புதுடில்லி : 'தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியலாக்கி விடாதீர்கள்' என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு 'குட்டு' வைத்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில், கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. எனினும், இப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள், இன்னும் தூக்கில் இடப்படாமல், காக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, 2001ல் பார்லிமென்ட்டை தாக்கிய, அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை குற்றவாளிகளின், கருணை மனுக்கள் ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருப்பதுதான் இதற்கு காரணம். இந்நிலையில், கசாபின் தீர்ப்பு வெளிவருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் கருணை மனு முடிவு மீதான தாமதம் குறித்து, மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை அளித்திருக்கிறது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கூறியிருந்ததாவது:மனிதர்கள் அடிமைகள் அல்ல; அவர்களை சில அரசியல் மற்றும் அரசு கொள்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு, அவர்கள் அடகு வைக்கப்பட்ட பொருட்களும் அல்ல என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறோம்.கருணை மனுக்கள் மீதான மிதமிஞ்சிய தாமதம், தூக்கு தண்டனை பெற்றவர்கள், தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி, கோரிக்கை வைக்கும்படி செய்து விடும். அரசின் இந்த தாமதச்செயல், அவர்கள் கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை மறுக்கிறது.பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதியின் மேஜையில் தேங்கி கிடக்கும் இவ்வேளையில், இந்த தாமதம் முறையல்ல என்று சுட்டிக் காட்டுவது பொருத்தமானதுதான்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment