Posts

நெடுநல்வாடை

Image
நெடுநல்வாடை             தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு  மதுரையைச்  சேர்ந்த  நக்கீரர்  என்னும் புலவரால் இயற்றப்பட்டதே  நெடுநல்வாடை  என்னும் நூல். இது  சங்கத் தமிழ் இலக்கியத்  தொகுப்பான  பத்துப்பாட்டு  நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள்  வாடைக்காலத்தில்  நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட  (நெடு)  வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு  நல் ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில்  நெடுநல்வாடை  எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.  போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் குறித்து நெடுநல்வாடையில் கூறப்பட்ட வருணனையை எளிய தமிழில் அழகாக விவரிக்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !! வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவி...

விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (Permanent (adult) teeth) விழுந்து விட்டால்..

Image
         விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் ( Permanent ( adult) teeth )  விழுந்து விட்டால்..                        விபத்தினாலோ அல்லது குழந்தைகள் விளையாடும் போது கிழே விழுவதாலோ  விழுந்து முளைத்த பல்- நிலையான  பற்கள்  ( Permanent ( adult) teeth )    விழுந்து விட்டால்..              விழுந்த (பிடுங்கி கொண்டு வந்த) பல்லை  உலர விட கூடாது ...  உடனடியாக அதை அதன் இடத்தில் சரியாக பொறுத்திவிட வேண்டும். அப்படி பொருத்தும்போது அந்த பல் மீண்டும் ஒட்டி உயிர் பெற்றுவிடும். அப்படி பொறுத்த முடியவில்லை அல்லது சரியாக பொருந்தவில்லை எனில்  பல்லை  உமிழ்நீரில்(எச்சில்) அல்லது  பால்/இளநீரில்   வைத்து உடனடியாக பல் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும்.  (இதற்க்கான தனி திரவம் கூட கிடைக்கிறது ).  உடனடியாக  (எவ்வளவு விரைவாக  முடியுமோ அவ்வளவு விரைவாக) பல் மருத்துவரை அணுகி அந்த பல்லை அதன்  இடத்தில்...

சலீம் அலி

Image
சலீம் அலி        பறவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தே வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் , ஒரு நாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்கையின் போக்கையே மாற்ற ,அதன் பின் பறவைகளைக் கொன்று வேட்டையாடி வந்த அவர் அந்தப் பறவை இனத்திற்காகவே தன் சொந்த வாழ்வை சமர்ப்பித்து கொண்டார் ..   உலகில் பறவைகள் என்ற பேச்செடுக்கும்போது எல்லாம் இந்தியாவின் பெயரை தூக்கி நிறுத்தி, மேல் நாட்டுக்காரர்களையும் தலை நிமர்ந்து , வியந்து பார்க்கவைத்தார் அவர் .. பெரிய பெரிய  படிப்புகளையெல்லாம் பெரிய பெரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ , ஹார்வேர்டு பல்கலைகழகத்திலோ இதுபோல உலகப் புகழ் பெற்ற எந்த பல்கலைகழகத்திலும் சென்று படிக்காத அவர் பறவைகளைப் பற்றிய அறிவியல் துறையில் உலகம் போற்றும் மேதாவிகளாகத் திகழ்ந்தார். இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் . மேலும் :- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%...

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது? - மதம்..அதிகார போட்டி..

           சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், Jordan, கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 10% ஷியாமுஸ்லிம்,  16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுகிறார்.          சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி...

குடம் புளி

Image
குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா? குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதும் உண்மை. குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான். கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். இந்தக் குடம்புளி  2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கு...

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

Image
நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி கு.வி.கிருஷ்ண மூர்த்தி நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும். நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும். ஆக்சிஜன் அமுதசுரபி சங்க இலக்கி...

பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!

Image
பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி! : பெரிய, பணக்கார மாநிலங்கள் எனும் பட்டியலில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் மேல்நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றன. 1960-ல் மேற்கு வங்கத்தில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.390 ஆக இருந்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.330. 2014-ல் ஒரு சாமானிய மேற்கு வங்கக் குடிமகனின் ஆண்டு வருவாய் ரூ.80,000. தமிழ்நாட்டிலோ அது ரூ.1,36,000. 1960-ல் ஏழை மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. தென் மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை ஏழ்மை நிலையிலிருந்து பணக்கார நிலைக்கு வெகுவேகமாக முன்னேறின. அதே வேளையில், மேற்கு வங்கமும் ராஜஸ்தானும் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்து வெகு வேகமாகக் கீழே சரிந்தன. இந்த 12 மாநிலங்களில் பெருவாரியான மாநிலங்கள் 1960-ல் கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் இருந்தன. அதற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் இம்மாநிலங்களில் சில தீவிரமான முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டதால், தர வரிசைப் பட்டியலில் மிகப் பெர...