஆகும் பொருட்செலவும் , உழைப்பும் 120 எம்பயர்ஸ்டேட் பில்டிங்குகள் கட்ட ஆகும் செலவினங்களுக்கு சமம்
அதான் தயங்குகிறார்கள்..
me: இன்று பணம் என்ற மதிப்பு இருக்கு
10:38 PM ஒவ்வொரு பொருளுக்கும் விலை இருக்கு
அன்று என்ன இருந்தது!?
R@ng@: பொருளாதாரம் இல்ல பாஸ்.நான் பேச வரது டெக்னாலஜி
10:39 PM me: டெக்னாலஜி என்பது துறை சார்ந்தது அல்லவா!
10:40 PM இன்று மத்த துறையிலும் மனிதன் முன்னேறியுள்ளான்
பிரமீடு கட்டிடக்கலையின் ஆரம்பம்
10:41 PM R@ng@: சரி..நீங்கள் ஒரு பில்டிங் இன்சினியராக விரும்புகிறீர்கள்..அப்போ பிறந்த உடனே இன்ஜினியார்கிடுறீங்களா?
10:42 PM me: படிப்படியாக தானப்பா பிரமீடு உருவாச்சு
அதற்கு முன் இருந்த சிறிய கட்டிடங்கள் காலத்தால் அழிஞ்சு போச்சு
ரங்க்ஸ் நீங்க குழந்தையா இல்ல
நடிக்கிறிங்களா?
பிரமீடு மட்டுமே கட்டினான் எகிப்தியன் என்று எங்கேயாவது இருக்கா
அவன் என்ன பிரமீடுகுள்ளவா வாழ்ந்தான்
10:46 PM R@ng@: குரங்குகள் இன்னும் ஏன் குரங்குகளாகவே இருக்கின்றன
me: அடடே!
ப்ரிணாம வளர்ச்சி என்பது சொடுக்கிடும் நேரத்தில் நடப்பதில்லை
அவைகளின் மாற்றம் நம் வாழ்நாளில் கண்டுபிடிக்க முடியாது
10:47 PM அண்ணே அனைத்தும் விரிவாய் பதிவில் வரும் அண்ணே
R@ng@: சொல்லிதராமல் நீங்கள் இந்த கணினியில் டைப் பண்ணி இருக்க முடியுமா?
me: நீங்க என்னைய கிறுக்காக்குற மாதிரி எனக்கு தெரியுது!
வேணும்னே கலாய்க்கிறிங்க
R@ng@: இல்ல பாஸு
நான் கண்டுகிட்டதை சொல்றேன்..அவ்வளவே
10:48 PM ஒரு சொல்லிதரல்..ஒரு தூண்டுகோல் தான் நம்மை ஆதிவாசிகளில் இருந்து நகர வாசிகளாக மாற்றி இருக்கிறது..
me: தூண்டுகோலும் கிடையாது மண்னாங்கட்டியும் கிடையாது
10:49 PM வாழும் தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு தேவையானதை உருவாக்கி கொண்டான்!
10:50 PM R@ng@: அப்படியே ஆகட்டும்
me: அப்படித்தான் ஆச்சு
எல்லாமே காடு தான் முதலில்
R@ng@: everthing has some probablity
me: அழித்து தான் நகரம் உருவாச்சு
10:51 PM தமிழ் தமிழ்
R@ng@: எல்லாவற்றிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாய்ப்புகள் உண்டு
10:52 PM me: தகுதியுள்ளது பிழைக்கும்
வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுதல் தகுதி வாய்ந்தது
R@ng@: புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
10:53 PM மனிதன் ஒரு காட்டு விலங்கு..அவனுக்கு எதோ ஒரு தூண்டுகோல் கிடைத்ததால் தான் அவன் வளர்ந்தான்..இல்லையேல் நாகரிகமாவது மண்ணாங்கட்டியாவது..இது என் வாதம்
10:55 PM me: என்ன தூண்டுகோல்னு சொல்லுங்க
புத்தியுள்ளன்னு ஒரு பாட்டு பாடினா அது உண்மையாயிரும்மா
தத்துவம் என்பதே ஒரு பேத்தல்
10:56 PM அதுவும் கடவுள் மாதிரி நம்பிக்கை சார்ந்ததே
R@ng@: டார்வினிஸமும் அப்போ பேத்தல் தான்
me: இருக்கலாம்
உரையாடல் உறுதி செய்ய அல்லவே,
சிந்திப்போம்
R@ng@: ம்ம்..நான் தூண்டுகோல்னு சொல்றது
10:57 PM me: சொல்றது?
R@ng@: வேற்று கிரக மனிதர்களை..(ஜீவராசிகளை)ன்னு வெச்சிக்கலாம்
me: :)
10:58 PM இருக்கலாம்
R@ng@: நான் முதன்முதலில் கூறிய அந்த பிலிப்பைன்ஸ் விஷயத்தை ஒப்பிட்டு பாருங்கள்..
me: சாத்தியகூறுகளை ஆராய்ந்து பதிவிடுங்கள்
ஒப்பீடு சாத்தியகூறு ஆகாது
10:59 PM R@ng@: பலர், பல விதங்களின் ஆராய்ந்துவிட்டு, இன்று அவர்கள் அமெரிக்க அரசையே கேள்விகேட்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்
இந்த சங்கதி தெரியுமா?
11:00 PM அவர்களின் கேள்வி “ஏன் இன்னும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்?” என்பதே
me: இருந்தே தானே மறைக்க?
R@ng@: பல லட்சம் பேருக்கு இவைகள் இருப்பது தெரியும்..நம் இஸ்ரோவுக்கும் கூட..!!
11:01 PM me: :)
அந்த பல லட்சத்தில் நீங்களும் ஒருவரா?
R@ng@: வாய்ப்புகள் அடிப்படையில் ஏற்றுகொள்கிறேன்
11:03 PM என் கருத்து படி பார்த்தால் நாம் வணங்குவது வேற்றுகிரக மனிதர்களையொ என்று கூட தோன்றுகிறது?
me: சாத்தியகூறுகள் என்னன்னா சொன்னா நானும் தெரிஞ்சுகுவேன்
பல லட்சம் பேர் நம்புறாங்ககிறதுக்காக நான் எந்த மதத்தையும் ஏற்கலையே
கடவுளுக்கு என்ன சாத்தியம்னு கேள்வி கேக்குறேனே
நீங்களாவது சொல்லுங்க
11:04 PM R@ng@: உங்களை சுற்றி லட்சம் ஆடுகள் நின்னுகிட்டு இருந்தா நீங்க சிங்கம் இல்லைன்னு ஆகிடுமா?
கடவுள் இப்போ பிரச்சனை இல்லை..பிரச்சனை Origin of Human Culture
11:05 PM me: அதற்கு தான் சாத்தியகூறுகள் கேட்கிறேன்
சரியா சொன்னா ஏத்துக்க போறேன்
11:06 PM R@ng@: சாத்தியக்கூறை சொல்லவா? இல்லை ஒரு விஷயத்தை தேடி பாக்குறீங்களா?
How Nasca Lines used? னு தேடி பாருங்க
கூகுள் பண்ணவும்
me: உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்
தமிழில் சொல்லுங்க
R@ng@: நாஸ்கா லைன்கள் என்பது தென் ஆப்பிரிக்க கண்டத்தில் அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள்
11:08 PM me: அவை மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் தான்
11:09 PM R@ng@: ஆமாம்
ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்..அவகளை 12000 அடி உயரத்தில் பறந்த படி பார்த்தால்தான் முழுமையாக தெரியும்
11:10 PM me: ஜுஜுபி
தாரளமாக செய்யலாம்
R@ng@: இப்போ செய்யலாம்..நீங்க பறந்த படி பார்க்கலாம்
11:11 PM me: இடம் வாங்கி கொடுங்க
R@ng@: ஆனால் அப்போது 3500 வருடங்களுக்கு எப்படி செய்திருக்க முடியும்
ஏன் செய்ய வேண்டும்?
me: அப்போ மனிதன் முட்டாள்னு யார் சொன்னது
11:12 PM அவனுக்கு பிடிச்சிருக்கு செஞ்சிருக்கான்
R@ng@: உஸ்ஸப்பா..ஏன் வானத்துல இருந்து பாக்குற மாதிரி செஞ்சிருக்கான்?
me: மேலும் அவை 3500 வருடங்கள் பழமையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை
R@ng@: இருக்கு..
11:13 PM me: எங்கே?
11:14 PM R@ng@: http://www.world-mysteries.com/mpl_1_2.htm
பாரும்
11:15 PM me: 2,000 years ago
நாளை பேசலாம்
R@ng@: ஓக்கே **************************உலகத்திற்கெல்லாம் ஒரே கடவுள்னு ஒரு கும்பல், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்னு ஒரு கும்பல், நீ தான் கடவுள்னு ஒரு கும்பல், கடவுளே இல்லைன்னு ஒரு கும்பல், கடவுள் என்பது வேற்றுகிரகவாசிகள்னு இப்போ புதுசா!
ஆனா நல்லாயிருக்கு!
சாத்தியகூறுகளை ஆராய்வோம்!
****************************
ஆனா நல்லாயிருக்கு!
சாத்தியகூறுகளை ஆராய்வோம்!
****************************
No comments:
Post a Comment