கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார்.
நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.
கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வல்லமை கலைஞர் குடும்பத்தில்தான் இருக்கிறதே தவிர, பிருத்விராஜ் கபூர் குடும்பத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. போட்டி கம்பெனிகளின் கேபிள்களை வெட்டிப் போட்டு அராஜகம் செததற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்படவேண்டுமென்று கபூர் குடும்ப வாரிசுகள் யாருக்கும் எதிராக எந்த அரசு அதிகாரியும் பரிந்துரை எழுதும் அவலம் நிகழவில்லை.
ஒரு படத்தின் ரிலீஸ் தேதி, எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தி முழு திரையுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தில் எந்தக் கபூரும் இருந்ததில்லை. திரையுலக சங்கத் தேர்தல்களில் ஜெயித்த அணியை மிரட்டி, தோற்றதாகக் கையெழுத்து போடச் சொல்லி தன் ஜால்ராக்களைப் பதவியில் உட்காரவைக்கும் வேலையை ஒரு கபூரும் செததில்லை.
கலைஞர் கருணாநிதி இப்போதெல்லாம் வசனம் எழுதும் ஒரு படம் கூட மக்கள் ஆதரவைப் பெற்று அமோகமாக ஓடுவதில்லை. ஆனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்துக்கு வசனத்துக்காக 50 லட்ச ரூபா சம்பளம் அவருக்கு மட்டும் தரப் படும் மர்மம், எந்தக் கபூருக்கும் புரியவே புரியாது. ராஜ்கபூரின் வசனகர்த்தா கே.ஏ.அப்பாஸ் முதல் இன்று வசூலைக்குவிக்கும் படங்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி வரை யாருக்கும் இப்படிச் சம்பளம் கிடைத்ததில்லை.
பரம்பரை மிராசுதாரரான ஜி.கே வாசனின் அறிவிக்கப்பட்ட சொ த்து மதிப்பு மூன்று கோடி 78 லட்சம். எந்த சினிமாவுக்கும் கதை வசனம் எழுதி ஒரு நாளும் சம்பாதிக்காத கனிமொழியின் சொத்து எட்டுக் கோடி 56 லட்சம்; அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருப்பதன் மர்மங்கள் கபூர்களுக்குத் தெரியாது. கபூர்கள் முழு நேரம் நாடகமேடையில் நடிகர்களாக உழைத்து சினிமாவுக்கு வந்து ¦º¡ந்தக் காசில் ஜெயித்தவர்கள். அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவை ஆதிக்கம் செöய அரசியல் அதிகாரத்தையும் கலைஞரும் அவர் வாரிசுகளும் பயன்படுத்துவதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இனியும் எழும்.
( நன்றி: கல்கி, ஓ - பக்கங்கள் )
Well said. Every one knows this. shame on Karunanithi family.
ReplyDelete