chitika-top

Thursday, June 16, 2011

நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.

சிகிச்சைக்கு பிறகு கலைஞரை மறைமுகமாக தாக்கி பேசிய சூப்பர் ஸ்டார்.சிகிச்சைக்கு பின்பு நினைவுத் திறமையை இழந்தாலும் நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார்.


இவர் சொல்வதை பார்த்தால் தமிழகம் ஏதோ கொள்ளைக்காரர்களிடம் இருந்தது போலவும் அதை ஜெயலலிதா அவர்கள் காப்பாற்ற வந்துள்ளது போலவும் தெரிகிறது. இவரது கூற்றுப்படி முந்தைய அரசு கொள்ளை கூட்டமாக இருந்ததை அப்படியே ஒத்து கொண்டாலும் , அந்த கொள்ளை கூட்டத்தலைவரின் கூப்பிட்ட குரலுக்கு ஒடியாடிய இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது.( இதே நடிகர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழகத்தை ஆண்டவானால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறியதாக எனக்கு ஞாபகம்.)

அவரது பேச்சை கேட்டு நடக்கவும் ,ஏன் உயிரையும் விட தயாராக இருக்கும் தமிழக ரசிகர்களிடம் தேர்தல் நேரத்தில் தமிழகம் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது அதை மீட்க வேண்டுமானால் ஜெயலலிதா அவர்களுக்கு ஒட்டு போடுமாறு வாய்ஸ் கொடுத்து இருக்கலாம் அல்லவா? அப்போது அதை செய்யாமல் இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது ?

இதையெல்லாம்
நடந்த சிகிச்சையால் மறந்து விட்டாரா அல்லது அரசியல் வாதிகள் போல இவரும் தமிழக மக்களை முட்டாள்களாகத்தான் கருதி கொண்டாரா? அல்லது நமக்கு இன்னும் நன்றாக நடிக்க வருகிறது என்று நடித்து நிறுபவித்து காட்டுகிறாரா?

//
ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்//

தனக்காக உயிரையும் கொடுக்கும் ரசிகன், உண்ணாமலும் உறங்காமலும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவனுக்கு தன் சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டது என்று செய்தி தெரிவிக்காமல் ஜெயலலிதாவிடம் தான் முதலில் பேச வேண்டும் என முடிவு செய்து, தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். இவர் அல்லவா நன்றியுள்ள நடிகன்.

அதனால்தான் இவரைப்போல இந்த உலகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு நடிக்கும் சூப்பர் ஸ்டார் யாருமே இவருக்கு இணையாக யாரும் வரமுடியாது என்று எல்லோரும் கருதுகிறார்களா?

நடிப்புக்காக இவர் நன்றாக இருக்க வேண்டும் என்று இவரை வாழ்த்துவோம்


Thanks to: /avargal-unmaigal.blogspot.com

1 comment:

 1. I think the writer's tone is not oriented to the comment of the incident but its completely about accusing Rajnikanth after a long waiting for such opportunity.

  I just want to make sure whether the writer knows anything about TamilNadu politics or atleast about politics in basics. Actually no one in this state politics is as pure as crystal.

  In detail, first of all i would like to keep my point of views about all these happenings. Rajnikanth don't want to interefere in politics as of now, which was clearly said by himself, so he s careful in not misusing his influence of fans for any party wins or defeats. tats why he dint support any party before election. And speaking up to CM now, its about wishing her for huge success and explicitly expressing his wish as a general citizen of India and i think he deserves similar to writer.

  Secondly, The writer is worried about Rajnikanth's switching mind from DMK to ADMK. I just trying to explain the writer(if he could understand), About 85% of seats won by ADMK in this election giving a drastic beat to DMK to not even get its opposition team rights, which means a huge mass of Tamil Nadu people switched from DMK to ADMK. My question is why the writer is blaming Rajnikanth alone and why dont he try balme some others for defeat.

  See, politics is a competition between the parties which measures the amount of Good things done to people by the party. But nowadays Indian politics measures which party is doing less bad things to people or country and that party come to the rule. Tats why ADMK got the power. Its not like ADMK is perfect in all aspects but it is like DMK is very worse compared to ADMK.

  Ranjikanth seconds Kalignar during DMK rule because it is the duty of every citizen to give some respect to CM, even if he dint vote for CM party. That's wat he did. And personally Kalaignar is an awesome leader cum politician the country has. None can beat his talents. Perhaps, Rajnikanth liked Kalaignar personally as i do.

  So think at least to your sixth sense before you post up something about a public issue. Dont become a cause for a wrong citation.

  ReplyDelete

Infolinks

ShareThis