நான் பயிற்சி பெற, அமெரிக்காவின் தலை சிறந்த ராக்கெட் நுட்ப ஆய்வுக் கூடமான, வாலோபசுக்கு சென்றிருந்தேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்புக் கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் மிகப் பெரிய ஓவியம் இருந்தது.
ஆனால், அந்த ஓவியத்தில் ராக்கெட்டுகளைச் செலுத்திக் கொண்டிருந்த வீரர்கள், வெள்ளையர்களாக இல்லாதது, என் கவனத்தைக் கவர்ந்தது; கூர்ந்து கவனித்தேன். ஆசிய உருவ அமைப்பும், நிறமும் கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டனர். அது, பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன் சீரங்கப்பட்டிணத்தில், திப்பு நடத்திய விடுதலைப் போர்க்காட்சி என்பது, என் வியப்பை மேலும் அதிகரித்தது.
திப்புசுல்தான் நடத்திய ராக்கெட் போரை நாம் மறந்துவிட்டாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மறக்காமல், ஓவியமாக வரைந்து வைத்திருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.
— முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்,
தன் சுயசரிதை நூலில்...
No comments:
Post a Comment