நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா?

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, 

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:


1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?
2. குடிப்பதால், உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா?
4.குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
5.மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி விட்டீர்களா?
6.நீங்கள் குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
7.கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9.குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10. குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
.
.
.
.
.

.

இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், 'ஆம்' என்று, நீங்கள் பதிலளித்தால், 

            நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். 

இரண்டு கேள்விக்கு, 'ஆம்' என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.


மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, 'ஆம்' என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.


இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.

புத்தகம் ஒன்றில் படித்தது.

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography