நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி கு.வி.கிருஷ்ண மூர்த்தி நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும். நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும். ஆக்சிஜன் அமுதசுரபி சங்க இலக்கி...