இனி எஸ்.எம்.எஸ்.சில் (SMS)  மருந்துகளின் நம்பகத்தன்மை                                                                உயிர்காக்கும் மருந்துகளின்  நம்பகத்தன்மை குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள்  மூலம் அறிந்துகொள்வதற்கான வசதியை பார்மாசெக்யூர் நிறுவனம்   அறிமுகப்படுத்தி உள்ளது.சமீபத்தில், தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக  10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கோடி ரூபாய்  மதிப்பிற்கும் மேலான போலி மருந்துகள் கைப்பற்றதோடு மட்டுமல்லாது,  சென்னையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த குடவுனிற்கும் போலீசார்  சீல்வைத்தனர். இதுவரை, மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்த மருந்துகள்  போலியானவை என்ற தகவல் தெரிந்தபின், மக்கள் பேரதிர்ச்சிககு உள்ளாயினர்.                இதன்பிறகும், மக்களால் எது உண்மை? எது போலி என்பது குறித்த விபரங்கள்  இதுவரை தெரியாதவண்ணமே உள்ளது. இந்நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை  கண்காணித்து, அவர்கள் போலி மருந்துகளை விற்பனை செய்கி்ன்றனரா? காலாவ...