Posts

விலைவாசி

விலைவாசி குறித்த  எழுத்தாளர் விசா. சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ஆற்காட்டார் ஒரு அறிக்கை விட்டார் அதில் "எல்லோரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரிடமும் பணம் இருக்கிறது. அதனால் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. விலை வாசி உயர்ந்தால் என்ன? விலை வாசி உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை". இப்படி ஒரு பாமரத்தனமான அறிக்கையை நான் ஒரு தமிழக அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.ஆனால் தமிழக மக்களுக்கு இது தான் தரமான அறிக்கை. காரணம் அவர்களுக்கு எட்டியது அவ்வளவு தான். எழுத்தாளர்களை விட சினிமா ஹீரோக்களை அதிகம் நேசிக்கும் நம்மை போன்றவர்கள் வாழும் ஒரு தேசத்தில் தான் ஒரு அமைச்சர் இவ்வாறான ஒரு அறிக்கையை விட்டும் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும். நான் ஜெர்மனியில் வேலை பார்த்த போது என்னுடைய சம்பளம் 2600 ஈரோக்கள். எல்லா வரி பிடித்தங்களும் போக. நான் நண்பர்களோடு சமைத்து சாப்பிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் கறியோ மீனோ சமைப்போம்.எந்த வித தடைகளும் இன்றி விரும்பியதை வாங்கி சமைத்து உண்டு வந்தோம். அப்படி ஆடம்பரமாக உணவுக்கு செலவு செய்த போதும் எங்களின் ஒரு மாத உண...

2 கோடி ரூபாய் தோட்டா தரணி தொப்பி

Image
காதில் வந்து விழுந்த செய்தி ஒன்று இருக்கு புதிய சட்டமன்றம் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு செலவு மட்டும் 24 கோடியாம். நம்பும்படியாக இல்லை ஆனால் அபப்டி இருந்தால் சட்டசபை கட்டிட செலவில் 10% இந்த செலவு. நம்ம பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். தொப்பி போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் 2கோடி ரூபாய் செலவில் நமக்கு எல்லாம் சேர்ந்த்து தோட்டா தரணி மூலம் பெரிய தொப்பியாக போட்டிருக்கிறார்கள். நம்ம தொகுதி எம்.எல்.ஏ தண்ணி வரலை, லைட் வரலை என்றால் இவ்வளவு செலவு செய்வாங்களா ?

போதுமானதை மட்டுமே

Image
கதை -1 ஒரு ஊருக்கு ஒரு சாமியார் (நித்தியானந்தர் மாதிரி அல்ல ) விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார், சாமியாரின் வருகை முற்கூட்டியே அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் சாமியாரின் போதனைகளை கேட்ப்பதற்கு ஆயத்தமாக இருந்தனர்.குறித்த நாளும் வந்தது , சாமியார் தனது சீடர்கள் சூழ அந்த ஊரை அடைந்தபோது அடைமழை பெய்துகொண்டிருந்தது. வெள்ளம் வழிந்தோடியது, ஒரே ஒருவனை தவிர வேறு யாரும் சாமியாரின் போதனைகளை கேட்க குறிப்பிட்ட இடத்தில் இருக்கவில்லை, இது சாமியாருக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பி செல்லலாம் என்று நினைத்த சாமியார் அந்த ஒருவனை பார்த்து " இங்கு கடும் மழை பெய்வதால் யாரும் வரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் இன்னும் ஒருநாள் பிரசங்கத்தை வைத்து கொள்கிறேன் " என்றார். அதற்கு அவன் " சுவாமி நான் ஒரு குதிரை வியாபாரி என்னிடம் உள்ள குதிரைகளில் ஒன்றைதவிர மிகுதி அனைத்தும் மேய சென்றாலும் நான் அந்த ஒரு குதிரைக்கு உணவளிப்பேன் " என்றான். சாமியாருக்கு தூக்கு வாரிப்போட்டது. "சரி உனக்கு மட்டும் என்றாலும் நான் உபதேசம் செய்கின்றேன்" என்று கூறி பிரசங்கத்தை ஆர...

மாணவர்களுக்கான இணையதளங்கள் -14

Image
Top 14 web sites for students பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான பதின் நான்கு இணைய தளங்களை,மைக்ரோசொப்ட் நிறுவனம் சிபார்சு செய்துள்ளது,இதில், கணிதம்,விஞ்ஞானம் உட்பட மாணவர்களுக்குத் தேவையான சகலதையும் உள்வாங்கப் பட்டுள்ளது.ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரைப் படிப்பவர்களுக்கு,நல்லதரமுள்ள,பிரயோசனமான இணைய தளங்கள்.உங்கள் எதிர்காலத்தின் விடிவெள்ளிகளுக்கு,ஏற்ற இணைய தளம்.பார்த்துப் பரிசளியுங்கள்,படித்துப் பயன் அடையட்டும்.கீழ் உள்ள உள்ள தலையங்கங்களை  அழுத்தியும் உள் நுழையலாம். Information Literacy ipl2 Refdesk Fact Monster Microsoft Download Center Microsoft Student Experience FreeTranslation Project Gutenberg Internet History Sourcebook Project Novelguide.com Shakespeare Online Math.com Science Made Simple HowStuffWorks If you want to a see a blank look on students’ faces, ask them about the Dewey Decimal library classification system. For better or for worse, the Internet has become the alternative to a library card catalog for browsing and locating resources. But how do you n...

நாளைய குடியரசுத் தலைவர்!

Image
நாளைய குடியரசுத் தலைவர்! March 15, 2010 டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது. மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?” ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார். “நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்!” சுற்றியிருப்பவர்கள் திடுக்கிட, கலாம் புன்னகைத்தார். அம்மாணவனின் வித்தியாசமான விருப்பத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டார். ஆசையே அழிவுக்கு காரணம் என்று புத்தர் சொன்னார். ஆசைப்படுவதுதான் படுகிறாய், ஸ்ரீகாந்தைப் போல மிகப்பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படு. சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதுதான் குற்றம் என்பது கலாமின் தத்துவம். “உங்களுடைய கனவு ஒருநாள் நன...

டெபுடி கலெக்டர் முத்துமாரி

Image
இந்த வார விகடனில் அந்த கட்டுரை... புழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்! முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக்கும் கரிசல் மண் பெண்! வாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை! ''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் ...

படி.. அல்லது பன்னி மேய்

1) “ செய் ... அல்லது செத்துமடி ... ” ---- நேதாஜி .. “ படி .. அல்லது பன்னி மே ய் ... ” --- எங்க பிதாஜி .... 2) ஆசிரியர் : எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள் ... மாணவர்கள் : புரியல சார் ... 3) போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ? டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார் ... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன் . 4) மகன் : அப்பா ! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே ... இப்ப பாரு ... அவ 470 மார்க் ... நான் 480... மார்க் . அப்பா : சனியனே ... அவ பத்தாவது படிக்கிறா .... நீ +2 படிக்கிரடா 5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள் . மனைவி : நான் ரொம்ப அழகு ... இது என்ன காலம் ? (Tense) கணவன் : அது ஒரு இறந்த காலம் .... 6) தேர்வு அறையில் ... மாணவன் : ஆல் தி பெஸ்ட் ! மாணவி : ஆல் தி பெஸ்ட் ! மாணவன் பெயில் .... மாணவி 80% நீதி : நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும் .... ( ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க ....) 7) லவ் லட்டருக்கு...