- சன்
பிக்சர்ஸ் சுமார் 150 கோடி செலவில் தயாரிக்கும் பிரபல இயக்குனர்
ஷ்ஷ்ஷ்ஷங்கரின் படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் நடிக்கும் இந்தப்படத்தின்
விளம்பரங்கள் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 'அஞ்சு பைசா பிரயோஜனமில்லாத
அல்பாயிசு குப்பை' படங்களுக்கே வினாடிக்கொரு விளம்பரம்
போட்டு கழுத்தறுக்கும் இந்த சன் டிவி. ரஜினிகாந்த் நடிச்ச இந்தப்
படத்துக்கு என்ன செய்ய காத்திருக்கோ! என்று சன் பார்வையாளர்கள் இப்போதே
பெரும் பீதியில் உள்ளார்கள்.
பற்றாக்குறைக்கு
சன் டிவியிலேயே ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் எந்திரன் படத்தை மக்களிடையே
கொண்டு சேர்க்க படத்தின் இயக்குனர் ஷ்ஷ்ஷங்கர், கதாநாயகி ஐஸ்வர்யா ராய்,
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் ரஜினிகாந்த் இவர்களை எந்திரன் படம்
குறித்துப் பேச வைக்க உள்ளனர். எந்திரன் படம் உருவான சுவாரஸ்யமான கதைகள்
குறித்து கதைக்க உள்ளனராம். எது எப்படியோ எந்திரன் புரொமோஷனைப்
பார்ப்பவர்கள் எந்திரர்களாகத்தான் (ரோபோக்கள்) தொலைக்காட்சியைவிட்டு
எழுந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதுக்கு எப்படிங்க ரஜினி
ஒத்துக்கிட்டாரு? கடைசி நேரத்துல கைய விரிச்சுட்டா கொஞ்சம் நஞ்சம்
இருக்குற மரியாதை அந்த மனுசருக்கு மிஞ்சும். ம்ம்ம்.... நம்மதான் ரஜினி
படம்னா ராத்திரி முழுக்க முழிச்சுருந்து பாப்போமே.... யாராச்சும் நெறய
காசு குடுக்கற பார்ட்டி மாட்டினா தொலைக்காட்சிகள்ல வெறும் விளம்பரம்
மட்டுமே ஒளிபரப்பத் தயாராக உள்ளன சில சேனல்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த
கொடுமைகளை!
|
No comments:
Post a Comment