Saturday, May 29, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய்

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது


தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரடிக் கொண்டே இருந்தார். அப்பையன் வளர வளர திக்குவாய் தோண்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம். வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும் போது மட்டும் திக்கிப் பேசுவார். ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார் பிறர் முன்னிலையில் பேசும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை. குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும். அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உடையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று. மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும். இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு ‘எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்’ என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சனையை விரைவில் தீர்த்துவிடலாம். தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே!.

Friday, May 28, 2010

சூப்பர்-30

ஐ.ஐ.டி.,"சூப்பர்-30' சாதனை : வழிகாட்டுகிறார் ஆனந்த்குமார்
 



பாட்னா : சாதாரண உடை. கூரை வேய்ந்த வகுப்பறைகள். ஆடும் நிலையில் உள்ள மர பெஞ்சுகள். இதுதான் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் "சூப்பர்-30' எனும் ராமானுஜன் கணித மையத்தின் தோற்றம். வெளித்தோற்றத்துக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை. இதுதான் "சூப்பர்-30' பயிற்சி நிறுவனத்தின் வெற்றிரகசியம்.

இப்பயிற்சி மையத்தின் தலைவர் ஆனந்த்குமார். ஒரு போதும் ஐ.ஐ.டி.,யில் படித்ததில்லை. ஆனால் இவரிடம் பயின்றவர்களில் ஏராளமானோர் ஐ.ஐ.டி., முடித்துள்ளனர். ஆனந்த்குமாருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த போது, அதற்குரிய கட்டணம் செலுத்த அவரிடம் பணம் இல்லை. யாரும் உதவி செய்யவில்லை. இது அவரது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஏழையான, திறமையான மாணவர்களின் உயர்படிப்பு ஒரு போதும் தடைபட்டு விடக்கூடாது என்று கருதினார். அதன் விளைவே "சூப்பர்-30'. ஐ.ஐ.டி.,யில் பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., எழுதித்தான் சேர முடியும். இந்தியாவில் மிக கடினமான நுழைவுத் தேர்வு இது. இந்த தேர்வில் ஏழை மற்றும் திறமைமிக்க 30 மாணவர்களை தேர்வு செய்து ஐ.ஐ.டி.க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆனந்த் குமார் விரும்பினார். 2002ல் இம்மையத்தை அவர் துவக்கினார். 2003 தேர்வில் 30 பேரில் 18 பேரும், 2004ல் 22 பேரும், 2005ல் 26 பேரும், 2007ல் 28 பேரும் தேர்வானார்கள். 2008, 2009 மற்றும் 2010 ஆகிய மூன்று ஆண்டிலும் தொடர்ச்சியாக 30 பேரும் தேர்வாகி "ஹாட்ரிக்' சாதனை புரிந்தார்கள்.

கடந்த எட்டு ஆண்டுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற 240 பேரில் 184 பேர் ஐ.ஐ.டி.,யில் இடம்பெற்றிருக்கின்றனர். இவரது மையத்தில் சேர்வதற்காக ஆண்டுதோறும் பீகாரிலிருந்து 5 ஆயிரம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஏழை மற்றும் நான்காம் தர அரசுப்பணியில் உள்ளவர்களின் பிள்ளைகளில் 200 பேர் தேர்வு செய்கிறார். அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கிறார். அதில் நன்கு தேர்ச்சி அடையும் 30 பேரை இறுதியில் தேர்வு செய்கிறார். ஐ.ஐ.டி., பயிற்சிக்கு 40 ஆயிரம் முதல் சில லட்சங்களை வரை செலவாகும் இக்காலத்தில், இவர் ஏழு மாதங்களுக்கு 4 ஆயிரம் மட்டுமே கட்டணமாகப் பெற்று பயிற்சி அளிக்கிறார். அதே சமயத்தில் கட்டணம் இங்கு பிரச்னையாக இருந்ததே இல்லை. அதை கட்டமுடியாதவர்களுக்குக் கூட இங்கு பயிற்சி இலவசம். இதில் ஆனந்த்குமார் தனக்கு என ஊதியம் பெற்றுக் கொள்வதில்லை.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கொட்டினாலும் ஏழை மாணவர்களின் கல்வியில் எதிர்பார்க்கும் இலக்கை எப்போதும் எட்ட முடியாத மத்திய மாநில அரசுகள், திட்டங்களை எப்படி செயல்படுத்தினால் இலக்கை அடைய முடியும் என்று ஆனந்த குமார் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விளக்கினார். சூப்பர் 30 நிறுவனம் "டைம்' இதழால் 2010ம் ஆண்டின் தலைசிறந்த ஆசிய அம்சங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முதல் 30 பேருக்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளவும் திட்டம் உள்ளது. ஐ.ஐ.டி.,யில் பிள்ளைகளைச் சேர்ப்பதைக் கனவாகக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இன்னும் ஆயிரம் ஆனந்த்குமார்கள் தேவைப்படுகின்றனர். வருவார்களா?

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Theater owners'''' discussion with SAC
விஜய் படங்களுக்கு ‌தடை போடுவது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு விதித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு தடை போட கூட்டம் போட இருக்கிறார்கள் எனும் செய்தி கடந்த வாரம் காட்டுத்தீ போல் கோடம்பாக்கத்தில் பரவியது. விஜய்யின் சமீபகால படங்கள் தந்த நஷ்டத்தை விஜய் அடுத்த படத்தில் ஈடுகட்ட வேண்டும் எனும் ஒப்பந்தத்திற்கு அவர் வர வேண்டும், அப்படி வராவிட்டால் அவருக்கு தடை எனும் முடிவில் கடந்த சனிக்கிழமை கூடவிருந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர். ஆனால் புதன்கிழமையும் கூட்டம் நடக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கு காரணம், திரையரங்க உரிமையாளர்களுடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானத்திற்கு ரெடியாகி வருவதாக வந்த தகவல்தானாம். அதே நேரம் சமாதான பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. விஜய் படங்களால் சமீப காலமாக தியேட்டர் அதிபர்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோஹினி ஆர்.பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஆர்.ஸ்ரீ‌தர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளன. அடுத்தடுத்து 6 படங்களால் தியேட்டர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை நடிகர் விஜய் ஈடுகட்ட வேண்டும். குறைந்தபட்சம் நஷ்டத்தொகையில் 30 சதவீதத்தையாவது திருப்பித் தர வேண்டும். நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி தராவிட்டால் சங்கத்தில் செயற்குழுவை கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினர்.

கடந்த ஆண்டில் வெளியான படங்களில் பல படங்களை வெற்றிப்படம் என்று தயாரிப்பாளர்கள் விளம்பரப் படுத்தினாலும், தமிழ்ப்படம், அங்காடித்தெரு, பையா ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது என்றும் தியேட்டர் அதிபர்கள் கூறினர்.

Thursday, May 27, 2010

இந்தியனே, இந்தியாவுக்குள் அகதி

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து, அகதிகள், இந்தியாவுக்கு வந்தனர்; சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே, நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்?

இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது, அமெரிக்காவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன் போல் திருவோட்டை ஏந்தி, வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம் — இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!
இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில், தனக்கு சமமாகவோ - தனக்குப் போட்டியாகவோ வந்து விடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவைத் துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.
அவற்றில் ஒன்றாக நான் சமீபத்தில் கேள்விப்பட்டது:

இந்தியாவில் உள்ள ஜாதிகள் - அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர் - யாருக்கும், யாருக்கும், நல் உறவு என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய ஏராளமாக பணம் ஒதுக்கி உள்ளதாம்!
இந்த பணத்தை, "உதவித் தொகையாக...' இங்குள்ள ஆராய்ச்சி (பி.எச்டி.,) மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம்! இதே போல மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்!

"யோவ்  இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?
இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம் - யாருக்கு யார் எதிர் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டி மேட்டாக' நாட்டைத் துண்டாடுவது தான் அவர்கள் நோக்கம்!
இதன், முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. நம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டில் பல பாகங்களுக்கு சிதறிச் சென்றுள்ளனர்!
இதே செயல்முறையைப் பயன்படுத்தி, தமிழகத்திலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!


இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது; இனியும் தூங்காதே!
***

13,207 கோடி ரூபாய் நஷ்டம்

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்



சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

• 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

• முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும்.

• பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

• அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்று தல், நவீன முறைகளைப் பின்பற் றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற் பட்டிருக்காது.

• நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

• சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவ றான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.

• 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது.

• 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகா தார நிலையங்களில் அமைத் திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டு களில் பார்வை குறை பாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண் டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத் தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவ தற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர் விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சி யமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமி ழக மக்கள்... கவர்ச்சி அரசிய லில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத் திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.

மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள்

 மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள் அம்பலமாகுமா?


மங்களூர் விமான விபத்து நடந்து முடிந்து விட்டது, காரணம் யார் என்ற கேள்வி பலமாக எழுகிறது. முதல் நாள் அன்று எனக்கு தொழில்நுட்ப விசயங்கள் எதுவும் தெரியாது, அதனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சம்பந்தமான கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் படேல் தெளிவாக, பைலட் மீது தவறு என்ற தொனியில் மழை பெய்யவில்லை, அந்த பகுதியில் கால நிலவரம் நன்றாகத்தான் இருந்தது என்று கூறி தனது தரப்பில் தப்பி விட்டார். இந்திய விமான நிர்வாகமும் படேலில் பாட்டிற்கு ஜால்ரா போட்டு விட்டது. ஆனால் அமெரிக்க செய்தி நிறுவனம் அங்கு தூரல் பெய்து இருந்ததையும், ரன்வே சாரலில் நனைந்து பிசகு தன்மை கொண்டு இருந்ததாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது. நாம் 2006 ஆம் ஆண்டிற்கு செல்வோம், அதாவ‌து புதிய‌ விமான‌ ஓடுத‌ள‌ம் க‌ட்டி கொண்டு இருந்த‌ கால‌ம். தெற்கு நோக்கிய‌ ப‌குதியில் நீண்ட‌தூர‌ம் அகன்ற‌ பிர‌தேச‌ம் ம‌ற்ற‌ இட‌ங்க‌ளும் அப்ப‌டித்தான். ஆனால் நிர்வாக‌ம் அவ‌ச‌ர‌ கால‌த்திற்கு விமான‌த்தை திருப்ப‌வோ அல்ல‌து மேலெழுப்ப‌வோ முடியாத‌ நிலையில் உள்ள‌ த‌ற்போதைய (விப‌த்திற்கு உள்ளான‌) பாதையை ஏன் தெர்ந்தெடுக்க‌ வேண்டும்.Image ம‌ங்க‌ளூர் அமைதியும் குளுமையும் க‌ல‌ந்த‌ ஒரு சிறு க‌ர்நாட‌க‌ ந‌க‌ர‌ம். டிராக்ட‌ர்? ஹாலிடே நிறுவ‌ன‌ம், ஏற்க‌ன‌வே ப‌ல‌ கோடிக‌ளை கொட்டி 200 ஏக்க‌ருக்கும் மேல் இட‌ம் வாங்கி போட்டிருக்கிற‌து. அம்பானி ச‌கோத‌ர‌ர்க‌ளின் ஆப்ஸ்ரேர்ஸ் ம‌ரைன் புர‌ஜெக்ட் ஒன்றும் இங்கு ந‌ட‌க்க‌ இருக்கிற‌து. இப்போது புரிந்திருக்கும் விமான‌ ஓடுத‌ள‌ம் வ‌ச‌தியில்லாத‌ ப‌குதியில் க‌ட்டிய‌த‌ற்கான‌ கார‌ண‌ம். விமான‌ ஓடுத‌ள‌ம் எதிர்கால‌த்தில் விப‌த்தை உண்டாக்கும் என்று ம‌ங்க‌ளூரை சேர்ந்த‌ ஆர்த‌ர் பெரேரா ச‌மூக‌ சேவையாள‌ர் க‌ர்நாட‌க‌ நீதிம‌ன்ற‌த்தை அணுகினார். இவ‌ர‌து முறையீட்டை க‌ர்நாட‌க‌ நீதிம‌ன்ற‌ம் நிர‌க‌ரிக்க‌, உச்ச‌நீதி ம‌ன்ற‌ம் சென்றார். அங்கு பொதுப்ப‌ணிக்கு குந்த‌க‌ம் விளைவிக்கிறார் என்று ஏன் இவர்மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கூடாது என்று நோட்டீஸ் விட்ட‌து. என்ன‌ செய்ய‌? உச்ச‌ நீதி ம‌ன்ற‌மே இப்ப‌டி சொன்ன‌ பிற‌கு அந்த சமூக சேவையாளரும் அமைதியாகிவிட்டார்.Image இன்று விப‌த்தும் ந‌ட‌ந்து விட்ட‌து. யார் யார் கார‌ண‌ம் என்று ப‌ட்டிய‌லிட்டால், வ‌ச‌தியான‌ இட‌த்தில் விமான‌ ஓடுத‌ள‌ம் அமைக்காம‌ல் சிக்க‌லான‌ இட‌த்தில் அமைக்க‌ உத்த‌ர‌விட்ட‌ அமைச்ச‌ர்க‌ள், அத‌ற்கு ஆவ‌ன‌ செய்து கொடுத்த‌ அதிகாரிக‌ள், பெரேராவின் ம‌னுவை தீர‌ விசாரிக்காம‌ல் நிர‌க‌ரித்த‌ உய‌ர் ம‌ற்றும் உச்ச‌நீதி ம‌ன்ற‌ங்க‌ள் என அடுக்கிக்கொண்டே போகலாம். பிளாக் பாக்ஸை தேடுவ‌த‌ற்கு எப்ப‌டி இத்த‌னை நாட்கள் பிடித்த‌து, பிளாக் பாக்ஸ் முத‌ல் நாளே கொண்டுசெல்லப்ப‌ட்டு விட்ட‌து என்றும் முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் எல்லாம் அழிக்க‌ப‌ட்டு வேறும் ட‌ப்பா மாத்திர‌மே மீண்டும் கொண்டு வ‌ந்து போட்டு விட்டு இதோ கிடைத்து விட்ட‌து என்று உடான்ஸ் விடுகிறார்க‌ள். இறுதி நேர‌த்தில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று விமான‌ ஓட்டுன‌ருக்கும் (அவ‌ர் தான் இல்லை) க‌ட்டுப்பாடு அறைக்குள் இருப்ப‌வ‌ருக்கு ம‌ட்டுமே தெரியும். ஆனால் க‌ட்டுப்பாடு எல்லாம் ஊழ‌ல் அர‌சிய‌ல்வாதிக‌ளின் க‌ர‌ங்க‌ளில் அல்ல‌வா இருக்கிறது. விமானி மீது ப‌ழி போட்டு விட்டு மீண்டுமொரு விமான‌ விபத்திற்கு த‌யாராகிவ‌ருகின்ற‌ன‌ர் நம் தேசத்து அரசியல் தலைகள். இதில் பாவப்பட்டவர்கள் அப்பாவி விமானப்பயணிகளும், விமானத்தில் பணிபுரிபவர்களும்தான்.

Wednesday, May 19, 2010

5 tips to help you lead your team to success

Managing a team is rarely an easy task. Coordinating workflows, setting expectations, dealing with personality conflicts ... a manager’s work is never done. A company’s well-being relies on its manager’s ability to handle a multitude of challenges; your success as a manager will rest almost entirely on your ability to keep your team motivated while producing quality results.

While every team and department (and manager) is different, there are some management best practices that can help ensure that work teams run smoothly and employees stay happy and productive.

Here are five you may want to consider:

1. Put the right people in the right places
Make sure you know your employees’ specific strengths and skills, and match them to tasks appropriately. For example, there is no sense in asking Employee A to manage the monthly reporting charts if Employee B has more experience with Microsoft(R) Excel(R). And if you ask Employee C to deliver the customer presentation when they have a fear of public speaking, you could just be setting them up for failure.

When people’s skills are properly aligned with their responsibilities, both productivity and job satisfaction will be much higher. Be sure to actually ask your employees what they feel their strengths and weaknesses are, rather than just relying on your own judgement.

2. Results and productivity are what matters
Unless you work in an environment where mandatory coverage during certain times is required, for example in customer service or IT help desk environments, enforcing or encouraging specific “clock in” and “clock out” times can demotivate and demean your employees. If you have hired employees that you trust, and the expectations of them are clear, there should be no reason to closely monitor when they come and go from the office as long as productivity is high and goals are being met.

3. Don’t blame or shame
Projects don’t always go as planned. And when things go wrong, it’s tempting to look around for someone to pin the blame on. However, there’s a better way to find out what happened – and how to address problems in the future. Don’t jump to conclusions, accuse anyone or publicly criticise – instead, conduct an evaluation to determine what went awry. If specific individuals are at fault, talk to them privately to get their side of the story, and to set clear expectations for the future.

4. Be consistent in your actions and your communication
You might be surprised how observant your employees are. They notice lots of things – and they will most likely talk amongst themselves, too. For example, if you allow one employee to leave the office early, but deny another employee the same request, it will be noticed and discussed. Likewise, the team will notice if you repeatedly praise one employee more than the others, which can cause tension and mistrust within the team. You need to ensure that you deal with each of your staff members equally and fairly.

5. Encourage teamwork and collaborative outcomes
Environments where everyone pitches in and individuals are encouraged to help each other out are usually very successful – and fun, too! So encourage your team to share ideas, talk openly, and exchange feedback. You can do that by establishing regular team meetings, holding “team building” exercises and activities, and rewarding the whole group for shared successes.

Interested in more tips on becoming a successful manager? Read 5 tips to gain and keep the loyalty of your staff. Or if you’re an employee looking to build a better relationship with your manager, have a look at Top tips for talking with your boss.

World Classical Tamil Conference 2010 - Theme Song by A.R Rahman

Sunday, May 16, 2010

நான் நானாகவே

உலகின் விதியைத் தம்முடைய கையிலே வைத்து விளையாடிக் கொண் டிருந்த ஸ்டாலின், போட்டோவின் முன் வரிசையில், நடுநாயகமாக கழுத்திலே மாலையுடனும், கையிலே பூச்செண் டுடனும் தோற்றமளித்ததை நாம் பார்த் திருக்க முடியாது.
ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதையே நாம், பல தடவைகளில் பார்த்திருக்கிறோம். அவர் எங்கு நின்றால்தான் என்ன! அவர் அவராக இல்லாது, வேறொருவராய் ஆகிவிடுவாரா என்ன?
நெப்போலியன் தோல்வியுற்றதும், அவருடைய ஊழியர்களுக்கெல்லாம், பிரிட்டிஷார் ஓர் ஆணை யிட்டனர். அதாவது, 'இனிமேல் அவரைப் பேரரசர் என்று எவரும் அழைக்கக் கூடாது; ஜெனரல் என்று தான் அழைக்க வேண்டும்!' என்று.
இதைக் கேள்வியுற்ற நெப் போலியன் சிரித்துக் கொண்டே, 'என்னை எப்படி அழைத்த போதிலும், நான் நானாகவே இருப்பேன்...' என்று கூறினார்.
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தலைவராக ஜெனரல் ஐசன் ஹோவர் நியமிக்கப் பட்ட போது, 'தங்களைத் தளபதி என்று அழைக்கவா அல்லது தலைவர் என்று அழைக்கவா?' என்று ஒருவர் கேட்ட போது, 'மிஸ்டர் ஐக் என்று அழையுங்கள்...' என்று கூறினார் அவர்.
இவ்வித மனோநிலை ஒருவனை ஆட் கொண்டு விட்டால், அவன் ஒரு போதும் அற்ப விஷயங்களை எண்ணி அங்கலாய்த்துக் கொள்ள மாட்டான்.


— அப்துல் ரஹீம் சுயமுன்னேற்றக் கட்டுரையில்.

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதிலும் அரசியல் கலக்காதீர்கள்

புதுடில்லி : 'தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியலாக்கி விடாதீர்கள்' என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு 'குட்டு' வைத்துள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில், கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. எனினும், இப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள், இன்னும் தூக்கில் இடப்படாமல், காக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, 2001ல் பார்லிமென்ட்டை தாக்கிய, அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை குற்றவாளிகளின், கருணை மனுக்கள் ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருப்பதுதான் இதற்கு காரணம். இந்நிலையில், கசாபின் தீர்ப்பு வெளிவருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் கருணை மனு முடிவு மீதான தாமதம் குறித்து, மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை அளித்திருக்கிறது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கூறியிருந்ததாவது:மனிதர்கள் அடிமைகள் அல்ல; அவர்களை சில அரசியல் மற்றும் அரசு கொள்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு, அவர்கள் அடகு வைக்கப்பட்ட பொருட்களும் அல்ல என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறோம்.கருணை மனுக்கள் மீதான மிதமிஞ்சிய தாமதம், தூக்கு தண்டனை பெற்றவர்கள், தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி, கோரிக்கை வைக்கும்படி செய்து விடும். அரசின் இந்த தாமதச்செயல், அவர்கள் கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை மறுக்கிறது.பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதியின் மேஜையில் தேங்கி கிடக்கும் இவ்வேளையில், இந்த தாமதம் முறையல்ல என்று சுட்டிக் காட்டுவது பொருத்தமானதுதான்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

Saturday, May 15, 2010

தோனி சொல்ல மறந்த கதை.


தோனி ஐபிஎல் கோப்பை வென்ற கதை.


Disclaimer: இதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல...




