நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி! தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது! கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம். இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள். தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தன...
"உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்; உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே!" என்று உழவின் பெருமையையும் மேன்மையையும் திருவள்ளுவப் பேராசான் போற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று உலக மக்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும் உழவுத் தொழிலின் தனிச்சிறப்பை இரு நூல்களின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். கம்பர் என்று கூறினாலே "கம்பராமாயணம்" ஒன்றுதானே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், வேளாளர் மரபைப் போற்றி, பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் அதியற்புதமான இரு நூல்கள்தான்; "ஏர் எழுபது" மற்றும் "திருக்கை வழக்கம்" கம்பர் பாடியதாகக் கருதப்படும் "ஏர் எழுபது", வேளாளர் தம் சிறப்ப...
சலீம் அலி பறவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தே வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் , ஒரு நாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்கையின் போக்கையே மாற்ற ,அதன் பின் பறவைகளைக் கொன்று வேட்டையாடி வந்த அவர் அந்தப் பறவை இனத்திற்காகவே தன் சொந்த வாழ்வை சமர்ப்பித்து கொண்டார் .. உலகில் பறவைகள் என்ற பேச்செடுக்கும்போது எல்லாம் இந்தியாவின் பெயரை தூக்கி நிறுத்தி, மேல் நாட்டுக்காரர்களையும் தலை நிமர்ந்து , வியந்து பார்க்கவைத்தார் அவர் .. பெரிய பெரிய படிப்புகளையெல்லாம் பெரிய பெரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ , ஹார்வேர்டு பல்கலைகழகத்திலோ இதுபோல உலகப் புகழ் பெற்ற எந்த பல்கலைகழகத்திலும் சென்று படிக்காத அவர் பறவைகளைப் பற்றிய அறிவியல் துறையில் உலகம் போற்றும் மேதாவிகளாகத் திகழ்ந்தார். இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் . மேலும் :- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%...
Politics was the best..
ReplyDelete