இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கான போட்டி பாதுகாப்பு நடைமுறை
உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் தொடர்களில், இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கான போட்டி நாளை சென்னை சேப்பாககம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், நடைமுறைப்படுத்துப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. நாளை நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதாகவும் அறியப்படுகிறது.