nano

வீட்டுக்கு ஒரு "நானோ' கார் இலவசம் சேலம் சுயேச்சை வேட்பாளர் அதிரடி





சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல், அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். உரல் கல் மற்றும் அம்மி குழவி கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ரவுடியிசத்தை ஒழித்து, சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என்பது உள்ளிட்ட, 22 அம்சங்களை, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography