JAVA ++
அது எனக்கு MCA-ல கடைசி செமஸ்டர்..
இன்னும் ஒரே ஒரு Project
மட்டும்
தான் பாக்கி..
Project Duration 5 மாசம்..
MCA-ல என்னோட
Overall
Percentage 80% வரணும்னா...
அந்த Project-ல நான் Centum
அடிச்சே
ஆகணும்..
அதுக்கு என்ன பண்ணனும்..?
சிங்கம் ( நான் தான் )
ஒரு
Master Plan போட்டது..
அது Java வந்த புதுசு..
அப்ப எங்க
Class-ல
யாருக்குமே Java தெரியாது..
Step 1 : Java கத்துகறது..
(
C++ தெரியும்கறதால அது
நமக்கு Easy-ஆ இருக்கும்.. )
Step 2 :
Java-லயே Project பண்றது..
இது தான் அந்த Master Plan.
இதை
நம்பி நாங்க 4 பேர்
சென்னைக்கு போயி
Java Course சேர்ந்தோம்..
4
மாசத்திலயே நாங்க
நல்லா தெரிஞ்சிக்கிட்டோம்..
Java கத்துக்கறதே
கஷ்டம்..
அதுல Project பண்றது
கஷ்டமோ கஷ்டம்னு..
Project
Submit பண்ண சொல்லி
College-ல இருந்து Letter வேற
வந்துடுச்சி..
இது
ஆகற வேலை இல்ல..,
வேற எதாவது ரூட்
இருக்கான்னு தேடினோம்..
வேற
ஒரு Computer Centre-ல
4000 ரூபாய்க்கு Java Project
தர்றதா ஒரு
ரகசிய நியூஸ்..
என் Friends மனசு மாறிட்டாங்க..
நான்தான்
ஒத்துக்கல..
4000 ரூபா குடுத்து
ஒரு Dummy Project-ஐ
வாங்கிட்டு
போனா..,
இந்த உலகம் நம்மள
பத்தி என்ன நினைக்கும்..??
முடியவே
முடியாது..
3000 ரூபாய்க்கு பேசிப் பார்க்கலாம்னு
சொல்லிட்டேன்..
அடுத்த
நாள்..
3000 ரூபா Deal ஓ.கே..
அவங்க ஆளுக்கு ஒரு Project
Floppy-யும்.,
"சாமி
சத்தியமா இந்த Project-ஐ
இவன் தான் பண்ணினான்னு..! "
ஒரு
Certificate-ம் குடுத்தாங்க..
சந்தோஷமா ஊருக்கு வந்தாச்சு..
Print
Out எடுக்கலாம்னு
Floppy-ஐ போட்டா...
என்னோட Floppy மட்டும்
புஸ்...
என்
வளர்ச்சியை தடுக்க
மறுபடியும் ஒரு தடைகல்..
நான் Feelings of India ஆயிட்டேன்..
" வாழ்க்கையில் ஆயிரம்
தடைகல்லப்பா.,
தடைகல்லும் உனக்கொரு படி கல்லப்பா..,
வெற்றிகொடி
கட்டு...!! "
Backround-ல " படையப்பா " பாட்டு..
அப்பதான்
ஒரு விஷயம்
எனக்கு Strike ஆச்சு...
எங்களுக்கு Project-ஐ Demo
காட்ட
வேண்டியதில்ல..
Project Report-ஐ வெச்சி
Explain பண்ணினா போதும்..
இது
போதாதா...!!
சோகத்தை ஓரம் கட்டிட்டு..,
என் Friend சுரேஷோட
Project-ஐயே
நானும் Printout எடுத்துட்டேன்..
அதுக்காக ரெண்டு
Project-ம்
ஒண்ணுன்னு நினைக்காதீங்க..,
அவன் Project Report-ல
"
Suresh-னு " இருக்கும்..
என்னுதுல " Venkat-னு " இருக்கும்..
(
எப்புடி..!! Difference இருக்குல்ல.. )
ரெண்டு Project-ம்
ஒண்ணுதான்னு
எங்க H.O.D கண்டுபிடிச்சிடுவாரோன்னு
சுரேஷ் தான் ரொம்ப
பயந்தான்..
" டேய்.., எனக்கு Java தான்
அரைகுறையா தெரியும் - ஆனா
நம்ம
H.O.D பத்தி முழுசா தெரியும்..
அதனால Don't Worry-ன்னு..! "
சொல்லிட்டேன்..
Project
Report-ஐ பைண்டிங் பண்றதுக்கு
முன்னாடி H.O.D கிட்ட காட்டி
" O.K "
வாங்கணும்...
அதுக்காக நான் காலேஜ் போனப்ப..
என் Friend ஹரி
H.O.D Room-ல
இருந்து சோகமா வெளியே வந்தான்..
( அவன் Java-ல சொந்தமா
Project
பண்ணி இருந்தான்.. )
நான் : என்னடா ஒரு மாதிரி
இருக்கே..?
ஹரி : H.O.D கடுப்படிக்கிறார்டா..
என் Project Screen
Shots பார்க்க
Look-ஆ இல்லையாம்..
( ஒரிஜினல் Project-க்கே
இந்த கதியா..? )
ஹரி : ஜாவால Design பண்றது
எவ்ளோ கஷ்டம்..?
ஒரு
கோடு போட கூட
ஒரு பக்கம் Code எழுதணும்..
உனக்கே தெரியும் தானே..!!
(
எனக்கு..?? ஓ.. நல்லா தெரியுமே..!! )
ஹரி : இவருக்கு Java-ன்னா
என்னான்னே
தெரியல., நம்மள போட்டு இம்சை
பண்ணிட்டு இருக்காரு...
ஆஹா...
அவன் சொன்னதை கேட்டதும்
எனக்கு பல்ப் எரிய ஆரம்பிச்சிடுச்சு..
நான்
Project Report-ஐ அன்னிக்கு காட்டலை..
ரெண்டு நாள் கழிச்சி தான்
காட்டினேன்..
என் Project Report-ஐ பார்த்து
சுரேஷ் Stun
ஆயிட்டான்..
பின்ன என்னோட Screen Shots தான்
எங்க H.O.D கேட்ட
மாதிரி
Design., Design-ஆ இருந்ததே..!!
சுரேஷ் : என்னடா
பண்ணினே..?
நான் : Microsoft Power Point
Use பண்ணி இந்த Screen
Shots
Design பண்ணினேன்..
சுரேஷ் : அப்ப Project Report-ல
இருக்கிற
Java Code..??
நான் : அதுக்கும்., இந்த
Screen Shots-க்கும் 5%
கூட
சம்பந்தம் கிடையாது..
சுரேஷ் : எங்க Screen Shots எல்லாம்
ரொம்ப
சாதாரணமா இருக்கு..,
உன்னுது மட்டும் ஜிகுஜிகுன்னு
இருக்கே..
ஒருவேளை H.O.D-க்கு
சந்தேகம் வந்துட்டா என்ன பண்ணுவே..??
நான் :
ரொம்ப Simple..!
அவங்க பண்ணினது ஜாவா.,
நான் பண்ணினது ஜாவா++
சொல்லுவேன்...!!
சுரேஷ்
: அடப்பாவி..!!
பின்குறிப்பு :
Project Result வந்தது..
ஹரி
- 83 Marks.,
சுரேஷ் - 85 Marks..,
நான் - ??
அதை ஏன்
கேட்கறீங்க..??
எனக்கு இப்ப அதை பத்தி
நினைச்சா கூட Feeling ஆகுது...
பின்ன..,
2
Mark-ல Centum-ஐ
மிஸ் பண்ணினா..
Feeling-ஆ இருக்காதா. .??
Thanks to: http://gokulathilsuriyan.blogspot.com/2010/08/blog-post_13.html
No comments:
Post a Comment