என் படிப்பிற்குஉதவும்ஊர் மக்கள்! படிப்பதற்கே வழியில்லாமல், ஊர் மக்க ளின் உதவியுடன் படிக்கும் காயத்ரி: எங்கப்பா அன்பழகன், அம்மா ராணி, கூடப் பிறந்தவங்க இரண்டு தம்பிகள். எங்கப்பா தப்பு அடிக்கும் தொழில் செய்கிறார். வேலையில்லாத நாட்களில், கட்டட வேலைக்குப் போவார். தினமும் 150 ரூபாய் வருமானம் வரும். சாப்பாட்டிற்கே வழியில்லாததால், எங்க வீட்டில் ஐந்தாவது, ஆறாவதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை. அதனால், என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென, என் அப்பா ஆசைப்பட்டார்.பள்ளிக்கூடத்தில் பழைய சோறும், ஊறுகாயும் கொண்டு வரும் என்னைப் போலுள்ள மாணவியருடன், பணக்கார மாணவியர் நட்பு வைத்துக் கொள்ள தயங்குவர். எங்களை விட்டு ஒதுங்கியே இருப்பர். அவர்கள் என் பக்கம் வர வேண்டும் என்பதற்காகவே, கஷ்டப்பட்டு படிப்பேன்.கடைசியில், என் படிப்புத் திறமையை பார்த்து எல்லாரும், என்னிடம் வந்து பழகினர். பத்தாம் வகுப்பில், 473 மார்க் வாங்கினேன். டாக்டராக வேண்டும் என, பிளஸ் 2வில் அறிவியல் பாடம் எடுத்தேன்.பிளஸ் 2வில் 1153 மார்க் வாங்கிய எனக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிட...