கம்பீரமானது மதுரை போலீஸ்: நிமிர்த்தினார் கமிஷனர் கண்ணப்பன் தேர்தலில் எந்த நேரமும் வன்முறை ஏற்படலாம் என அச்சத்துடனும், பதட்டத்துடனும் அனைத்து தரப்பினரும் பார்த்த மதுரை நகரில், ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்காமல், போலீசார், தங்கள் சீருடை காலரை தூக்கி கொள்ளும் வகையில், பணிபுரிந்து, எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்கினர். இதற்கு மூலகாரணமாக இருந்தவர், தேர்தல் கமிஷனால் தேடி நியமிக்கப்பட்ட கமிஷனர் பி.கண்ணப்பன். கடந்த, 23 ஆண்டுகளாக போலீஸ் துறையில் இருக்கும் இவர், இதுவரை தன் பணிக்காலத்தை அதிகம் செலவிட்டது தென்மாவட்டங்களில் தான். டி.எஸ்.பி., யாக செஞ்சி, அறந்தாங்கியில் இருந்துவிட்டு, கமுதிக்கு வந்தவர், பதவி உயர்வு பெற்று சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை எஸ்.பி., என, தென்மாவட்டங்களில் ஒரு, "ரவுண்ட்' வந்தார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில், 16 பேர் பலியாயினர். சம்பவத்திற்கு பிறகு, அங்கு பதட்டம் தணிக்க, அந்நகர போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் எஸ்.பி.,யாக இருந்த கண்ணப்பன், கோவை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டது, இவருக்கு கிடைத்...