கற்றலினால் ஆன பயன் என்ன?
கற்றலினால் ஆன பயன் என்ன? .. எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்.. கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்.. அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்.. விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்.. டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம். எல்லாம் சரிதான். .. ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழ ுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. .. ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே.. .. அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம். .. கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயில...