இன்றைய உலக பொருளாதார நிலை
இன்றைய உலக பொருளாதார நிலை கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன. ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது. ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது. அமெரிக்காவின் பொர...