அனைவருக்கும் வணக்கம்.  இது எங்கள் கதை. நாங்கள் சொல்ல மறந்த கதை. கதை சொல்லும் நாங்களே கதாநாயகர்கள் ஆனோம். ஐபிஎல் முதல் இரண்டு ஆண்டுகள் நாங்கள் தோற்றது உலகறியும். அதே உத்வேகத்தோடு இந்த முறையும் களமிறங்கினோம், எல்லா கேப்டன்கள் மாதிரி நாங்கள் இந்த முறை கண்டிப்பாக கோப்பை வெல்வோம் என்று கூறினேன்.





















































Thursday, May 13, 2010

King of Chess

ஆனந்த் - King of Chess


மற்ற விளையாட்டுகளை , கிரிக்கெட் என்ற நாசமாய்ப் போன சூதாட்டம் நாசப்படுத்திய ஒரு தேசத்தில் நிஜமான விளையாட்டு வீரர்கள் கவனிக்கப் படுவதே இல்லை. ஒரு சிலர் கவனிக்கப் பட்டாலும் பணமே குறிக்கோளாய் திசைமாறிவிடுவதும் உண்டு என்றாலும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரர்களும் உண்டு.. விஸ்வநாதன் ஆனந்த், செய்னா நோவல் , பைசுங் பூட்டியா மற்றும் பலர்..

விஸ்வநாதன் ஆனந்த்...
சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..

 ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் :
  • 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.(1983 - 84)
  • 1984ல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்.
  • 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்.
  • 1987 சர்வதேச கிராண்ட் மாஸ்டரானார்.
  • 1998ல் உலகத் தரவரிசைப் பட்டியலில் 2வது இடம்.
  • 2000ல் முதல் உலக் சாம்பியன் பட்டம்.
  • 6 கம்ப்யூட்டர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடி 4 க்கு 2 என்ற அளவில் வென்றார்.
  • 3 முறை செஸ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
  • இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை முதலில் பெற்றவர்.
  • அர்ஜுனா, பத்மஸ்ரீ( மிக இளம் வயதில் பெற்றவர்), பத்ம பூஷன், ஸ்போர்ட் ஸ்டாரின் “ 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஆனந்தின் ”My best games of Chess" என்ற புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப் பட்டது.
  • உலக சாம்பியன் பட்டம்- 2000, 2007, 2008, 2010
  • கோரஸ் சூப்பர் கிராண்ட்மாஸ்டர் டோர்னமண்ட் - 1989, 1998, 2003, 2004, 2006)
  • கோர்சிகா மாஸ்டர்ஸ் - 2000, 2001, 2002, 2003, 2004
  • செஸ் உலக்க் கோப்பை - 2000, 2002
  • இன்னும் ஏராளமான போட்டிகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்..
மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆனந்த்.. இந்தியா உங்களால் பெருமை அடைகிறது.. தமிழனாய் கூடுதலாகவும்..








Thanks - SanjaiGandhi

Tamil - The Last Classical Civilisation

தமிழ் நாடு : வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம்!

தமிழனக்கு பெருமை பட நிறையவே உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இது. மைகேல் வூட்ஸ் என்கிற ஆவன பட தயாரிப்பாளரின் நேர்காணலை கண்ட பொது அவர் தன்னுடைய தமிழ் ஆர்வம் பற்றியும் தமிழ் நாடு பற்றியும் சொல்ல. நாம் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற பெருமை நெஞ்சில் வந்த சில்லென்று தென்றல் வீசியது.

தமிழ் ஐரோப்பிய மொழிகளுக்கு எல்லாம் முந்தையது என்றார். அவரது பேச்சில் வெள்ளையர்கள் இந்தியாவின் உண்மையான கலையை காண மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

அவரது மொழி நடையும் அவரது ஆர்வமும் மெய்சிலிர்த்தது.

தமிழ் நாடு வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம் என்றார்.

அவரது பேச்சில் மிகுந்த பக்குவம் தெரிந்தது. முருகனின் சிரிப்பில் என்று அவர் ஒரு ஆங்கில நூல் எழுதி உள்ளார். அவர் பதிவு செய்தது உள்ள இந்தியாவின் கதை பல நாடுகளில் ஒளிபரப்பான ஒரு ஆவன படம்.

தமிழர்கள் மொகஞ்சதாரோ மனிதர்கள் என்கிறார்.

அவரது இந்த சொற்பொழிவு மற்றும் கேள்வி பதிலை காணுங்கள் - உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

http://www.intelligencesquared.com/talks/south-india-the-last-classical-civilisation

 In this video Michael Wood talks about the Tamil culture of South India. He describes it as the last surviving Classical civilisation, and runs through the extant features of the literature, language, sculpture, art, architecture, and philosophy. Wood explains how the landscape and geography of the Tamil region have influenced the material culture and way of life in South India.

எப்படியாவது காப்பாத்துங்க.

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும்

பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!

Sunday, May 9, 2010

சுறா - பரம திருப்தி

சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள்  தரும் வரவேற்பு எனக்கு பரம திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய் (என்னமா புளுகுறான்யா)

இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது!!!???????????. இது என்னுடைய 50வது படம்  என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை(ஸ்....சப்பா........).

இத்தனை நாள் வந்தது போல இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.(ஆமா..ஆமா.. அவ்வளவுதான், அதுல வேற என்ன இருக்கு)

இந்தப் படம் பற்றி வெளியில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும்.(கடுமையா இல்ல ரொம்ப கடுமையான்னு சொல்லு..பயபுள்ளய பாரு)

சில வருடங்களுக்கு முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..உனக்கு எவ்வளவுன்னுதான் போடுறது)

ஆனால் இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.(பார்றா...பயபுள்ளைக்கு பழகிருச்சாம்ல)

என்னைப் பற்றி, என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை.(சூ...ரனை இருந்தாத்தானே)

என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட வைக்கிறார்கள்.(பாவப்பட்ட பயபுள்ளைக..எவ்வளவுதான் தாங்குதுகள் பாரேன்)

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது. (ஆமா, அது சரி சென்னை றைட்ஸ் நீதானே வாங்கிவைச்சிருக்கிறாய்)

இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான் மக்களுக்காகப் போராடுகிறேன்.(ஒரு கு.. மக்களுக்காக போராடுறது சாதாரண விசயமா என்ன...)

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.(போட்ட காசை எடுத்திட்டியோ)

என்னுடைய அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.(பயபுள்ளைக எல்லாம் அதையும் ஓட்டுறதுக்கு ஆவலா இருப்பாய்ன்க, நீ கவலை படாத)

இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.(அப்ப வழமையான ஆப்பு தொடருமா)

Saturday, May 8, 2010

தங்கள் மொழியைக் காப்பதில் கலைஞரும் எடியூரப்பாவும

                   சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எல்லையாரமுள்ள சில கன்னடப்பள்ளிகளை மூடிவிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக அறிய வருவதாகவும் இது இரு மாநிலங்களின் நல்லுறவைப் பாதிக்கும் என்றும் கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு நல்லுறவு பேணப்படும் நிலையில் இந்தச் செய்தி வருத்தத்திற்குரியது என்றும் இதுபற்றித் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு எல்லையோரங்களில் போராட்டமே தொடங்கியது. கன்னட நாளிதழ்கள் இதுபற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

              உடனடியாக இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தத் தகவலே தவறு என்றும் எந்தக் கன்னடப்பள்ளிகளும் மூடப்டவில்லையென்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் "தமிழ் நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, மற்றும் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கன்னடத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட 53 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 3,946 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 185 கன்னட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. செயல்வழிக் கற்றல் முறையில் மாணவர்கள் எளிதாகக் கற்க கன்னட மொழியில் கற்பித்தல் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கன்னட மொழிப் பள்ளிகள் உட்பட எந்த சிறுபான்மை பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை,அத்தகைய கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. இப்பள்ளிகள் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது"என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.



இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் கலைஞர், “பத்திரிகைக்காரர்களைச் சந்திக்கின்றபோது, ஆராய்ந்து அல்லது ஏற்கெனவே இருப்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு பேசுவது பெரிய கலை. இதிலே எடியூரப்பா எப்படியோ ஏமாந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகின்றேன். கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலே உள்ள கலாச்சார உறவு, நட்புறவு- இவற்றை ஊனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அல்லது தெரிந்தோ தெரியாமலோ சில நிருபர்கள் கர்நாடக முதல்வரிடத்திலே ஒரு தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் "அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர்சொன்ன சொல்லானாலும் அதை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்ப்பாய்" என்ற பெரியாரின் மொழிகள்தான்-சர்வக்ஞர் என்கின்ற கன்னடத்திலே உள்ள அந்த மகானினுடைய கொள்கையாகவும் போற்றப்படுகிறது. ….........இதற்கான விளக்கத்தை நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இங்கே எடுத்துச்சொல்லி தெளிவுபடுத்தியிருக்கிறார். இதற்குப் பிறகும் எடியூரப்பா இதை உணராவிட்டால், நாம் வருத்தம்தான் படவேண்டும். ஆனால் நம்முடைய நிலை தமிழ்மொழியைக் காப்பதிலும், பிற மொழி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதிலும், தமிழ் மொழியைக் காக்கின்ற அந்த உணர்வில், பிற மொழிகளுக்கு எந்த ஊனமும் வராமல் பாதுகாப்பதும்தான் என்ற தெளிவான கொள்கை உடையது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த விளக்கத்தின் மூலமாக நான் கர்நாடக முதல் அமைச்சருக்கு- கர்நாடகத்திலே இருக்கின்ற மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.” என்று விரிவான விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.
கலைஞருடைய விளக்கத்தில் ஒரு விஷயம்தான் பிரதானமாயிருக்கிறது. இப்படியொரு விஷயம் கேள்விப்பட்டவுடன் கர்நாடக முதல்வர் அதனைச் சரிபார்த்துக்கொள்ளாமல் தமது எதிர்ப்பினை எதற்காக அவ்வளவு சீக்கிரமாக வெளியிட்டார் என்பதுதான் அது. இங்குதான் தமிழகத் தலைவர்களுக்கும் மற்ற மாநிலத் தலைவர்களுக்குமான வித்தியாசம் புலப்படுகிறது. எடியூரப்பா மட்டுமல்ல எல்லா மாநிலத்தலைவர்களுமே தங்கள் தாய்மொழி பாதிக்கப்படுகிறது எனும்போது இப்படித்தான் உடனடியாகச் செயல்படுகிறார்கள்- தமிழகத்தலைவர்களைத் தவிர.
அதிலும் குறிப்பாகக் கலைஞரைப் பொறுத்தவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆபத்து என்றுவரும்போது இவர்களைவிடவும் வேகமாகச் செயல்பட்டு அதனைத் தடுத்து நிறுத்துவார் என்றும், தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இன்னமும் சொல்லப்போனால் மற்ற எந்த மாநிலத்திலும் அந்தத் தலைவர்கள் மொழியை அடித்தளமாக வைத்து வளர்ந்தவர்களோ மொழி உணர்வை ஊட்டி தொண்டர்களை வளர்த்தவர்களோ அல்ல. ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அதிலும் குறிப்பாகக் கலைஞர் தமிழால் வளர்ந்தவர், தமிழை வளர்த்தவர், தமிழர்களை உணர்வால் உயர்த்தியவர்.


             உலகில் எந்த இடத்தில் தமிழுக்கோ தமிழர்களுக்கோ ஆபத்து என்றாலும் கலைஞர் காப்பாற்றுவார் என்ற பிம்பம்தான் தமிழர்களிடம் இருக்கிறது. ஈழ விவகாரத்துக்குப் பின்னர் இந்த பிம்பம் பெரிதாக அடி வாங்கியிருந்தபோதிலும் இன்னமும் நிறைய தமிழர்களிடம் கலைஞர் மீதான இந்த நம்பிக்கை தொடரவே செய்கிறது. 'ஈழ விவகாரத்தில் மத்திய அரசை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் என்று வரும்போது அவரை விட்டால் வேறு கதியில்லை' என்ற கருத்துத்தான் பலரிடமும் குடிகொண்டிருக்கிறது. ஆனால் உண்மைகள் கொஞ்சம் கசப்பானவை.


             கர்நாடகத்திலே தமிழுக்கும் தமிழர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக எத்தனை இடையூறுகள். எவ்வளவு தமிழர்கள் தாக்கதலுக்குள்ளாகியிருக்கிறார்கள்., எத்தனைக் கூட்டங்கள் எத்தனை அமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன, எத்தனைத் திரையரங்குகள் தாக்கப்பட்டிருக்கின்றன, படிப்படியாக இதுவரைக்கும் எத்தனைப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன....யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? எத்தனைத் தமிழர்த் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்? எந்தத் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள்? அல்லது குறிப்பாகக் கலைஞர் இதுபற்றிக் குரல் கொடுத்திருக்கிறார? நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறாரா? கர்நாடக அரசைக் கண்டித்திருக்கிறாரா? மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறாரா? என்றெல்லாம் பார்த்தால் ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.



                  அதுவும் கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் எப்போதுமே எந்த அரசு ஆணைகளின் மூலமும் மூடப்பட்டது கிடையாது. மிகவும் சாமர்த்தியமாகவே அந்தச் சாதனைகள் இங்கே நிகழ்த்தப் படுகின்றன. ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்; சேர்க்கைக் கிடையாது; பள்ளிகளில் தமிழ்ப்படித்தால் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை என்பதான புறச்சூழல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும். எல்லாப் பக்கங்களிலும் எல்லாவிதமான எதிர்ப்புச் சூழல்களும் திட்டமிட்டு பரப்பப்படும். தமிழ்ப்படித்தால் எதிர்காலமில்லை என்ற அரசாங்கக் கத்தி தலைக்கு மேலே தொங்கவிடப்படும். தமிழ் வகுப்புகளில் யாரும் சேரவில்லை என்ற நிலைமையைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிவிட்டுச் சட்டென்று வகுப்புக்களை நீக்கி விடுவார்கள். இம்மாதிரி இருநூறு பள்ளிகளுக்கும் மேலே தமிழ் பாடவகுப்புகள் நீக்கப்பட்டு விட்டன. தனியார்ப்பள்ளிகளுக்கு ஒருமாதிரியான நெருக்குதல்; அரசாங்கப் பள்ளிகளுக்கு வேறு மாதிரியான நெருக்குதல்; மாநகராட்சிப்பள்ளிகளுக்கு வேறுமாதிரியான நெருக்குதல் என்று மொத்தமாக ஊற்றி மூடிவிட்டார்கள். ஏழாவது வகுப்புவரை இந்த நிலைமை. இருநூறு பள்ளிகளுக்கும் மேல் தமிழ்ப் பயிற்றுவித்துக்கொண்டிருந்த நிலைமைபோய் இன்று வெறும் இருபது பள்ளிகளில்தாம் தமிழ் வகுப்புகள் உள்ளன. ஏழாவது வகுப்பிற்கும் மேல் கற்பிக்கும் பள்ளிகள் இரண்டோ மூன்றோதான் தேறும். இதுதான் கர்நாடகத்தின், பெங்களூருவின் நிலைமை.



               கலைஞருக்கு இந்த விவரங்கள் தெரியுமா-தெரியாதா ? கலைஞர் இதுபற்றி நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறாரா? அல்லது குரலாவது கொடுத்திருக்கிறாரா? அடுத்த மாநிலத்தில் தன்னுடைய மொழிக்கு ஏதோ ஆபத்து என்பதுபோல் செய்தி வந்தவுடன் எடியூரப்பா துடித்த துடிப்புக்கும் தமிழுக்கு எத்தகைய ஆபத்து வந்தபோதும் ஒன்றுமே நடக்காத மாதிரி இருக்கும் கலைஞரின் அமைதிக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான்.
வள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துவிட்டது ஒன்றுமட்டுமே எல்லாத் தமிழ்ப்பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாகாது என்பது கலைஞரே ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

தி.மு.க அதிலும் கருணாநிதி தமிழை வியாபாரத்திற்குத்தான் பயன்படுத்தினர்,பயன்படுத்துகின்றனர்.ஆனால் திட்டமிட்டு இவர்கள்தான் தமிழுக்காகப் பாடுபடுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர்.தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தனர்? ஒன்றுமில்லை என்பதுதான் கசப்பான் உண்மை

Thursday, May 6, 2010

மத்திய மந்திரி






காங்கிரஸும், சிபிஐயும் தங்களுக்குப் பொழுது போகாத சமயம் மட்டும் பேசி வந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு இப்போது நிஜமாகவே சீரியஸான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளிகளால் பாராளுமன்றமே கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில் புதிய அத்யாயமாக அமைச்சர் ராஜா மற்றும் நிரா நாடியா என்ற கார்பொரேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கனிமொழி ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை நேற்றைய தினம் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டு திமுக மற்றும் ராஜாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது. மற்ற செய்தி சேனல்கள் இதை கண்டுக்கொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம்.

இந்தியாவிலுள்ள சில கார்பொரேட் நிறுவனங்களுக்கு செய்தித் தொடர்பாளராகச் செயல்படுபவர் நிரா ராடியா. இவர் மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என கூறப்படுகிறது. தவிர இவர் மத்திய அரசிலும் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்பவர் என்பது கூடுதல் செய்தி. செல்வாக்கு என்றால், மத்திய அமைச்சர் பதவியையே பெற்றுத் தருமளவிற்க்கு செல்வாக்கு படைத்தவர். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இவர் பெயரும் அடிபட்டு, இப்பொழுது இவர் சிபிஐ விசாரணையின் கீழ் இருப்பவர் (என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும் ) இவரிடம் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் தொலைபேசியில் பேசியது ஹெட்லைன்ஸ் டுடே சானலில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த உரையாடலில், தனக்குக் கிடைக்கப் போகும் அமைச்சரவை மற்றும் அதற்கு போட்டியாக இருப்பவர்கள் என உரையாடல் நீள்கிறது. மொத்தம் 50 மணி நேரம் இந்த உரையாடல்கள் என்று சொல்லுகிறது செய்தி சேனல். இந்த உரையாடல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்ற சில நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வருமானவரித் துறை ஆணையம் இதனைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது ஹெட்லைன்ஸ் டுடே சானல் வசம் கிடைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை. காங்கிரஸே இதை லீக் செய்திருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.


Here are excerpts from a conversation recorded on May 24, 2009 at 11.05 am.

Raja: My name is cleared?
Radia: Yeah, your case was cleared last night itself. No, what is happening with Daya?
Raja: Textiles or fertilisers?
Radia: Not for Daya though, Azhagiri or Daya only one can come in?
Raja: No, two can come...
Radia: Both?
Radia: Baalu, will be the problem, I hope.
Radia: It will be difficult for the leader to justify three family members.
Raja: (laughs) Yeah, but everybody knows...
Radia: No she said that, Kani told me last night, that is what her father told her yesterday, that for him to justify three family members would be very difficult; he recognises that problem...
Raja: Let us see what we can do...let us fight.

In these conversations, Kanimozhi - referred to as Kani - is heard telling Radia that the DMK must get the telecom portfolio. Here are excerpts from the conversation recorded on May 21, 2009 at 8:41 pm.

Kani: Hello
Radia: PM has already clarified that the deal has not been done. They are still in the middle of discussing it.
Kani: They've already promised to give us telecom...but it cannot become that they shift...
Radia: What?
Kani: They have already told us that they will give us telecom. Now it shouldn't be given to him because he's going around planting stories.
Radia: He's planting it on all the channels while you were on the plane.
Kani: Ya I know that.
Radia: But Kanni, the PM has just made a statement that I have no problems with Raja and Baalu and they are my esteemed colleagues.
Kani: He can make a statement. But whoever's going to come and talk to dad shouldn't talk otherwise.. See what people say outside and what actually they mean is different... And all of us know that in politics.

Here are more excerpts from the conversations:

Radia: Kani there's feedback from the Congress. They say we recognise that the problem with the DMK is an internal problem. It's a problem between the family. It's a problem between their own people. They have given us a list of five people. This is not acceptable to us.
Kani: Ya
Radia: It is for them to resolve. We have told them what is the best that we can do.
Kani: Three and four...
Radia: We appreciate that the dialogue has broken down but it is not for us to get back to them. As far as we are concerned, Maran has been calling Ghulam Nabi Azad on the half hour demanding all sorts of things and they have told him that there is no point in you calling us.
Kani: But what is the demand he's got.
Radia: He has been making the same demands that you give us five portfolios or we will not join or give us railways, otherwise he has also demanded coal and mines. So they are saying as far as we are concerned this is an internal DMK problem. It has nothing to do with the Congress at all. They have taken a decision that it is for Karuna to decide who he wants and who he doesn't want in the formula. That has been provided to him. It's up to Karuna to decide but they feel that there are far too many people calling him including Maran.


முழு விவரம் இங்கே

சிபிஐ ரிப்போர்ட்

இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்கவி என்ன இவ்வாறு சொல்லுகிறார் "acting against Raja would not be as easy as in the case of Shashi Tharoor, Singhvi pointed out that the telecom minister did not belong to Congress."

கலைஞர் பேட்டி:

கேள்வி:- சில பத்திரிகைகளும், மாற்று கட்சியினர் சிலரும் மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி, அவர் பதவி விலக வேண்டுமென்று சொல்லி வருகிறார்களே?

பதில்:- மத்திய மந்திரி ஆ.ராசா ஒரு "தலித்'' ஆக இருக்கின்ற காரணத்தால் ஆதிக்க சக்திகள் சில இந்த அவதூறை பரப்பிக்கொண்டிருக்கின்றன.


எது எப்படியோ கலைஞர் டெல்லியில் நான் உங்களுக்கு சந்தோஷமான செய்தி எதுவும் கொண்டு வரவில்லை என்றார். நமக்கு இதைவிட வேற என்ன சந்தோஷம் வேண்டும் ?

இரவு 9 மணி அழைப்புக்கு காத்திருக்கிறேன் - மார்டினா நவரத்திலோவாஇரவு 9 மணி அழைப்புக்கு காத்திருக்கிறேன் - மார்டினா நவரத்திலோவா





உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி சில வாரம் முன்பு வெளியானது. உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படும் மார்டினா நவரத்திலோவா மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அது. அதனை நவரத்திலோவாவும் ஒரு இணையதள செய்திப் பத்திரிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

" I Cried " என்று நவரத்திலோவா கூறியுள்ளதாகத் தலைப்பிட்டு அச்செய்தி நிறுவனம் இதனை வெளியுட்டுள்ளது. தற்போது 53 வயதாகும் நவரத்திலோவாவின் பயாப்ஸி ரிப்போர்ட் அவரது இடது புற மார்பகத்தில் புற்று நோயை உறுதி செய்துள்ளது.

வெட்னஸ்டே ரிப்போர்ட் என்ற செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இப்புற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இம்மே மாதம் முதல் ஆறு வார ரேடியேஷன் தெரபி சிகிச்சையை நவரத்திலோவா மேற்கொள்ளவுள்ளார். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சீக்கிரம் குணமடையும் என்று நம்பலாம்.

ஷெல்லி ஹ்வாங் என்ற சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்க்கையில், ஆண்டு தோறும் சுமார் எழுபதாயிரம் அமெரிக்கப் பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஐந்தில் ஒருபங்கு பேருக்கு புதிதாகக் கண்டறிபட்டிருக்கும் ஒருவகைப் புற்றுநோய் தாக்க்குவதாகவும் தெரிவிக்கிறார்.

ஒன்பது முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மார்டினா, இப்பொழுதும் தொடர்ந்து டென்னிஸ் மற்றும் ஐஸ் ஹாக்கி விளையாடி வருகிறார். செக் குடியரசைச் சேர்ந்த மார்ட்டினா நவரத்திலோவா 1981 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். 18 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் பட்டங்களை வென்றுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் போன மாதம் வந்த கட்டுரை உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதன் தமிழாக்கம் கீழே...


இது லியாண்டர் பயஸூக்கு தனது நன்றியைத் திருப்பிச் செலுத்தும் காலம். ஏறக்குறைய ஏழாண்டுகளுக்கு முன்னர், 2003 இல் இந்தியாவின் மிக வெற்றிகரமான டென்னிஸ் நட்சத்திரமான லியாண்டருக்கு அமெரிக்காவின் ஆர்லாண்டொவிலுள்ள ஒரு மருத்துவமனையில், மூளையில் ஒருவிதமான தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று இவரை டென்னிஸ் கோர்டிலிருந்து விடுவித்து, மருத்துவமனையில் சுமார் ஆறு மாத காலத்திற்குக் கிடத்தியது. இந்த மோசமான கருப்பு தினங்களிலிருந்து இவரை மீட்டெழுப்பி டென்னிஸின் இரண்டாவது அத்யாயத்தை இவர் தொடரக் காரணமாக இருந்தவர், இவருடைய கலப்பு இரட்டையர் கூட்டாளியான செக்-அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா. அப்பொழுது லியாண்டருக்கு வயது 30, மார்ட்டினாவுக்கு 46; அந்த வயதில் இருவரும் கூட்டாக கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றனர், பிறகு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களது இந்த நட்பு டென்னிஸ் கோர்ட்டிற்கு வெளியிலும் மிக நெருக்கமாகத் தொடர்ந்தது. ஆனால் அந்த நட்பின் உண்மையான ஆழம் வெளிப்பட்டதென்னவோ லியாண்டரின் எதிர்காலத்தைச் சிதைக்கும் விதமாக மூளையில் கட்டி என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் வீழ்ந்த பிறகுதான்இதுந்த கடினமான தருணத்தில் லியாண்டருக்கு பக்கபலமாக இருந்தது மார்ட்டினாதான். இந்த நட்பிற்கு மரியாதை தரும் விதமாக, 2003 ஆகஸ்டில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் வேறு எந்தவொரு வீரருடனும் கலப்பு இரட்டையரில் கூட்டு சேர மறுத்துவிட்டார். இப்பொழுது லியாண்டருக்கு இந்த நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரம். காரணம்??

மார்ட்டினாவுக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாக கடந்த பிஃப்ரவரியில் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றி மார்ட்டினா தெரிவிக்கையில்," எனக்கு இது தனிப்பட்ட முறையிலான செப்டெம்பர் 11 போன்றதாகும். எனது பின்புறத்தில் பலமாகத் தாக்கப்பட்டது போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்". அதிர்ஷ்டவசமாக இவரது மார்பகத் திசுக்களை இன்னும் புற்றுநோய் தாக்கவில்லை. அது மேலும் பரவாமல் தடுக்கவும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும், இம்மேமாதம் துவங்கி ஆறு வார காலத்திற்கான ரேடியோக்ராம் சிகிச்சையும் மேற்கொள்ளவுள்ளார். கடந்த வாரம் வரை இச்செய்தியை உலகிடமிருந்து மறைத்தே வைத்திருந்த மார்ட்டினா, கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேரடி ஒளிபரப்பு பேட்டியில் இதனை வெளிப்படுத்தினார். அதுவும் மற்ற பெண்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும்படியும், தன்னைப் போல் யாரும் மெத்தனமாக இருந்து விட வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை நேரடி ஒளிபரப்பில் பகிரங்கப்படுத்துவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் லியாண்டரை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், ஆனால் இது குறித்து எதுவும் அவரிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் மார்ட்டினாவின் குரலில் ஒலித்த மாற்றத்தால் அதனை உணர்ந்த லியாண்டர், என்னவென்று வினவியபோது, பிறகு அழைக்கிறேனென்று தொலைபேசியிணைப்பைத் துண்டித்துவிட்டார் மார்ட்டினா. அப்போதே ஏதோ விபரீதம் என்று நான் உணர்ந்து விட்டேன் என்று லியாண்டர் கூறினார்.

லியாண்டருக்கு இச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது. மார்ட்டினாவிடம் தொலைபேசியில், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று வினவியதற்கு, மார்டினாவின் பதில், "இப்போது நீ என்னுடைய சாம்பியனாக இரு, தினமும் என்னை இரவு 9 மணிக்கு அழைப்பவனாக இரு" என்பதே. இவ்வார்த்தைகள் லியாண்டரின் இதயத்தைத் தைத்தன, மேலும் லியாண்டரை அவருடைய 2003 ஆம் ஆண்டின் நினைவுகளுக்கு இட்டுச் சென்றன. அப்போது வியாதியுடன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த லியாண்டருக்குப் பக்கத் துணையாக இருந்தவர் மார்ட்டினா. "வாழ்க்கையாகட்டும் அல்லது டென்னிஸ் கோர்ட்டாகட்டும், மார்ட்டினாவின் துணையிருந்த போது, மேலும் முன்னேறக் கூடும் என்ற நம்பிக்கை இருந்தது" என லியாண்டர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு இரவும் 9 மணிக்கு மார்ட்டினா தொலைபேசி மூலம் அழைத்து நலம் விசாரிப்பார், அதற்கு முன்னர் 8.45 ற்கே எனது மருத்துவரைத் தொடர்பு கொண்டு, அன்றைய என்னுடைய உடல்நிலை முன்னேற்றம் பற்றிய அறிக்கை முழுவதையும் கேட்டறிந்திருப்பார். இப்போது தினமும் அவரை ஒன்பது மணிக்கு அழைக்க வேண்டியது என்னுடைய முறை!! நாங்கள் எப்போதுமே தொலைபேசி தொடர்பிலிருப்போம். வாழ்க்கை என்பது ஓரு முழுமையான சக்கரம் போன்றது.

மார்ட்டினா கூறுகையில், என்னுடைய வாழ்க்கையும், உடல் நலனும் கட்டுக் கோப்பாகவே இருந்தன. 54 வயதிலும் நல்ல ஆரோக்யத்துடன் இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் தற்போது எனக்கு இது நேர்ந்து விட்டது. என்னுடைய மாமோகிராம் சோதனைகளுக்கிடையில் நான்காண்டு கால இடைவெளி விழுந்து விட்டது. எல்லோரும் ஒருவிதத்தில் ஏதாவது ஒன்றில் ஆழ்ந்து விடுகிறோம், ஆனால் அதனை ஒரு சமாதானமாக பிரயோகப்படுத்துதல் கூடாது. நீங்கள் எவ்வளவுதான் உங்களை வியாதிகளால் வெல்ல முடியாதவராக நினைத்திருந்தாலும், கட்டாயமாக மாமோகிராம் சோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து கொள்வது அவசியம், என்று சக பெண்மணிகளுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் தன்னுடைய புற்று நோயைப் போராடி வெற்றி கொள்வேன் என்று மார்டினா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். "இது மற்றொரு டென்னிஸ் ஆட்டத்தைப் போன்றது, அதில் மார்ட்டினா நிச்சயம் வெற்றி பெறுவார், அவர் உண்மையான சாம்பியன் என்பதால் அல்ல!! அத்தகைய மனிதர் என்பதால்". தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக சுயமாகவே வாழ்ந்தவர் என்பதால், என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் லியாண்டர். எனினும் அதனை உறுதிப் படுத்திக்கொள்ள ஒவ்வொரு இரவும் ஒன்பது மணிக்கு அவரைத் தொலைபேசியில் அழைப்பார் லியாண்டர்.


நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

Raavanan Tamil Movie Songs Download

Raavanan Tamil Movie Songs Download - Tracklist

1. Veera Veera - A R Rahman, Kailash Kher

2. Kata Kata - Ila Arun, Malgudi Subha, Sonu Niigaam

3. Kodu Poatta  - Benny Dayal

4. Kaattu Sirukki - Shankar Mahadevan, Anuradha Sriram

5. Kalvare - Shreya Ghosal

6 - Usure Pogudhey - Karthik

Saturday, May 1, 2010

சுறா - நடந்தது என்ன??

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ??


சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ
இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த
படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி
இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில்
மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ்
இல்லாம கெட்டு போச்சு.

சுறா - புட்டா?? லட்டா??

சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று
நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்...
விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த
குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில்
நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில்
குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட
போறார்னு நீங்க விஜயை மேஸ்தரியோ இல்லை கொத்தனாரோ
என்று நினைத்து விட வேண்டாம். மந்திரி கில்லிடம் இருந்தே
பணத்தை எடுத்து...ஆஆவ்வ்......கண்ணை கட்டுதா...சரி ஸ்டாப்
பண்ணிக்கிறேன்!!

விஜய், மாஸ் ஹீரோ அப்படின்னு பார்ம் ஆயிட்டாரு.பக்கம்
பக்கமா வசனம் பேசி தள்ளுறார்,அதுவும் மக்களை பார்த்து
அவர் பேசும் வசனங்கள்...ஐயோ! ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா
சொல்லியே ஆகணும் ரியாஸ் கான் விஜயை அடிக்க கை ஓங்கும்
சீனும் அந்த வசனமும் மரண மாஸ்.ஆனா என்ன பல இடங்களில்
தளபதி போக்கிரி மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார்.


யார்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்??
தமன்னா, வழக்கமா விஜய் படத்தில் வரும் நாயகி தான்.
பாடல் காட்சிகளில் மட்டும் உதவி இருக்கிறார்.பாட்டில் எல்லாம்
சின்ன trouser இல் வருகிறார் மற்றபடி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை.வடிவேலு, அண்ணே பயங்கர அவுட் ஆப் பார்மில்
இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. சில காட்சிகளில் மட்டும்
சிரிக்க வைக்கிறார் மற்ற காட்சிகளில் எரிச்சலே....!!

நாங்க பழைய படத்தை டி.வி.யிலோ இல்ல டி.வி.டி.யிலோ வாங்கி பார்த்துக்கறோம்னு டைரக்டர் கிட்ட சொல்லுங்கப்பா.... அரத பழசான காட்சிகளை தூசி தட்டி எடுத்து... ஏன்...??



விஜய் தீடிர்னு அப்போ அப்போ மிமிக்ரி எல்லாம் செய்றாரு,அதுவும் கோர்டில் ஏதோ தீடிர்னு அசத்த போவது யார்னு பார்த்த மாதிரி இருந்துச்சி. வில்லனின் அல்லக்கையில் ஒருவராக வரும் இளவரசு வாயை திறந்தாலே விஜய் புகழ் பாடுகிறது(தலைவலிடா சாமி!!).தளபதி இந்த படத்திலும் நன்றாக பறக்கிறார் இதில் உச்சக்கட்டமாக மூன்று காட்சிகளில் பறந்து அடியாட்களை பொரட்டி எடுக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் விஜய் எஸ்.எம்.எஸ் காமெடியை வடிவேலு யூஸ் பண்ணிருப்பாரு... அதாவது இன்டெர்வல் விட்டாங்கன்னு வெளியே வந்தேன்ப்பா பயங்கர அடி என்று விஜய்யிடம் வடிவேலு சொல்லுவார்....ஏன் என்று விஜய் கேட்பார்.. நான் படம் பார்த்தது பஸ்சில் ஆச்சே என்று வடிவேலு கூறுவார்.

ஒரே சந்தோசம் அம்பது ரூபாயோடும் அலைச்சல் இல்லமாலும்
பார்த்தது தான்.காரணம் மாயாஜால் போலாம்னு நினைச்சோம்
ரெண்டு டிச்கேட்க்கு கிட்ட தட்ட மூண்ணுருக்கு மேல் மிச்சம்!!


இம்சை அரசன் இந்த படத்தை பார்த்து இருந்தா என்ன சொல்லி இருப்பாரு:
மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...வாடா படம் வரவில்லையே என்ற ஆதங்கம் இனி இல்லை.ஆகையால் மக்களே சமாதி நிலை அடைய வாடா படம் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டாம்...
ஹ்ம்.. இப்போதே படையெடுங்கள் சுறா ஓடும் தியேட்டருக்கு!!

சுறா - சூர மொக்கை!!

Infolinks

ShareThis