Thursday, May 13, 2010

King of Chess

ஆனந்த் - King of Chess


மற்ற விளையாட்டுகளை , கிரிக்கெட் என்ற நாசமாய்ப் போன சூதாட்டம் நாசப்படுத்திய ஒரு தேசத்தில் நிஜமான விளையாட்டு வீரர்கள் கவனிக்கப் படுவதே இல்லை. ஒரு சிலர் கவனிக்கப் பட்டாலும் பணமே குறிக்கோளாய் திசைமாறிவிடுவதும் உண்டு என்றாலும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரர்களும் உண்டு.. விஸ்வநாதன் ஆனந்த், செய்னா நோவல் , பைசுங் பூட்டியா மற்றும் பலர்..

விஸ்வநாதன் ஆனந்த்...
சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..

 ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் :
  • 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.(1983 - 84)
  • 1984ல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்.
  • 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்.
  • 1987 சர்வதேச கிராண்ட் மாஸ்டரானார்.
  • 1998ல் உலகத் தரவரிசைப் பட்டியலில் 2வது இடம்.
  • 2000ல் முதல் உலக் சாம்பியன் பட்டம்.
  • 6 கம்ப்யூட்டர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடி 4 க்கு 2 என்ற அளவில் வென்றார்.
  • 3 முறை செஸ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
  • இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை முதலில் பெற்றவர்.
  • அர்ஜுனா, பத்மஸ்ரீ( மிக இளம் வயதில் பெற்றவர்), பத்ம பூஷன், ஸ்போர்ட் ஸ்டாரின் “ 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஆனந்தின் ”My best games of Chess" என்ற புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப் பட்டது.
  • உலக சாம்பியன் பட்டம்- 2000, 2007, 2008, 2010
  • கோரஸ் சூப்பர் கிராண்ட்மாஸ்டர் டோர்னமண்ட் - 1989, 1998, 2003, 2004, 2006)
  • கோர்சிகா மாஸ்டர்ஸ் - 2000, 2001, 2002, 2003, 2004
  • செஸ் உலக்க் கோப்பை - 2000, 2002
  • இன்னும் ஏராளமான போட்டிகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்..
மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆனந்த்.. இந்தியா உங்களால் பெருமை அடைகிறது.. தமிழனாய் கூடுதலாகவும்..








Thanks - SanjaiGandhi

No comments:

Post a Comment

Infolinks

ShareThis