என் படிப்பிற்குஉதவும்ஊர் மக்கள்!
படிப்பதற்கே வழியில்லாமல், ஊர் மக்க ளின் உதவியுடன் படிக்கும் காயத்ரி: எங்கப்பா அன்பழகன், அம்மா ராணி, கூடப் பிறந்தவங்க இரண்டு தம்பிகள். எங்கப்பா தப்பு அடிக்கும் தொழில் செய்கிறார். வேலையில்லாத நாட்களில், கட்டட வேலைக்குப் போவார். தினமும் 150 ரூபாய் வருமானம் வரும். சாப்பாட்டிற்கே வழியில்லாததால், எங்க வீட்டில் ஐந்தாவது, ஆறாவதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை. அதனால், என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென, என் அப்பா ஆசைப்பட்டார்.பள்ளிக்கூடத்தில் பழைய சோறும், ஊறுகாயும் கொண்டு வரும் என்னைப் போலுள்ள மாணவியருடன், பணக்கார மாணவியர் நட்பு வைத்துக் கொள்ள தயங்குவர். எங்களை விட்டு ஒதுங்கியே இருப்பர். அவர்கள் என் பக்கம் வர வேண்டும் என்பதற்காகவே, கஷ்டப்பட்டு படிப்பேன்.கடைசியில், என் படிப்புத் திறமையை பார்த்து எல்லாரும், என்னிடம் வந்து பழகினர். பத்தாம் வகுப்பில், 473 மார்க் வாங்கினேன். டாக்டராக வேண்டும் என, பிளஸ் 2வில் அறிவியல் பாடம் எடுத்தேன்.பிளஸ் 2வில் 1153 மார்க் வாங்கிய எனக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த சந்தோஷம் எனக்கிருக்க, எப்படிப் படிக்க வைப்பது என்று, என் அப்பா கவலையில் உட்கார்ந்து விட்டார். எங்கள் குடும்ப நிலையைப் பார்த்த எங்க ஊர் மக்கள், எந்த யோசனையும் பண்ணாமல், சாமிக்கு காசு பிரிப்பது போல், ஊர் முழுக்க காசு பிரித்து எனக்கு கொடுத்தாங்க.அவங்க செஞ்ச உதவியைப் பார்த்த நாமக்கல் நகராட்சி மன்றம் சார்பில், ஒரு நாள் சிட்டிங் பீசான 23,000 ரூபாயை எனக்கு வழங்கினாங்க. என் படிப்பிற்கு உதவிய பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டை மக்களுக்கு, என்றும் நான் நன்றிக் கடன் பட்டவள்.
No comments:
Post a Comment