40 ரூபாய்க்கு வாங்க முடியும் ஒரு விசில் வி‌லை ரூ. 450

இது ஊழல் தேசம் -- இன்று ஒரு புதிய ஊழல் - தேசிய விளையாட்டு போட்டியில் எத்தனை கோடி ? 


ஊழல் அதிகம் வெளிவந்த ஆண்டாக 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் போல அந்த அளவிற்கு நாளொரு மேனியாக புதுப்புது ஊழல் ரிலீசாகிறது. இது போன்ற தலைக்குனிவு தரும் ஊழல் விவகாரத்தினால் இந்தியா உலக அளவில் சாம்பியன் பட்டம் பெறும் போது , ரசிகர்கள் மற்றும் இந்திய பிரஜைகளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி கானல் நீராக போய்விடும் இத்துடன் விளையாட்டு ஆர்வத்தை தூக்கி நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

லட்சம் கோடிக்ணக்கில் ஓர் ஸ்பெக்ட்ரம், இதற்கு அருகாமையில் ஓர் காமன்வெல்த் ஊழல், வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியாமல் தவிக்கும் இஸ்ரோ எஸ் பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் , இன்று வெளிவந்திருக்கும் தேசிய விளையாட்டு.

ஜார்கண்ட் தலைநகரில் 34 வது தேசிய விளையாட்டு போட்டி துவங்கியுள்ளது. இந்த போட்டி ஏற்பாட்டு குழுவினர் பல முறைகேடுகள் செய்திருப்பதாக மத்திய தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் கேட்டரிங் கான்ட்ராக்ட் கசால் கேட்டர்ஸ் என்ற கம்பெனிக்கு சமைக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2. 8 கோடி இழப்பீடு இருப்பதாக தெரிய வருகிறது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி விஸ்ரா நிறுவனம் ஏற்கனவே 1. 78 கோடியை தவறான கணக்கு காட்டி விழுங்கி விட்டனர். டிராவல் ஏஜென்ஸி நடத்தும் கம்பெனிக்கு 3. 47 கோடி கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.இப்படி பல கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஒரு விசில் வி‌லை ரூ. 450 : எடுத்துக்காட்டாக ஊதல் (விசில் ) ஒன்று 40 ரூபாய்க்கு வாங்க முடியும் ஆனால் ரூ. 450 ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது. இதிலும் பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எது ., எப்படியோ., தேசிய விளையாட்டு போட்டி ஒருங்கிணப்பாளர் ஆர். கே., ஆனந்த் சி.பி.,ஐ., வலைக்குள் வந்து விழுகிறார் அவ்வளவுதான்.,

Source: dinamalar.

Comments

  1. செத்த போன பிணத்தை குட தோண்டி நேத்யில் இருக்கும் ரூபாயை கூட விட்டு வைக்க மாட்டார்கள்...............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography