Tuesday, February 15, 2011

2G Scam - முதன்முதலில் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர்.

‘ஆ.ராசாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?’’ PDF அச்சிடுக மின்-அஞ்சல்



இத்தனை பெரிய ஊழலை இதுவரையில் இந்தியா சந்தித்ததில்லை’ என்று சொல்லும் அளவுக்கு, இந்திய அரசியலில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்.


ஊடகங்கள், எதிர்க்கட்சிகளின் பெரும் போராட்டத்-துக்குப் பிறகு ஒருவழியாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலகிவிட்டாலும், ‘‘இந்த ஊழல் பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு விட வேண்டும்...’’ என்று கோரி, தொடர்ந்து நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்து கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் சில அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே புகைந்து கொண்டிருந்த இந்த ஊழல் விவகாரத்தை, நாட்டுக்கு முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது, பயோனியர் பத்திரிகை கட்டுரைகள்தான். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாற்பதைத் தொட்ட நிருபர் கோபிகிருஷ்ணன் என்பவர்தான், அமுங்கிக் கிடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மீது முதன்முதலில் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர்.

அவருடைய இந்த அரும்பெரும் முயற்சிக்குப் பலனாக உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், எளிமையின் உறைவிடமாக இருக்கும் கோபிகிருஷ்ணன், அடக்கத்தையே பதிலாக்கி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இத்தனை பெரிய விஷயம் அவரால் எப்படி முடிந்தது? வாழ்த்துச் சொல்லி அவரைத் தொடர்பு கொண்டோம். கர்வம் இல்லாமல் பேசினார்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தீர்கள்?

முதலில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். நான் பயோனியர் பத்திரிகையின் கொச்சி பதிப்பில் 2007- ஆம் ஆண்டு வரையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பதிப்பை மூடிவிட்டார்கள்.

அடுத்து என்ன... என்பது குறித்து கவலை ஏற்பட்டுவிட்டது. டெல்லி தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆசிரியர் சந்தன் மித்ராவையும் செய்தி ஆசிரியர் நவீன் உபாத்தியாயாவையும் சந்தித்தேன். ‘டெல்லியிலேயே சிறப்பு நிருபராக இருந்து பணியாற்றுங்க../Issues/02122010/ளேன்...’ என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். டெல்லிக்கு நான் புதுசுதான். இருந்தாலும், எதையாவது துருதுருப்பாக செய்ய வேண்டும் என்கிற குறுகுறுப்பு மட்டும் என் எண்ணத்தில் ஓடிக் கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒரு செய்தி படித்தேன். தொலைத் தொடர்புத் துறை மூலமாக 1600 கோடி ரூபாய்க்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றிருக்கும் ஸ்வான் கம்பெனி தன்னுடைய 40 சதவீத பங்குகளை 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கும் தகவலும், யுனிடெக் நிறுவனம் தன்னுடைய 60 சதவீத பங்குகளை 6200 கோடி ரூபாய்க்கு விற்ற தகவலும் அறிந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

டெண்டர் முறையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யவில்லை என்கிறபோது, இத்தனை பெரிய விலைக்கு அதனை விற்றதில் ஏதேனும் முறைகேடு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

இதுபற்றி ஆசிரியரிடமும் செய்தி ஆசிரியரிடமும் சொன்னேன். ‘கண்டிப்பாக ஊழல் நடந்திருக்க வேண்டும்...’ என்று சொல்லி என் சந்தேகத்திற்கு உரமூட்டினார்கள். இதுகுறித்து விசாரிக்கச் சொன்னார்கள். அந்த அடிப்படையில்தான் விசா-ரணையில் இறங்கினேன்.

பிரதமர் அலுவலகத்தில் பணி-யாற்றும் அரசு அதிகாரி ஒருவரின் தொடர்பு அந்த நேரத்தில்தான் கிடைத்தது. ‘‘2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்-கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ரொம்பவே கவலையடைந்திருக்கிறார். ‘ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் துறையில் என்னதான் நடக்கிறது?’ என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை அழைத்து பிரதமர் கடிந்து கொள்கிறார்...’’ என்றெல்லாம் தகவல் சொன்னார். ஆக, நான் சந்தேகப்பட்டது சரியாய் போக, தீவிரமாக களம் இறங்கினேன்.

ராசா தன்னுடைய பினாமி நிறு-வனங்கள் மூலமாக பங்கு பரிவர்த்தனைகளை செய்து தவறிழைத்திருக்கும் விவரங்களைக் கண்டறிந்தேன். இதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் ராசாவோடு கைகோத்துக் கொண்டு செயல்பட்டிருப்பதையும் கண்டறிந்தேன். இதையெல்லாம் வைத்துத்தான், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்-திருப்பதாக முதன்முதலில் எங்கள் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டோம்.

அப்புறம் என்ன நடந்தது?

ஆ.ராசா ரியாக்ட் செய்ய ஆரம்பித்தார். இதை-யடுத்து, அவர் தரப்பு விளக்கத்தை அறிந்து வருமாறு ஆசிரியர் என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்காக அமைச்சராக இருந்த ராசாவை சந்தித்தேன். அவர் கொஞ்சம் பதட்டமாகவே என்னை எதிர்-கொண்டார். ‘கட்சியில் எனக்கு எதிராக இருந்து செயல்படுபவர்கள்தான் உங்களுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னவர், ‘முதல்ல நீங்க ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி எழுதுவதை நிறுத்துங்க...’ என்றார். கூடவே, ‘என்னுடைய தனிப்பட்ட சொத்துக்கள் குறித்த தகவல்களையெல்லாம் உங்களுக்குக் கொடுத்தவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் அவர் கேட்ட எதற்கும் பதில் சொல்லவில்லை. அவருடைய பதிலை மட்டும் பெற்று திரும்பிவிட்டேன்.

தொடர்ந்தும் கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது. உங்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்க-வில்லையா?

கடைசி வரையில் என்னை யாரும் மிரட்டவில்லை. ஆனால், அன்பான அழுத்தத்தை நாலா-பக்கமும் கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஊழலுக்கு பின்னால் நின்ற பெரிய பெரிய நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், கட்டுரைகள் எழுதப்-படாமல் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு, பெரிய அளவில் பணம் தருவதாக ஆசை காட்டினார்கள்... ஆனால், எதற்கும் நான் மசியவில்லை.’’

எவ்வளவு தொகை கொடுப்பதாகச் சொன்னார்கள்?

தொகை எவ்வளவு என்று சொன்னால், தலை சுற்றும். இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் கொடுக்க முன்வந்ததற்கான காரணத்தையும் அவர்களே சொன்னார்கள். ‘விரைவில் 3-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் சூழ்நிலையில், நீங்கள் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் என்று தொடர்ந்து எழுதினால், அரசுத் தரப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டு... ஏல முறைக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்கிற முறையை நீக்கிவிடுவார்கள். அதனால்தான் கட்டுரை வரக்கூடாது... என்று விருப்பப்படுகிறோம்’ என்று ஓப்பனாகச் சொல்லியே பேரம் பேசினார்கள்.

கட்டுரைகள் தொடர்ந்து வெளியானது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அரசு தரப்பில் கொள்கையை மாற்றிக் கொண்டு-விட்டார்கள். ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் வந்தது. இது எனக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. என் உழைப்புக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நினைத்து மகிழ்ந்தேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில் பின்பற்றிய முறையைத்தான் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பின்பற்றினேன் என்று சொல்கிறார் ராசா. அப்படியென்றால், அந்த ஆட்சியிலேயே தவறு நடந்திருக்கத்தானே வேண்டும்?

ாசா, 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாகத்தான் செயல்பட்டு தவறிழைத்தார். ‘முந்தைய ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளைத்தான் பின்பற்றினேன்’ என்று சொல்வதெல்லாம், சுத்தப் பொய். கஜானாவைக் கொள்ளையடித்து மாட்டிக் கொண்டதும், ஏதேதோ சாக்குபோக்குச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். பொய் சொல்கிறார். ராசா செய்த தவறுகள் அனைத்தையும் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி தன்னுடைய அறிக்கையில் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அக்டோபர் 2003-ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவாக ஆலோசித்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுத்திருக்கிறார்கள். ‘ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில் தொலைத் தொடர்புத் துறை, நிதியமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சக ஆலோசனையின் படிதான் உரிமம் வழங்க வேண்டும்...’ என்று முடிவெடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எங்கள் அனுமதியில்லாமல் எதுவும் செய்யக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகம் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறைக்கு பல கடிதங்களை எழுதி வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால் ராசா, இதைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. இதெல்லாம் மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அப்போது அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும் அமைச்சரவை வழிகாட்டுதல் பிரகாரம்தான் நடந்திருக்கிறார்கள். ஆனால், ராசா மட்டும்தான் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் எதையும் கேட்காமல் தன்னிச்சையாக நடந்திருக்கிறார். இன்று வசமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். இந்த விவகாரத்தில் ராசாவின் பினாமிகளாக இருந்து செயல்பட்டவர்கள் யார்?

தமிழ்நாட்டில் க்ரீன் ஹவுஸ் புரமோட்டார்ஸ் லிமிடெட், ஈக்குவாஸ் எஸ்டேட்ஸ், சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை. இதில் முதல் இரண்டு நிறுவனங்-களிலும் ராசாவின் மனைவி இயக்குநராக இருந்திருக்கிறார். மற்ற நிறுவனங்களில் ராசாவின் உறவுக்காரர்களும் நண்பர்களும் இயக்குநர்-களாக இருக்கிறார்கள். தமிழ்-நாட்டைக் கடந்தும் ராசாவுக்கு நிறுவனங்கள் உண்டு...

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்-கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் இத்துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் எப்படி நடந்து கொண்டார்?

மொத்த ஊழலையும் மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி-யிருக்கிறது. 2003-2009 ஆம் ஆண்டு வரையில் தொலைத் தொடர்புத் துறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தத் தவறுக்கும் ராசாவும் அவரோடு இணைந்த கார்ப்பரேட் கம்பெனிகள் சிலவும்தான் காரணம் என்று தெள்ளத் தெளிவாக ஆதாரத்தோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் தயாநிதி மாறன் தவறிழைத்திருப்பதாகச் சொல்லவில்லை. இதில் பலரையும் சம்பந்தமே இல்லாமல் இழுத்துவிடுவதன் மூலம், பிரச்னையைத் திசை திருப்பி விடலாம் என்பது ராசாவின் எண்ணம். அதனாலேயே, இந்த விவகாரத்தில் பிரமோத் மகாஜனையும் அருண் ஷோரியையும், தயாநிதி மாறனையும் இழுத்துவிடுகிறார்கள்.

இந்த ஊழலில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு?

ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்ந்த சையத் சலாவுதீனுடைய மகன் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஸ்வான் டெலிகாம் கம்பெனியில், அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் அவருக்கு 380 கோடி ரூபாய்க்கான பங்குகள் இருக்கிறது.

ஊழலால் பயன்பெற்றவர்களெல்லாம்கூட விசாரணைக்கு ஆட்பட வேண்டியவர்கள்தான். இத்தனை பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிய பிறகும்கூட, அமைச்சர் பொறுப்பில் இருந்து ராசா விலக மறுத்து முரண்டு பிடித்தது அசிங்கத்தின் உச்சம். நாகரிகத்தின் பின்னடைவு. இதற்கெல்லாம் யாருடைய ஆதரவு இருந்திருக்கும் என்பதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா? தவிர, டெல்லியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் பலரும், ஊழலுக்கு ஆதரவாக கடைசி வரையில் நின்றவர்கள்தான். ஆக, அவர்களுக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயோனியர் பத்திரிகையின் ஆசிரியர் சந்தன் மித்ரா, பி.ஜே.பி.யின் எம்.பி.யாக இருப்பவர். அதனாலேயே அவர் உங்கள் மூலம் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இப்படியொரு விவகாரம் கிளப்பப்-பட்டதாகச் சொல்கிறார்களே..? சந்தன் மித்ரா, பி.ஜே.பி.யின் எம்.பி.யாக இருக்கிறார் என்பதற்காக அவருடைய செயல்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூச வேண்டியதில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை நெடிய யோசித்து ஆதாரங்களைத் திரட்டித்தான் கட்டுரை வெளியிடப்பட்டது. ஊழலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ராசா, இப்படியொரு அரசியல் சாயம் பூசப்பார்க்கிறார். மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி, ராசாதான் ஊழல் புரிந்திருக்கிறார் என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னபிறகு, இதில் பி.ஜே.பி. தரப்பு பிரஷர் எங்கிருந்து வருகிறது?

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்துதான் ராசாவை சிக்கலில் ஆழ்த்திவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறதே..?

‘முறைகேடாக உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை எழுப்பினார்கள் புறக்கணிக்கப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். முறையாக ஏல அறிவிப்பு விட்டு, ஏலம் நடத்தப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள். தவறுக்கு காரணமான-வர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேட்டு, புகார்களை அரசுக்கு தொடர்ந்து அனுப்பினார்கள். ஆனாலும், நடவடிக்கை இல்லை. வலுவான அரசியல் புகுந்த பிறகுதான், ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்கு என்ன?

ஆதி முதல் அந்தம் வரையில் பிரதமருக்கு எல்லாமே தெரியும். ஆனாலும் அவரால் ஊழலை தடுக்க முடியவில்லை. காரணம், கூட்டணி ரீதியாக அவருக்கு இருந்த நெருக்கடி. அவரால் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முடியவில்லை. அதனால், எல்லாம் தெரிந்தும் மௌன சாட்சியாக இருந்துவிட்டார். பாவம். அவரால் முடிந்தது அவ்வளவுதான்!

ஒரு அமைச்சரையே நியமிக்கும் அளவுக்கு பவர்ஃபுல்லாக இருந்து செயல்பட்டிருக்கிறார் நீரா ராடியா என்கிற பவர் புரோக்கர் பெண்மணி. அவரும் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல காய்நகர்த்தல்களைச் செய்திருக்கிறாரோ..?

இந்த பவர்ஃபுல் புரோக்கரின் பின்னணியில் ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் நிறுவனங்கள் இருந்து செயல்பட்டிருக்கிறது. அதெல்லாம் டேப் ஆதாரத்துடன் கூடிய உரையாடல்களாக வெளியே வந்திருக்கின்றன. கனிமொழி எம்.பி.யோடும் அமைச்சர் ராசாவோடும் அவர் நெருக்கமான தொடர்பில் இருந்து செயல்பட்டிருக்கிறார். நீரா ராடியா வலிமை மிகுந்த பெண்மணியாக இருந்து செயல்பட்டிருப்பதை பல ஆதாரங்கள் நிரூபித்திருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிப்படையாக நடத்துவதற்கு வழிவகை இருக்கிறதா? இதில் ஊழலை ஒழிக்க முடியுமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் (மிஷிஸிளி) இந்தப் பணியை கொடுத்துவிட வேண்டும். அவர்களுக்குத்தான் விண்வெளியில் ஸ்பெக்ட்ரத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது. அதை யார் யாருக்கு எப்படி கொடுக்கலாம் என்பது குறித்தெல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அவர்கள் செய்தால்தான் இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லாமல் இருக்கும். ஆனால், இதற்கு அரசியல்வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதிகாரம் பறிபோய்விடும் என்கிற அச்சத்திலேயே அதைச் செய்ய விடமாட்டார்கள்’’

-என்று தான் கடந்து வந்த பத்திரிகை உலக மைல் கல் பற்றி விவரித்து முடித்தார் கோபிகிருஷ்ணன். மீண்டும் அவருக்கு வாழ்த்து சொல்லி விடை-பெற்றோம்.


நன்றி savukku./தமிழக அரசியல்

1 comment:

  1. hello sir,
    many of the blogspot have "Email subscription" for get updated news in mailbox.....
    this is useful blogspot so, please you also add that option..it is used to get your news up to date....

    ReplyDelete

Infolinks

ShareThis