chitika-top

Thursday, May 27, 2010

மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள்

 மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள் அம்பலமாகுமா?


மங்களூர் விமான விபத்து நடந்து முடிந்து விட்டது, காரணம் யார் என்ற கேள்வி பலமாக எழுகிறது. முதல் நாள் அன்று எனக்கு தொழில்நுட்ப விசயங்கள் எதுவும் தெரியாது, அதனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சம்பந்தமான கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் படேல் தெளிவாக, பைலட் மீது தவறு என்ற தொனியில் மழை பெய்யவில்லை, அந்த பகுதியில் கால நிலவரம் நன்றாகத்தான் இருந்தது என்று கூறி தனது தரப்பில் தப்பி விட்டார். இந்திய விமான நிர்வாகமும் படேலில் பாட்டிற்கு ஜால்ரா போட்டு விட்டது. ஆனால் அமெரிக்க செய்தி நிறுவனம் அங்கு தூரல் பெய்து இருந்ததையும், ரன்வே சாரலில் நனைந்து பிசகு தன்மை கொண்டு இருந்ததாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது. நாம் 2006 ஆம் ஆண்டிற்கு செல்வோம், அதாவ‌து புதிய‌ விமான‌ ஓடுத‌ள‌ம் க‌ட்டி கொண்டு இருந்த‌ கால‌ம். தெற்கு நோக்கிய‌ ப‌குதியில் நீண்ட‌தூர‌ம் அகன்ற‌ பிர‌தேச‌ம் ம‌ற்ற‌ இட‌ங்க‌ளும் அப்ப‌டித்தான். ஆனால் நிர்வாக‌ம் அவ‌ச‌ர‌ கால‌த்திற்கு விமான‌த்தை திருப்ப‌வோ அல்ல‌து மேலெழுப்ப‌வோ முடியாத‌ நிலையில் உள்ள‌ த‌ற்போதைய (விப‌த்திற்கு உள்ளான‌) பாதையை ஏன் தெர்ந்தெடுக்க‌ வேண்டும்.Image ம‌ங்க‌ளூர் அமைதியும் குளுமையும் க‌ல‌ந்த‌ ஒரு சிறு க‌ர்நாட‌க‌ ந‌க‌ர‌ம். டிராக்ட‌ர்? ஹாலிடே நிறுவ‌ன‌ம், ஏற்க‌ன‌வே ப‌ல‌ கோடிக‌ளை கொட்டி 200 ஏக்க‌ருக்கும் மேல் இட‌ம் வாங்கி போட்டிருக்கிற‌து. அம்பானி ச‌கோத‌ர‌ர்க‌ளின் ஆப்ஸ்ரேர்ஸ் ம‌ரைன் புர‌ஜெக்ட் ஒன்றும் இங்கு ந‌ட‌க்க‌ இருக்கிற‌து. இப்போது புரிந்திருக்கும் விமான‌ ஓடுத‌ள‌ம் வ‌ச‌தியில்லாத‌ ப‌குதியில் க‌ட்டிய‌த‌ற்கான‌ கார‌ண‌ம். விமான‌ ஓடுத‌ள‌ம் எதிர்கால‌த்தில் விப‌த்தை உண்டாக்கும் என்று ம‌ங்க‌ளூரை சேர்ந்த‌ ஆர்த‌ர் பெரேரா ச‌மூக‌ சேவையாள‌ர் க‌ர்நாட‌க‌ நீதிம‌ன்ற‌த்தை அணுகினார். இவ‌ர‌து முறையீட்டை க‌ர்நாட‌க‌ நீதிம‌ன்ற‌ம் நிர‌க‌ரிக்க‌, உச்ச‌நீதி ம‌ன்ற‌ம் சென்றார். அங்கு பொதுப்ப‌ணிக்கு குந்த‌க‌ம் விளைவிக்கிறார் என்று ஏன் இவர்மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கூடாது என்று நோட்டீஸ் விட்ட‌து. என்ன‌ செய்ய‌? உச்ச‌ நீதி ம‌ன்ற‌மே இப்ப‌டி சொன்ன‌ பிற‌கு அந்த சமூக சேவையாளரும் அமைதியாகிவிட்டார்.Image இன்று விப‌த்தும் ந‌ட‌ந்து விட்ட‌து. யார் யார் கார‌ண‌ம் என்று ப‌ட்டிய‌லிட்டால், வ‌ச‌தியான‌ இட‌த்தில் விமான‌ ஓடுத‌ள‌ம் அமைக்காம‌ல் சிக்க‌லான‌ இட‌த்தில் அமைக்க‌ உத்த‌ர‌விட்ட‌ அமைச்ச‌ர்க‌ள், அத‌ற்கு ஆவ‌ன‌ செய்து கொடுத்த‌ அதிகாரிக‌ள், பெரேராவின் ம‌னுவை தீர‌ விசாரிக்காம‌ல் நிர‌க‌ரித்த‌ உய‌ர் ம‌ற்றும் உச்ச‌நீதி ம‌ன்ற‌ங்க‌ள் என அடுக்கிக்கொண்டே போகலாம். பிளாக் பாக்ஸை தேடுவ‌த‌ற்கு எப்ப‌டி இத்த‌னை நாட்கள் பிடித்த‌து, பிளாக் பாக்ஸ் முத‌ல் நாளே கொண்டுசெல்லப்ப‌ட்டு விட்ட‌து என்றும் முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் எல்லாம் அழிக்க‌ப‌ட்டு வேறும் ட‌ப்பா மாத்திர‌மே மீண்டும் கொண்டு வ‌ந்து போட்டு விட்டு இதோ கிடைத்து விட்ட‌து என்று உடான்ஸ் விடுகிறார்க‌ள். இறுதி நேர‌த்தில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று விமான‌ ஓட்டுன‌ருக்கும் (அவ‌ர் தான் இல்லை) க‌ட்டுப்பாடு அறைக்குள் இருப்ப‌வ‌ருக்கு ம‌ட்டுமே தெரியும். ஆனால் க‌ட்டுப்பாடு எல்லாம் ஊழ‌ல் அர‌சிய‌ல்வாதிக‌ளின் க‌ர‌ங்க‌ளில் அல்ல‌வா இருக்கிறது. விமானி மீது ப‌ழி போட்டு விட்டு மீண்டுமொரு விமான‌ விபத்திற்கு த‌யாராகிவ‌ருகின்ற‌ன‌ர் நம் தேசத்து அரசியல் தலைகள். இதில் பாவப்பட்டவர்கள் அப்பாவி விமானப்பயணிகளும், விமானத்தில் பணிபுரிபவர்களும்தான்.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis