Posts

Showing posts from November, 2012

மாமாவின் மருமகனும், மருமகளின் மருமகனும்

Image
சுதந்திரம் என்பது, அன்னியரை விரட்டும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் நிகழ்ந்துவிடாது. நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து, ஏழை, எளிய மக்களை ஏமாற்றாமல், ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும். இதை புரிந்து செயல்பட்டவர்களில் ஒருவர் தான், பெரோஸ் காந்தி. இந்திராவும், அவரின் வழிவந்த நண்டு, சுண்டைக்காய்களும் தன் பெயருக்கு பின்னால், "காந்தி' என்று சேர்க்க காரணமாக இருந்தவர், பெரோஸ் காந்தி.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பலமுறை சிறை சென்றவர். நேரு மாமாவின் அரசியல் தவறுகளை, சுட்டிக் காட்ட சிறிதும் அஞ்சாத மருமகன்.                           கடந்த 1942-மார்ச், 26ம் தேதி, இந்திராவை, நேருவின் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்த பெரோஸ் காந்தி, அதே ஆண்டு நடைபெற்ற, "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில், தன் மனைவி இந்திராவுடன் கலந்து கொண்டார். 1942- செப்., 10ம் தேதி கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, அலகாபாத்தில் உள்ள, "நெய்னி' மத்திய சிறையில் அ...