சிகிச்சைக்கு பிறகு கலைஞரை மறைமுகமாக தாக்கி பேசிய சூப்பர் ஸ்டார். சிகிச்சைக்கு பின்பு நினைவுத் திறமையை இழந்தாலும் நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார் . சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் , அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார் . தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து , தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும் , உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என , முடிவு செய்து , தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார் . அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா , " உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் ' என்றார் . அத்துடன் ரஜினி குணமடைந்து , விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார் . அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் , " நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது ' என , ஜெயலலிதாவிடம் கூறினார் . வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு , இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்...