பத்ரி சேஷாத்ரி: பிகாரி
பத்ரி சேஷாத்ரி: பிகாரி : ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு. கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் அனைவ...