அடடே .....!

கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார். நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை. கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெ...