Sunday, May 9, 2010

சுறா - பரம திருப்தி

சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள்  தரும் வரவேற்பு எனக்கு பரம திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய் (என்னமா புளுகுறான்யா)

இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது!!!???????????. இது என்னுடைய 50வது படம்  என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை(ஸ்....சப்பா........).

இத்தனை நாள் வந்தது போல இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.(ஆமா..ஆமா.. அவ்வளவுதான், அதுல வேற என்ன இருக்கு)

இந்தப் படம் பற்றி வெளியில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும்.(கடுமையா இல்ல ரொம்ப கடுமையான்னு சொல்லு..பயபுள்ளய பாரு)

சில வருடங்களுக்கு முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..உனக்கு எவ்வளவுன்னுதான் போடுறது)

ஆனால் இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.(பார்றா...பயபுள்ளைக்கு பழகிருச்சாம்ல)

என்னைப் பற்றி, என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை.(சூ...ரனை இருந்தாத்தானே)

என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட வைக்கிறார்கள்.(பாவப்பட்ட பயபுள்ளைக..எவ்வளவுதான் தாங்குதுகள் பாரேன்)

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது. (ஆமா, அது சரி சென்னை றைட்ஸ் நீதானே வாங்கிவைச்சிருக்கிறாய்)

இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான் மக்களுக்காகப் போராடுகிறேன்.(ஒரு கு.. மக்களுக்காக போராடுறது சாதாரண விசயமா என்ன...)

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.(போட்ட காசை எடுத்திட்டியோ)

என்னுடைய அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.(பயபுள்ளைக எல்லாம் அதையும் ஓட்டுறதுக்கு ஆவலா இருப்பாய்ன்க, நீ கவலை படாத)

இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.(அப்ப வழமையான ஆப்பு தொடருமா)

No comments:

Post a Comment

Infolinks

ShareThis