Thursday, May 6, 2010
மத்திய மந்திரி
காங்கிரஸும், சிபிஐயும் தங்களுக்குப் பொழுது போகாத சமயம் மட்டும் பேசி வந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு இப்போது நிஜமாகவே சீரியஸான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளிகளால் பாராளுமன்றமே கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில் புதிய அத்யாயமாக அமைச்சர் ராஜா மற்றும் நிரா நாடியா என்ற கார்பொரேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கனிமொழி ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை நேற்றைய தினம் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டு திமுக மற்றும் ராஜாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது. மற்ற செய்தி சேனல்கள் இதை கண்டுக்கொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம்.
இந்தியாவிலுள்ள சில கார்பொரேட் நிறுவனங்களுக்கு செய்தித் தொடர்பாளராகச் செயல்படுபவர் நிரா ராடியா. இவர் மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என கூறப்படுகிறது. தவிர இவர் மத்திய அரசிலும் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்பவர் என்பது கூடுதல் செய்தி. செல்வாக்கு என்றால், மத்திய அமைச்சர் பதவியையே பெற்றுத் தருமளவிற்க்கு செல்வாக்கு படைத்தவர். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இவர் பெயரும் அடிபட்டு, இப்பொழுது இவர் சிபிஐ விசாரணையின் கீழ் இருப்பவர் (என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும் ) இவரிடம் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் தொலைபேசியில் பேசியது ஹெட்லைன்ஸ் டுடே சானலில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த உரையாடலில், தனக்குக் கிடைக்கப் போகும் அமைச்சரவை மற்றும் அதற்கு போட்டியாக இருப்பவர்கள் என உரையாடல் நீள்கிறது. மொத்தம் 50 மணி நேரம் இந்த உரையாடல்கள் என்று சொல்லுகிறது செய்தி சேனல். இந்த உரையாடல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்ற சில நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வருமானவரித் துறை ஆணையம் இதனைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது ஹெட்லைன்ஸ் டுடே சானல் வசம் கிடைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை. காங்கிரஸே இதை லீக் செய்திருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
Here are excerpts from a conversation recorded on May 24, 2009 at 11.05 am.
Raja: My name is cleared?
Radia: Yeah, your case was cleared last night itself. No, what is happening with Daya?
Raja: Textiles or fertilisers?
Radia: Not for Daya though, Azhagiri or Daya only one can come in?
Raja: No, two can come...
Radia: Both?
Radia: Baalu, will be the problem, I hope.
Radia: It will be difficult for the leader to justify three family members.
Raja: (laughs) Yeah, but everybody knows...
Radia: No she said that, Kani told me last night, that is what her father told her yesterday, that for him to justify three family members would be very difficult; he recognises that problem...
Raja: Let us see what we can do...let us fight.
In these conversations, Kanimozhi - referred to as Kani - is heard telling Radia that the DMK must get the telecom portfolio. Here are excerpts from the conversation recorded on May 21, 2009 at 8:41 pm.
Kani: Hello
Radia: PM has already clarified that the deal has not been done. They are still in the middle of discussing it.
Kani: They've already promised to give us telecom...but it cannot become that they shift...
Radia: What?
Kani: They have already told us that they will give us telecom. Now it shouldn't be given to him because he's going around planting stories.
Radia: He's planting it on all the channels while you were on the plane.
Kani: Ya I know that.
Radia: But Kanni, the PM has just made a statement that I have no problems with Raja and Baalu and they are my esteemed colleagues.
Kani: He can make a statement. But whoever's going to come and talk to dad shouldn't talk otherwise.. See what people say outside and what actually they mean is different... And all of us know that in politics.
Here are more excerpts from the conversations:
Radia: Kani there's feedback from the Congress. They say we recognise that the problem with the DMK is an internal problem. It's a problem between the family. It's a problem between their own people. They have given us a list of five people. This is not acceptable to us.
Kani: Ya
Radia: It is for them to resolve. We have told them what is the best that we can do.
Kani: Three and four...
Radia: We appreciate that the dialogue has broken down but it is not for us to get back to them. As far as we are concerned, Maran has been calling Ghulam Nabi Azad on the half hour demanding all sorts of things and they have told him that there is no point in you calling us.
Kani: But what is the demand he's got.
Radia: He has been making the same demands that you give us five portfolios or we will not join or give us railways, otherwise he has also demanded coal and mines. So they are saying as far as we are concerned this is an internal DMK problem. It has nothing to do with the Congress at all. They have taken a decision that it is for Karuna to decide who he wants and who he doesn't want in the formula. That has been provided to him. It's up to Karuna to decide but they feel that there are far too many people calling him including Maran.
முழு விவரம் இங்கே
சிபிஐ ரிப்போர்ட்
இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்கவி என்ன இவ்வாறு சொல்லுகிறார் "acting against Raja would not be as easy as in the case of Shashi Tharoor, Singhvi pointed out that the telecom minister did not belong to Congress."
கலைஞர் பேட்டி:
கேள்வி:- சில பத்திரிகைகளும், மாற்று கட்சியினர் சிலரும் மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி, அவர் பதவி விலக வேண்டுமென்று சொல்லி வருகிறார்களே?
பதில்:- மத்திய மந்திரி ஆ.ராசா ஒரு "தலித்'' ஆக இருக்கின்ற காரணத்தால் ஆதிக்க சக்திகள் சில இந்த அவதூறை பரப்பிக்கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ கலைஞர் டெல்லியில் நான் உங்களுக்கு சந்தோஷமான செய்தி எதுவும் கொண்டு வரவில்லை என்றார். நமக்கு இதைவிட வேற என்ன சந்தோஷம் வேண்டும் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment