chitika-top

Sunday, January 23, 2011

தடகள போட்டி புறக்கணித்த அமைச்சர்/அதிகாரிகள்

நிறைவு விழாவையும் புறக்கணித்த அமைச்சர், அதிகாரிகள் : தடகள போட்டியில் மாணவர்கள் கண்ணீர்

சென்னை : சென்னையில் 23 ஆண்டுகளுக்கு பின், நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் புறக்கணித்ததால், மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டு கதறினர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கும். இதன் நிறைவு விழா ஏதாவதொரு மாவட்ட தலைநகரில் நடைபெறும். இந்த ஆண்டு 53-வது குடியரசு தின மாநில தடகள போட்டி, 23 ஆண்டுகளுக்கு பின், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 20ம் தேதி துவங்கி, நேற்று முடிந்தது. துவக்க விழாவில் முக்கிய விருந்தினராக முதன்மை பள்ளிக் கல்வி அதிகாரி மட்டும் பங்கேற்றார். நேற்று நடந்த நிறைவு விழாவில், மாநில தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் பங்கேற்று பரிசு வழங்கி பாராட்டினார். தமிழகம் முழுவதும் 1,400 பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்று, 95 பேர் பரிசுகளை வென்றனர். பவித்ரா, மதுப்ரியா, அர்ச்சனா மற்றும் பிரவீன் முத்துக்குமார் ஆகியோர் 19 வயதுக்கு கீழ் உள்ள போட்டியிலும், 17 வயதுக்கு கீழ் ராஜவேலன், பெரைல் ஹட்சன், 16 வயதுக்கு கீழ் சின்னதேவன், நந்தினி ஆகியோரும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சியுடன் நடந்த விழாவில், விளையாட்டு மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில், கல்வி அமைச்சரோ, துறை செயலரோ, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாநில, மாவட்ட உயரதிகாரிகளோ பங்கேற்கவில்லை. இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர்கள் முகத்தில் பெரும் சோகம் தெரிந்தது. சில மாணவியர் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பரிசளிப்பு விழாவை உடற்கல்வி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் புறக்கணித்து, விழா மைதானத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். பின், அரங்கின் வாயில் அருகே தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது: தமிழகத்திற்காக மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியரின் கனவு விழாவை அமைச்சர், துறை செயலர் மற்றும் அதிகாரிகள் புறக்கணித்தது வேதனையிலும் வேதனையானது. பல மாதங்களாக வீரர், வீராங்கனைகளை தயார் செய்து போட்டிகளை நடத்தியுள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தங்கள் சொந்த மாணவ, மாணவியரின் விழாவை அமைச்சரும், அதிகாரிகளும் புறக்கணித்தது இல்லை. வீரர்களுக்கு உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து ஏற்பாடு என, அனைத்திலும் அதிகாரிகள் கைவிட்டு விட்டனர். இவ்வாறு சங்கரபெருமாள் கூறினார்.

நன்றி:. தினமலர்,எச்.ஷேக்மைதீன் -வந்தா வருமானமும் இல்லை, குத்தாட்டமும் இல்லை.. அப்புறம் எப்புடி...
குத்தாட்டம் இருந்தா முதல்வரே வந்திருப்பார்..

2 comments:

 1. ""போட்டிக்கு வந்த மாணவர்களை, பள்ளி வகுப்பறைகள்ல தங்க வைச்சுட்டா ஓய்...'' என, அடுத்த விவகாரத்திற்கு மாறினார் குப்பண்ணா.

  ""விவரமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

  ""பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள், கடந்த மூணு நாளா சென்னையில நடந்தது ஓய்... பள்ளிக் கல்வித்துறை ஏற்பாட்டுல நடந்த இந்த போட்டியில, 1,200 மாணவ, மாணவியர் கலந்துண்டு விளையாடினா... இவாளுக்கெல்லாம் முறையா எந்தவித வசதியையும் பண்ணித் தரலை...

  ""குறிப்பா, நல்ல இடத்துல கூட தங்க வைக்கலை ஓய்... நேரு ஸ்டேடியத்தைச் சுத்தி இருந்த பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்ல தங்க வைச்சிருக்கா... வகுப்பறைகளையே, "பெட்ரூம்' மாதிரி மாத்தி, அரை, குறையா ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கா... போட்டிக்கு வந்தவா எல்லாம் புலம்பிண்டே சொந்த ஊருக்கு திரும்பியிருக்கா...''

  ReplyDelete
 2. அன்புள்ள மாணவ மணிகளே இந்த இத்து போன படிக்காத முட்டாள் அமைச்சர்கள், ஊழல் பெருச்சாளிகள் வரவில்லை என்பதற்காக வருதபடாமல் சந்தோசபடுங்கள், நீங்கள் அவர்களைவிட அறிவாளிகள் மற்றும் திறமைசாலிகள்........... .வாழ்த்துக்கள்.....

  ReplyDelete

Infolinks

ShareThis