உலகின் விதியைத் தம்முடைய கையிலே வைத்து விளையாடிக் கொண் டிருந்த ஸ்டாலின், போட்டோவின் முன் வரிசையில், நடுநாயகமாக கழுத்திலே மாலையுடனும், கையிலே பூச்செண் டுடனும் தோற்றமளித்ததை நாம் பார்த் திருக்க முடியாது.
ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதையே நாம், பல தடவைகளில் பார்த்திருக்கிறோம். அவர் எங்கு நின்றால்தான் என்ன! அவர் அவராக இல்லாது, வேறொருவராய் ஆகிவிடுவாரா என்ன?
நெப்போலியன் தோல்வியுற்றதும், அவருடைய ஊழியர்களுக்கெல்லாம், பிரிட்டிஷார் ஓர் ஆணை யிட்டனர். அதாவது, 'இனிமேல் அவரைப் பேரரசர் என்று எவரும் அழைக்கக் கூடாது; ஜெனரல் என்று தான் அழைக்க வேண்டும்!' என்று.
இதைக் கேள்வியுற்ற நெப் போலியன் சிரித்துக் கொண்டே, 'என்னை எப்படி அழைத்த போதிலும், நான் நானாகவே இருப்பேன்...' என்று கூறினார்.
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தலைவராக ஜெனரல் ஐசன் ஹோவர் நியமிக்கப் பட்ட போது, 'தங்களைத் தளபதி என்று அழைக்கவா அல்லது தலைவர் என்று அழைக்கவா?' என்று ஒருவர் கேட்ட போது, 'மிஸ்டர் ஐக் என்று அழையுங்கள்...' என்று கூறினார் அவர்.
இவ்வித மனோநிலை ஒருவனை ஆட் கொண்டு விட்டால், அவன் ஒரு போதும் அற்ப விஷயங்களை எண்ணி அங்கலாய்த்துக் கொள்ள மாட்டான்.
— அப்துல் ரஹீம் சுயமுன்னேற்றக் கட்டுரையில்.
No comments:
Post a Comment