புதிய தலைமுறை அறக்கட்டளை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்காகப் பணியாற்றும் ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே. நமது அறக்கட்டளை இதுவரை 950க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 182 இலவசக் கல்வி மையங்களும், அரியலூர் மாவட்டத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டிற்காக ஓர் நிரந்தர இளைஞர் திறன் மேம்பாட்டு மையமும் இயங்கி வருகின்றன. சுயதொழில் 2013 '' வாய்ப்புகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன” . ' ஆனால் எப்படி ஆரம்பிப்பது , யாரை அணுகுவது , முக்கியமாக முதலீட்டுக்கு என்ன செய்வது ?’ என்று ஒரு கூடை கேள்விகளை சுமந்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழி வகை செய்யும் நோக்கில் நமது அறக்கட்டளை , “ எம் எஸ் எம் இ – டி ஐ '', குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்துடன் (MSME-DI - Micro, Small and Medium Enterprises - Development Institute) இணைந்து “ சுயதொழில் 2013 ” ( சுயதொழில் முனைவோருக்...