அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!

by அபி அப்பா அண்ணா அவர்கள் 1968ல் அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction" என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா? அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்! கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன? அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் ...