
FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி? by முத்துசிவா (http://www.muthusiva.in) குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல. ஏற்கனவே நா எழுதுன " ப்ரபல பதிவர் ஆவது எப்படி? "ங்குற பதிவ follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும் நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா "காதல் தோல்விகளை குறைப்பது எப்படி ?" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே.......... இதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி? (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே) 1 . முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்கா...