மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?
மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா? எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்... கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின் முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள். அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடி...